• வேலூர் மாவட்ட சிறப்புக் கூட்டம்

  வங்கியில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கான குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி.

  img-20160927-wa0037img-20160927-wa0042

                 அகில இந்திய BSNL – DOT ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட சிறப்புக் கூட்டம் இன்று 27.09.2016 அன்று வேலூரில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

     “வங்கியில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கான குறிப்பேட்டின்” முதல் பிரதியை தோழர். V. மணி, DGM RTD அவர்கள் வெளியிட அதனை தோழர். K. சுந்தரம் DE RTD அவர்கள் பெற்றுக்கொண்டார். மாநில அமைப்புச் செயலர் தோழர். C. ஞானசேகரன் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். K. கிருஷ்ணமூர்த்தி, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. தங்கவேல், SNEA மாவட்ட உதவித் தலைவர் தோழர். L. லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

                78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விளக்கியும், அதற்கான கணக்கீடு பற்றியும் மாவட்டச்செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் விளக்கமாக எடுத்துரைத்தார். AIBDPA சாதித்த சாதனைகளையும், 78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவை பெருவதற்காக நடத்திய போராட்டங்களை விளக்கியும் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் பேசினார்.

            200க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்தை தோழர். விக்டர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

        புதிய முயற்சியாக வங்கியில் பென்ஷன் பெருவதை விளக்கி குறிப்பேடு வழங்கிட ஏற்பாடு செய்த வேலூர் மாவட்டச் சங்கத்தை தமிழ்மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.