• ஆர்ப்பாட்டம் / தார்ணா நடத்திட மத்தியச் சங்கம் அறைகூவல்.

  ஓய்வூதியம் முழுமையாக வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து

               மத்தியச் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து DOT செயலர் மற்றும் உறுப்பினர் (நிதி) யை சந்தித்து உரிய நிலவரங்களை எடுத்துரைத்தும் செலவினங்களுக்கான இலாக்கா வின் தலையீட்டின் பேரில் 18-11-2016 தேதியிட்ட கடிதம் மூலம்  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியும் பொதுத்துறை, தனியார்துறை, கூட்டுறவு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் முழுமையாக வழங்கிட கோரிய பின்பும் ஓய்வூதியம் முழுமையாக வழங்கிட எந்த ஏற்பாடும் இல்லை.

            நமது கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையில் சில வங்கி / அஞ்சலங்களில் தேவையான பணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகிறது. அவ்வாறு உரிய பணம் கிடைக்காதபட்சத்தில் நமது கோரிக்கையை விளக்கி தலமட்ட நிலைமைக்கேற்ப ஆர்ப்பாட்டம் / தார்ணா செய்திட உரிய ஏற்பாடுகளை செய்திட மத்தியச் சங்கம் / மாநிலச் சங்கம் அறைகூவல் விட்டுள்ளது.

  பாதுகாப்போம் ஓய்வூதியர்களின் உரிமைகளை ! வெல்லட்டும் ஓய்வூதியர் போராட்டம் !!

 • கியூபா புரட்சிப் பூ …. காஸ்ட்ரோ மறைவு

  கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

  img-20161126-wa0062

              சோசலிசத்தை சாத்தியமாக்கிய மாவீரன், உலக புரட்சியாளன் கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் அலஜாண்ட்ரோ காஸ்ட்ரோ (1926-2016) தமது 90வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். தனது கூட்டாளி சேகுவேராவுடன் இணைந்து கொரில்லா போர்முறையின் மூலம் ஆயுதம் ஏந்தி பாடிஸ்டா இராணுவ சர்வாதிகாரத்தை ஒழித்து பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிறுவிய தோழன்.

            அமெரிக்காவிற்கு கடந்த 50 ஆண்டுகளாக சிம்ம சொப்பனமா கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.  638 முறை அமெரிக்க உளவுத் துறையால் கொல்ல முற்பட்டபோதும் அனைத்திலும் தப்பிய தோழன் காஸ்ட்ரோ. உலகில் நீண்ட காலமாக 1959 முதல் 1976 வரை கியூபா பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை கியூபா அதிபராகவும் பதவி வகித்தார்.

     1. 12 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவை கல்வி, சுகாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்தவர் தோழர். காஸ்ட்ரோ.

          தோழரின் மறைவிற்கு கொடிதாழ்த்தி அஞ்சலி செலுத்துவதோடு அவர் தம் மறைவால் துயருரும் கியூபா மக்களுக்கும் அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்மாநிலச் சங்கம் தெரிவிக்கிறது.

 • DOT செயலருடன் சந்திப்பு – ஓய்வூதியம் வழங்கிட மாற்று ஏற்பாடு செய்திடக்கோரி

  18-11-2016 மற்றும் 24-11-2016லும் DOT செயலருடன் சந்திப்பு.

                  500/-, 1000/- ரூபாய் தாள்களை தடை செய்து மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் சிரமமில்லாமல் கிடைத்திட மாற்று ஏற்பாடு செய்யக்கோரி நமது பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ் கடிதம் எழுதி அதனை 18-11-2016 அன்று DOT செயலர் திரு. J. S. தீபக்கிடம் வழங்கிட  அவரது அலுவலகம் சென்றார்.  DOT செயலர் இல்லாததால் உறுப்பினர் நிதி திரு. பிரகலாத் சிங்கிடம் கடிதத்தை வழங்கி விளக்கமாக எடுத்துரைத்தார். அவரும் சாதகமான முடிவை எடுப்பதாக உறுதியளித்தார்.

