• வங்கி ஓய்வூதியர்களுக்கு அக்டோபர் மாத ஓய்வூதியம் தீபாவளிக்கு முன்பு

  நமது மத்தியச் சங்கம் இம்மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பு வழங்கிடக்கோரி DOT செயலர் திரு.  தீபக்கிடம் கடிதம் கொடுத்தது.

  கீழ்க்கண்ட வங்கிகளில் அதற்கான பணி நடைபெறுகிறது.

  ஐஓபியில் ( IOB) 26-10-2016லும்,

  எஸ்பிஐ(SBI) யில் 26-10-2016லும்,

  இந்தின் வங்கி(INDIAN BANK)யில் 27-10-2016லும், 

  கனரா வங்கி(CANARA)யில் 28-10-2016லும்

  வழங்கிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

  அஞ்சலகங்களுக்கான உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்பது தகவல்.

   

 • AIBDPA சென்னை மாவட்டக்கூட்டம்.

  வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணநிதி வழங்கல்.

  சென்னை மாவட்ட AIBDPA பொதுக்குழுக் கூட்டம் சென்னை மாவட்டத் தலைவர் தோழர்.S.நடராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்றார். தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையாற்றினார். திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள், நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட AIBDPA அமைப்புதினம், மாநிலமாநாடு மற்றும் அதற்கான நிதி, 78.2 சத ஊதியநிலுவையில் அனைத்து மட்டத்திற்கும் ஓய்வூதியர்களிடம் வாங்க வேண்டிய நன்கொடை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எடுத்துரைத்தார். கூட்ட முடிவில் மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம் நன்றி கூறினார்.

             முன்னதாக சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து BSNLEU மற்றும் TNTCWU சார்பில் நடைபெற்ற மாலைநேர தார்ணாவில் கலந்து கொண்ட  தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். மேலும் மாநில நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு AIBDPA சார்பில் ரூபாய் 2000/- நிதி வழங்கப்பட்டது. அதனை CGM அலுவலக BSNLEU மாவட்டச் செயலர் தோழர். அன்புமணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை மாவட்டச் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

  img-20161025-wa0013

 • AIBDPA அமைப்புதினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்

  தமிழகத்தில் AIBDPA அமைப்புதினம் சிறப்பாக கொண்டாட்டம்.

  வேலூரில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  img-20161021-wa0041img-20161021-wa0046

                AlBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட சங்கம் வேலூரில் தோழர் B. ஜோதி தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நண்பகல் போலியோ பயிற்சி மைய பள்ளியில் AlBDPA சார்பில் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

  ஈரோட்டில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  img-20161022-wa0011

  இன்று ஈரோட்டில் AIBDPA சங்க அமைப்பு தினம் ஈரோட்டு G M அலுவலகம் முன்பு சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது. மூத்த தோழர் வேணுகோபால் கொடியேற்றி சிறப்பித்தார். மாவட்ட செயலாளர் தோழர் குப்புசாமி தலைமை வகித்தார் .

  தூத்துக்குடியில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

      AIBDPA அமைப்புதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தோழர். P. ராமர் தலைமையில் மூத்த தோழர். T.K. ஸ்ரீனிவாசன் கொடி ஏற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  நாகர்கோவிலில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  நாகர்கோவிலில் மாவட்டத் தலைவர் தோழர். சாகுல் ஹமீது தலைமையில் தோழர். கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அமைப்புச் செயலர். தோழர். K. காளி பிரசாத், BSNLEU மாவட்டச் செயலர் தோழர். ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.

  கோவையில் நடைபெற்ற அமைப்புதினம்:-

  மாவட்டத் தலைவர் தோழர். V. சுப்பிரமணியம் தலைமையில் 20-10-2016 அன்று கோவை மாவட்டச் சங்கம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியதோடு அமைப்பு தினத்தையும் இணைத்து கொண்டாடியது. முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். உமாபதி சங்கக்கொடியினை ஏற்றினார். வரவேற்புரை மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் நிகழ்த்தியதோடு கலந்து கொண்ட  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாநில உதவிச் செயலர் தோழர். K. பங்கஜவல்லி கலந்து கொண்டு சங்கத்தின் சாதனைகளை விளக்கிப்பேசினார்.

  fb_img_1477590958290fb_img_1477591095977fb_img_1477591142304