• தீபாவளி வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  images

   

 • வங்கி ஓய்வூதியர்களுக்கு அக்டோபர் மாத ஓய்வூதியம் தீபாவளிக்கு முன்பு

  நமது மத்தியச் சங்கம் இம்மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பு வழங்கிடக்கோரி DOT செயலர் திரு.  தீபக்கிடம் கடிதம் கொடுத்தது.

  கீழ்க்கண்ட வங்கிகளில் அதற்கான பணி நடைபெறுகிறது.

  ஐஓபியில் ( IOB) 26-10-2016லும்,

  எஸ்பிஐ(SBI) யில் 26-10-2016லும்,

  இந்தின் வங்கி(INDIAN BANK)யில் 27-10-2016லும், 

  கனரா வங்கி(CANARA)யில் 28-10-2016லும்

  வழங்கிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

  அஞ்சலகங்களுக்கான உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்பது தகவல்.

   

 • AIBDPA சென்னை மாவட்டக்கூட்டம்.

  வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணநிதி வழங்கல்.

  சென்னை மாவட்ட AIBDPA பொதுக்குழுக் கூட்டம் சென்னை மாவட்டத் தலைவர் தோழர்.S.நடராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்றார். தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையாற்றினார். திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள், நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட AIBDPA அமைப்புதினம், மாநிலமாநாடு மற்றும் அதற்கான நிதி, 78.2 சத ஊதியநிலுவையில் அனைத்து மட்டத்திற்கும் ஓய்வூதியர்களிடம் வாங்க வேண்டிய நன்கொடை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எடுத்துரைத்தார். கூட்ட முடிவில் மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம் நன்றி கூறினார்.

             முன்னதாக சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து BSNLEU மற்றும் TNTCWU சார்பில் நடைபெற்ற மாலைநேர தார்ணாவில் கலந்து கொண்ட  தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். மேலும் மாநில நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு AIBDPA சார்பில் ரூபாய் 2000/- நிதி வழங்கப்பட்டது. அதனை CGM அலுவலக BSNLEU மாவட்டச் செயலர் தோழர். அன்புமணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை மாவட்டச் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

  img-20161025-wa0013

 • AIBDPA அமைப்புதினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்

  தமிழகத்தில் AIBDPA அமைப்புதினம் சிறப்பாக கொண்டாட்டம்.

  வேலூரில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  img-20161021-wa0041img-20161021-wa0046

                AlBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட சங்கம் வேலூரில் தோழர் B. ஜோதி தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நண்பகல் போலியோ பயிற்சி மைய பள்ளியில் AlBDPA சார்பில் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

  ஈரோட்டில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  img-20161022-wa0011

  இன்று ஈரோட்டில் AIBDPA சங்க அமைப்பு தினம் ஈரோட்டு G M அலுவலகம் முன்பு சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது. மூத்த தோழர் வேணுகோபால் கொடியேற்றி சிறப்பித்தார். மாவட்ட செயலாளர் தோழர் குப்புசாமி தலைமை வகித்தார் .

  தூத்துக்குடியில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

      AIBDPA அமைப்புதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தோழர். P. ராமர் தலைமையில் மூத்த தோழர். T.K. ஸ்ரீனிவாசன் கொடி ஏற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  நாகர்கோவிலில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  நாகர்கோவிலில் மாவட்டத் தலைவர் தோழர். சாகுல் ஹமீது தலைமையில் தோழர். கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அமைப்புச் செயலர். தோழர். K. காளி பிரசாத், BSNLEU மாவட்டச் செயலர் தோழர். ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.

  கோவையில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  மாவட்டத் தலைவர் தோழர். V. சுப்பிரமணியம் தலைமையில் 20-10-2016 அன்று கோவை மாவட்டச் சங்கம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியதோடு அமைப்பு தினத்தையும் இணைத்து கொண்டாடியது. முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். உமாபதி சங்கக்கொடியினை ஏற்றினார். வரவேற்புரை மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் நிகழ்த்தியதோடு கலந்து கொண்ட  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாநில உதவிச் செயலர் தோழர். K. பங்கஜவல்லி கலந்து கொண்டு சங்கத்தின் சாதனைகளை விளக்கிப்பேசினார்.

  fb_img_1477590958290fb_img_1477591095977fb_img_1477591142304

 • தீபாவளிக்கு முன் அக்டோபர் மாத ஓய்வூதியம் வழங்கிடக் கோரி DOT செயலரிடம் கடிதம்.

  18-10-2016ல் DOT செயலரிடம் அக்டோபர் மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பு வழங்கிடக் கோரி கடிதம் அளிப்பு.

