• வெற்றியாய் அமைந்த பெருந்திரள் முறையீடு

  ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டியது இன்று

  img-20161118-wa0025img-20161118-wa0041img-20161118-wa0023

  பெருந்திரள் தர்ணா – சாதித்து காட்டிய BSNLEU &  TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்.

            சென்னையில் உள்ள தமிழ் மாநில நிர்வாக அலுவலகத்தில் (CGM OFFICE) நீண்ட காலமாக பணியிலிருந்த 11 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிர்வாகத்தை கண்டித்தும் மீண்டும் அந்த தோழர்களை பணியமர்த்தக் கோரியும் ஆர்ப்பாட்டம், தார்ணா நடத்தியும் பல முறை நேரில் வலியுறுத்தியும் கேளாக்காதினராய் இருந்த மாநில நிர்வாகத்தை அசைத்திடும் விதமாக இன்று 18-11-2016ல் பெரும்திரள் முறையீடு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 2000க்கும் மேற்பட்ட நிரந்தர, ஒப்பந்த, ஓய்வுபெற்ற தோழர்கள் கலந்து கொண்ட வீரம் செரிந்த போராட்டமாய் அது அமைந்தது.

                 முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவையும் நிர்வாகம் அறிவிக்காத நிலையில் மாநிலச்சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், கிளைச்செயலர்கள், நிர்வாகிகள் என  முன்னணி தோழர்கள் அலுவலக அறையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வரை நமது போராட்டம் தொடரும் என்ற உறுதியான நிலையில் மாநில நிர்வாகம் அந்த தோழர்களை பணியமர்த்த ஒத்துக் கொண்டது. “ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சம் ” என்பது நிரூபிக்கப்பட்டது இன்று. சாதித்து காட்டியது BSNLEU &  TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்.

       BSNLEU  துணைப் பொதுச் செயலர் தோழர்.  S. செல்லப்பா, BSNLCCWF துணைப் பொதுச் செயலர் தோழர்.  C. பழனிச்சாமி, TNTCWU மாநிலத் தலைவர் தோழர். M. முருகையா, BSNLEU மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், TNTCWU மாநிலச் செயலர் தோழர். R.வினோத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துரை வழங்கினர். இந்தப் போராட்டத்தில் நமது மாநிலச் சங்கச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலர் தோழர். S. நடராஜா, கடலூர் மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதோடு  போராட்டத்தை வாழ்த்தி பேசினர். AIBDPA தலைவர்கள் உட்பட பல ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

              இந்த கூட்டு போராட்ட வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து தோழர்களையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.