• சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாநிலச் செயற்குழு

           

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  AIBDPA தமிழ்மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று 02-10-2016ல் திருச்சி BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் துவங்கியது. தேசியக் கொடியை திருச்சி மாவட்டத் தலைவர் தோழர். P. கிருஷ்ணனும் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர். B. சௌந்திரபாண்டியன் அஞ்சலிஉரை ஆற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். S. நடராஜா வரவேற்புரை ஆற்றினார்.
  மாநிலச் செயற்குழுவை தலைமைஏற்று மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமைஉரை நிகழ்த்தினார். அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் செயற்குழுவை துவக்கிவைத்து 78.2% கடந்து வந்த போராட்டபாதை, இன்றைய அரசியல் சூழல் உள்ளிட்ட விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் அறிக்கையை முன் வைத்து உரையாற்றினா். மாநிலப் பொருளாளர் தோழர். கீதா வரவசெலவு கணக்கை முன்வைத்தார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். தேவராஜ், மாவட்டச் செயலர் தோழர். அஸ்லம் பாட்சா வாழ்த்துரை வழங்கினர்.