  கடந்த 18-10-2016அன்று சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி DOT செயலர் திரு. J.S. தீபக் அவர்களை சந்தித்து இம்மாத இறுதியில் தீபாவளி வருவதால் அதற்கு முன்பாக அக்டோபர் மாத ஓய்வூதியத்தை ஓய்வூதியர்களுக்கு வழங்கிடக் கோரி நமது பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் கொடுத்த கடிதத்தை அளித்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட செயலர் அதனை வரவேற்றதுடன் அதனை சாதகமாக பரிசீலிப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

          19-10-2016 அன்று அதனை உறுதிபடுத்தும் விதமாக மெம்பர் சர்வீஸ் திரு ஆர். கே. மிஸ்ராவை AIBDPA சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி சந்தித்து கடிதம் கிடைத்ததை உறுதிபடுத்தினார். மேலும் அவர் பரிச்சார்த்த ரீதியாக சாத்தியக்கூறுகளை கவனிப்பதாக உறுதி கூறினார்.

 • AIBDPA அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம் !

  21-10-2016 AIBDPA அமைப்புதினம்.

                DOT மற்றும் BSNL ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பாதுகாக்கவும், புதிய சலுகைகளை போராடி பெறவும் 21-10-2009ல் டெல்லியி்ல் துவக்கப்பட்ட சங்கமே அனைத்திந்திய DOT-BSNL ஓய்வூதியர் சங்கம். 78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவைப் பெற தொடர் போராட்டங்களை தனித்தும், BSLEU மற்றும் FORUM சங்கங்களுடன் இணைந்தும் நடத்தியதன் பலனாக இன்று அதனை ஓய்வூதியர்கள் பெற்று வருகின்றனர். இது போன்று ஓய்வூதியர்களின் நலனை பாதுகாப்பதோடு சமூக கடமையாக மக்கள் பிரச்சனைகளுக்காகவும், BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்வதும் சிறப்பம்சமாகும்.

                        இவ்வாறு அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் நமது AIBDPA சங்கத்தின் அமைப்பு தினமான 21-10-2016ஐ சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடுவீர். சங்கக் கொடிகள் உள்ள இடங்களில் சங்கக்கொடியினை ஏற்றவும், மற்ற இடங்களில் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி சங்கத்தின் சாதனைகளை விளக்குவதோடு எதிர்கால கடமைகளை வலியுறுத்துவதோடு நமக்கு முன்னே உள்ள கடமைகளை விளக்கி கூறவும். மேலும்  இனிப்பு வழங்கி கொண்டாடவும். அனைத்து மாவட்டச் செயலர்களும் உரிய கவனம் செலுத்தி ஏற்பாடுகளைச் செய்யவும் தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • BSNLEU – AIC – மாநாட்டு நன்கொடை

  BSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு – சென்னை – நன்கொடை.

         பிஎஸ்என்எல் ஊழியர்சங்க 8வது அனைத்திந்திய மாநாட்டை சென்னையில் நடத்திட தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடிவு செய்தது. வருகின்ற 2016 டிசம்பர் 31ம் தேதி துவங்கி 2017 ஜனவரி 3ம் தேதி வரை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைவரும் நன்கொடை வழங்கிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

               நமது AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அந்த அடிப்படையில் நமது மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்சங்க 8வது அனைத்திந்திய மாநாட்டு நிதியினை தமது மாவட்டச் சங்க சந்தா புத்தகத்தில் வசூல் செய்ய வேண்டும். வசூல் செய்த நிதியை AIBDPA தமிழ்மாநிலச் சங்க வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  வங்கி கணக்கு எண் :-

  AIBDPA TAMILNADU CIRCLE :- 31557138649

  IFSC CODE :- SBIN0007990

  வங்கிக் கிளை :- பாரத ஸ்டேட் வங்கி,                        சின்மையாநகர் கிளை. சென்னை.

         விரைவில் இப்பணியினை துவங்கி உரிய கால அவகாசத்தில் (நவம்பர் இறுதிக்குள்) நிறைவு செய்து நன்கொடையினை அனுப்பிட வேண்டுகிறோம்.

 • சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாநிலச் செயற்குழு

           

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  AIBDPA தமிழ்மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று 02-10-2016ல் திருச்சி BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் துவங்கியது. தேசியக் கொடியை திருச்சி மாவட்டத் தலைவர் தோழர். P. கிருஷ்ணனும் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர். B. சௌந்திரபாண்டியன் அஞ்சலிஉரை ஆற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். S. நடராஜா வரவேற்புரை ஆற்றினார்.
  மாநிலச் செயற்குழுவை தலைமைஏற்று மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமைஉரை நிகழ்த்தினார். அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் செயற்குழுவை துவக்கிவைத்து 78.2% கடந்து வந்த போராட்டபாதை, இன்றைய அரசியல் சூழல் உள்ளிட்ட விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் அறிக்கையை முன் வைத்து உரையாற்றினா். மாநிலப் பொருளாளர் தோழர். கீதா வரவசெலவு கணக்கை முன்வைத்தார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். தேவராஜ், மாவட்டச் செயலர் தோழர். அஸ்லம் பாட்சா வாழ்த்துரை வழங்கினர்.