            24-11-2016 இன்று நமது ஆலோசகர் தோழர் V.A.N. நம்பூதிரி மற்றும் பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ் மீண்டும் DOT செயலர் திரு. J. S. தீபக்கை சந்தித்து கடிதம் கொடுத்தது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர். வங்கி மற்றும் அஞ்சலகங்களில் ஏற்படுகின்ற கஷ்டங்களையும், அனுபவங்களையும் விரிவாக எடுத்துரைத்தனர்.  3 மணி நேரமாக கொல்லம் மாவட்டத்தில் பணம் எடுக்க வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மூத்த ஓய்வூதியர் திரு. சந்திரசேகரன் மரணித்ததை எடுத்துரைத்தனர். பொறுப்புடனும் அனுதாபத்துடனும் கேட்ட DOT செயலர் திரு. J. S. தீபக் உரிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.

                நமது தலைவர்கள் முன்னதாக DDG (ESTT) S.K. ஜெயின் மற்றும் உறுப்பினர் நிதியுடனும் 18-11-2016 கொடுத்த கடிதம் சம்பந்தமாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

   

 • டவர் கம்பேனி அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு இயக்கம்.

  25-11-2016ல் நடைபெறும் தார்ணாவில் பங்கெடுப்பு.

                BSNLஐ முடக்கும் விதமாக மத்திய அரசு எடுத்த முடிவான டவர் கம்பேனி அமைக்கும் முடிவை கைவிடக்கோரி தார்ணா மற்றும் வேலைநிறுத்தம் செய்திட கடந்த 16-11-2016ல் BSNLMS அலுவலகத்தில் கூடிய BSNL சங்கங்கள் மற்றும் அசோசியேசன்களின் கூட்டுக் கூட்டத்தில் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. வருகின்ற 25-11-2016 தார்ணா நடத்தவும் 15-12-2016ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யவும் ஏக மனதாக முடிவு.

             மேற்கண்ட கூட்டத்தில் நமது AIBDPA  சங்க ஆலோசகர் தோழர். V. A. N. நம்பூதிரியும், பொதுச்செயலர் தோழர். K. G. ஜெயராஜூம் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அனைத்து மட்டங்களிலும் ஆதரவு வழங்குவதாக அறித்தனர்.

  AIBDPA மாவட்டச் செயலர்கள் கவனத்திற்கு :-

            வருகின்ற 25-11-2016 அன்று நடைபெறும் தார்ணாவில் பெருவாரியாக நமது சங்க தோழர்கள் கலந்து கொண்டு ஆதரவு இயக்கம் நடத்திட அனைத்து மாட்டச் செயலர்களும் உரிய கவனம் செலுத்திட தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

 • பீகார் AIBDPA மாநிலச்சங்கம் உதயம்.

  ஒரிசா மாநிலச்சங்கத்தை தொடர்ந்து பீகாரில் மாநிலச் சங்கம் உதயம்.

               பீகாரின் தலைநகரமான பாட்னா தந்தி மனமகிழ்மன்றமே நிரம்பிவளிந்த அளவு ஓய்வூதியர்களின் கூட்டம் நிறைந்த பீகார் மாநில AIBDPA மாநிலச்சங்க உதய மாநாடு சிறப்பாக தோழர்.S. N. சிங் தலைமையில் துவங்கியது. N.K. ஸ்ரீவத்சவா வரவேற்புரை நிகழ்த்தினார். BSNLEU மாநிலச்செயலர் தோழர். B. P. சிங், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். சுனிதா சௌத்ரி, தோழர். D.P. ஸ்ரீவத்சவா, தோழர். N.K. ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பல தலைவர்கள் மேடையில் அமர்ந்திருக்க ஆலோசகர் தோழர். V.A.N.நம்பூதிரி புதிய மாநிலச் சங்கத்தை துவக்கி வைத்து விரிவான உரை நிகழ்த்தினார்.

                  விரிவான தனது துவக்க உரையில் AIBDPA நடத்திய போராட்டங்கள், அது பெற்றுத்தந்த சலுகைகள், தீர்த்து வைத்த கோரிக்கைகள், மாநிலச் சங்கம் அமைப்பதன் நோக்கம் என அனைத்து தகவல்களையும் கூறினார். கலந்து கொண்ட ஓய்வூதியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமாக பதிலுரைத்தார். 

