• தீபாவளிக்கு முன் அக்டோபர் மாத ஓய்வூதியம் வழங்கிடக் கோரி DOT செயலரிடம் கடிதம்.

    18-10-2016ல் DOT செயலரிடம் அக்டோபர் மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பு வழங்கிடக் கோரி கடிதம் அளிப்பு.

    கடந்த 18-10-2016அன்று சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி DOT செயலர் திரு. J.S. தீபக் அவர்களை சந்தித்து இம்மாத இறுதியில் தீபாவளி வருவதால் அதற்கு முன்பாக அக்டோபர் மாத ஓய்வூதியத்தை ஓய்வூதியர்களுக்கு வழங்கிடக் கோரி நமது பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் கொடுத்த கடிதத்தை அளித்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட செயலர் அதனை வரவேற்றதுடன் அதனை சாதகமாக பரிசீலிப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

            19-10-2016 அன்று அதனை உறுதிபடுத்தும் விதமாக மெம்பர் சர்வீஸ் திரு ஆர். கே. மிஸ்ராவை AIBDPA சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி சந்தித்து கடிதம் கிடைத்ததை உறுதிபடுத்தினார். மேலும் அவர் பரிச்சார்த்த ரீதியாக சாத்தியக்கூறுகளை கவனிப்பதாக உறுதி கூறினார்.