                   புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பேட்ரன் தோழர். B. P. சிங், மாநிலத் தலைவர் தோழர். R. N. சிங், மாநிலச் செயலர். தோழர். N. K. ஸ்ரீவத்சவா, மாநில பொருளாளராக தோழர். V. K. பாண்டே.

                 அனைத்து மாவட்டங்களிலும் புதிய கிளைகளை துவக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய மாநிலச் சங்க நிர்வாகிகளை தமிழ்மாநிச் சங்கம் வாழ்த்துகிறது.

   

 • வெற்றியாய் அமைந்த பெருந்திரள் முறையீடு

  ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டியது இன்று

  img-20161118-wa0025img-20161118-wa0041img-20161118-wa0023

  பெருந்திரள் தர்ணா – சாதித்து காட்டிய BSNLEU &  TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்.

            சென்னையில் உள்ள தமிழ் மாநில நிர்வாக அலுவலகத்தில் (CGM OFFICE) நீண்ட காலமாக பணியிலிருந்த 11 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிர்வாகத்தை கண்டித்தும் மீண்டும் அந்த தோழர்களை பணியமர்த்தக் கோரியும் ஆர்ப்பாட்டம், தார்ணா நடத்தியும் பல முறை நேரில் வலியுறுத்தியும் கேளாக்காதினராய் இருந்த மாநில நிர்வாகத்தை அசைத்திடும் விதமாக இன்று 18-11-2016ல் பெரும்திரள் முறையீடு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 2000க்கும் மேற்பட்ட நிரந்தர, ஒப்பந்த, ஓய்வுபெற்ற தோழர்கள் கலந்து கொண்ட வீரம் செரிந்த போராட்டமாய் அது அமைந்தது.

                 முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவையும் நிர்வாகம் அறிவிக்காத நிலையில் மாநிலச்சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், கிளைச்செயலர்கள், நிர்வாகிகள் என  முன்னணி தோழர்கள் அலுவலக அறையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வரை நமது போராட்டம் தொடரும் என்ற உறுதியான நிலையில் மாநில நிர்வாகம் அந்த தோழர்களை பணியமர்த்த ஒத்துக் கொண்டது. “ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சம் ” என்பது நிரூபிக்கப்பட்டது இன்று. சாதித்து காட்டியது BSNLEU &  TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்.

       BSNLEU  துணைப் பொதுச் செயலர் தோழர்.  S. செல்லப்பா, BSNLCCWF துணைப் பொதுச் செயலர் தோழர்.  C. பழனிச்சாமி, TNTCWU மாநிலத் தலைவர் தோழர். M. முருகையா, BSNLEU மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், TNTCWU மாநிலச் செயலர் தோழர். R.வினோத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துரை வழங்கினர். இந்தப் போராட்டத்தில் நமது மாநிலச் சங்கச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலர் தோழர். S. நடராஜா, கடலூர் மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதோடு  போராட்டத்தை வாழ்த்தி பேசினர். AIBDPA தலைவர்கள் உட்பட பல ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

              இந்த கூட்டு போராட்ட வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து தோழர்களையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது. 

 • வங்கிகளில் LIFE CERTIFICATE அளிக்கும் காலஅளவு நீடிப்பு.

  2017 ஜனவரி 15 வரை உயிர் சான்று வளங்கும் கால அளவு நீடிப்பு.

              வங்கிகளில் புதிதாக துவங்கியுள்ள ரூபாய் 1000/-, 500/- நோட்டுக்களை மாற்றுவதன் பணி சுமையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஓய்வூதியர்களின் “உயிர்சான்று” ( LIFE CERTIFICATE ) வழங்கும் கால அளவை இந்த ஆண்டு 2017 ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.

                   The central government has decided to extend the date of submission of life certificates by the pensioners in the banks up to 15th January, 2017 as the banks are completely engaged with the enormous work related to demonetisation of currency notes of Rs.1000 and Rs.500.

 • வெட்ரன் தலைவர் தோழர். திபன்கோஷ் மறைவு

  images

  மத்திய அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் தோழர். திபன்கோஷ் மறைவு.

                  தொழிலாளி வர்க்கத் தலைவர்களில் ஒருவரும், மத்திய அரசு ஊழியர் சங்க தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிபிஎம் தலைவருமான தோழர். திபன் கோஷ் தனது 85வது வயதில் கொல்கத்தாவில் கடந்த 13-11-2016 மறைந்தார்.  அவரது மறைவு தொழிலாளி வர்க்கத்திற்கு பேரிழப்பாகும்.

               அவரது இழப்பால் துயருரும் அவர் தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நமதி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

 • மறைந்துவிடுமா கருப்புப்பணம் ?

  செல்லாதையா செல்லாது.. 500ம் 1000ம் செல்லாது… !

                08.11.2016 அன்று இரவு பாரத பிரதமர் மோடி அவர்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்தார்.

           09.11.2016 அன்று வங்கிகளும் ATMகளும் செயல்படாது என்றும், 10.11.2016 முதல் வங்கிகளில் பழைய ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் 10.11.2016 முதல் ஒரு சில ATMகள் செயல்படும் என்றும் தெரிவித்தார். புதியதாக 500 ரூபாய் நோட்டுக்களும், 2000 ரூபாய் நோட்டுக்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

               பழைய ரூபாய்களை 30.12.2016க்குள் தங்களின் ஆதாரங்களை காட்டி வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதற்கு பின் 31.03.2017 வரை தகுந்த காரணங்களை RBIயிடம் தெரிவித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிப்பதற்காகவும், தீவிரவாதிகளின் பணப்பரிமாற்றத்தை தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இவையெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                         1978ஆம் ஆண்டு இது போல 1000, 5000, 10,000 ரூபாய்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் 38 ஆண்டுகள் ஆன பின்பு தற்போது பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் கருப்புப் பணம் இருப்பதாக அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

                                             நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ள சூழ்நிலையில் மக்களின் மனதை திசை திருப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

                         எது எப்படியோ, இரண்டு நாட்களாக மக்களின் பாடு திண்டாட்டம் தான். தற்போது ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக இன்றைக்கு கீழ் நடுத்தர குடும்பத்தில் கூட 500 ரூபாய் என்பது சாதாரணமாக புழங்குகிறது. ATMகளில் 500 ரூபாய் மட்டும் எடுத்தால் கூட ஒரே 500 ரூபாய் தான் வரும். 100ரூபாய் நோட்டுக்களின் புழக்கமே குறைந்து விட்ட நிலையில் இது போன்ற திடீர் அறிவிப்பால் அனைத்து பகுதி மக்களும் திண்டாடிக் கொண்டு தான் உள்ளனர். 10.11.2016 காலை முதல் வங்கிகளில் உள்ள வரிசை இதை தெளிவாக தெரிவிக்கிறது. இரண்டு நாட்களாக ஏழை எளிய நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் நகைக் கடைகளில் வியாபாரம் கன ஜோர் தான். கருப்புப் பணம் எல்லாம் மஞ்சள் பணமாக மாறிவிட்டது போலும்.

  நன்றி – BSNLEUTNC.com

 • உற்சாகமாய் அமைந்த புதுவை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  img-20161110-wa0015img-20161110-wa0014

  புதுவை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

                09-11-2016 அன்று மாலை 3.00 மணி அளவில் புதுச்சேரி மாவட்டத்தலைவர் தோழர். ஜெயராமன் தலைமையில் புதுச்சேரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தோழர். பாலசுப்பிரமணியன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். புதுவை மாவட்டச் செயலர் தோழர். P. சக்திவேல் மாவட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி  பேசினார்.

       இன்றைய அரசியல் நிலவரங்களையும், 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள், திருச்சி மாநிலச் செயற்குழு முடிவுகள், BSNLEU AIC நன்கொடை, AIBDPA மாநில மாநாட்டு நிதி, 78.2சத பஞ்சப்படி இணைப்பு நிலுவைத்தொகை நிதி என அனைத்தையும் விளக்கமாக மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் தனது சிறப்புரையில்  எடுத்துரைத்தார்.

              மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தை வாழ்த்தி AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். V. ராமகிருஷ்ணன், BSNLEU மாவட்ட உதவித் தலைவர் தோழர். கொளஞ்சியப்பன் பேசினர். திரளாக தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் மாவட்டப் பொருளாளர் தோழர். மதியழகன் நன்றி கூறினார்.