• இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  img-20161231-wa0006

  வளமான பாரதம் அமைதியான வாழ்வு

  என வரும் புத்தாண்டு 2017 அமைய அனைவருக்கும்

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

 • அனைத்திந்திய மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பொதுத்துறை தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்களின் மின்னும் தாரகையாம் பிஎஸ்என்எல் ஊழியர்சங்கம் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

   

   

  facebook_1483032825823

   

   

 • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  images

  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

   

 • 4வது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம்

  நெல்லை நவஜீவன் டிரஸ்ட் கட்டிடத்தில் உற்சாகமாய் நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம்.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

                   கடந்த 18-12-2016 மாலை 0400மணி அளவில் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் AIBDPA 4வது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றதோடு கூட்டத்தின் நோக்கத்தையும் விவரித்தார்.

              AIBDPA 4வது மாநில மாநாட்டை நெல்லை மாவட்டம், தென்காசி வட்டம், குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சியில் வருகின்ற 2017 பெப்ரவரி 19 மற்றும் 20 தேதிகளில் நடத்துவது என்றும் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் நாகர்கோவில் மாவட்டங்கள் இணைந்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

                         மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வரும் MUTA முன்னாள் தலைவருமான  திரு. V. பொன்ராஜ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டு வரவேற்புக்குழு செயல் தலைவராக நாகர்கோவில் மாவட்டச்செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரமும், மாநாட்டு வரவேற்புக்குழு உதவித் தலைவர்களாக தோழர் T. சுப்பிரமணியன் (தூத்துக்குடி), தோழர். முருகேசன் (விருதுநகர்), மாநாட்டு வரவேற்புக்குழு பொதுச் செயலராக நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலும், மாநாட்டு வரவேற்புக்குழு இணைபொதுச் செயலர்களாக தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் P. ராமர், விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாசாமியும் மாநாட்டு வரவேற்புக்குழு பொருளாளராக நெல்லை மாவட்டத்தலைவர் தோழர். S. முத்துச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நெல்லை மாவட்ட BSNLEU  மற்றும் TNTCWU மாவட்டச் செயலர்கள் துணைப் பொதுச்செயலராகவும் 30 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும், நான்கு மாவட்ட AIBDPA செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நெல்லை மாவட்ட BSNLEU  மற்றும் TNTCWU மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளடக்கிய 130பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

        முதற்கட்ட மாநாட்டு நிதியாக நெல்லைமாவட்டம் ரூபாய் 25,000/-மும், விருதுநகர் மாவட்டம் ரூபாய் 20,000/-, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ரூபாய் 10000/- வழங்கினர். நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 50,000/- விரைவில் வழங்கிட உறுதி கூறினர்.

              மாநாட்டு அமைப்புக்குழு கூட்டத்தை வாழ்த்தி AIBDPA அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர்.  K. காளிபிரசாத், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச்செயலர் தோழர். முருகேசன், அனைத்து அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலர் தோழர். வைகுண்ட மணி, BSNLEU மாநிலத் துணைத் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன், TNTCWU மாவட்டத் தலைவர் தோழர். K. செல்வராஜ், முதுநிலை பட்டாதாரி  ஆசிரியர் கழகம் தோழர். மனோகரன் பேசினர். மேலும் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினர்.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

 • உற்சாகமாய் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மாநாடு.

               img-20161217-wa0050img-20161217-wa0051

  ஈரோடு மாவட்ட 4வது மாநாடு

  AIBDPA ஈரோடு மாவட்ட 4வது மாநாடு ஈரோடு சம்பத் நகரில் உள்ள அமுத பவனில் வைத்து இன்று 17-12-2016ல் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் N.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் தோழர் C. K. நரசிம்மன் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். AIBDPA அகில இந்திய சங்கத்தின் ஆலோசகர் தோழர் V. A. N. நம்பூதிரி சிறப்புரை வழங்கினார்.

              மாநில தலைவர் தோழர் S. மோகன்தாஸ், மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராமசாமி, செளந்தரபாண்டியன் மற்றும் சேலம், நீலகிரி, கோவை மாவட்ட செயலர்கள் மாநாட்டை வாழ்த்தி பேசினர். BSNLEU, CITU, TNTCWU மாவட்ட செயலாளர்கள் மற்றும் அஞ்சல் ஓய்வு ஊழியர்கள் சங்க செயலாளர் உட்பட பல தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் சகோதர சங்கத் தோழர்கள் உட்பட 300 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

               கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்
  மாவட்டத் தலைவர் தோழர். A. சிவஞானம், மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி, மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாசாமி.

  புதிய நிர்வாகிகளையும் சிறப்பாக மாவட்ட மாநாட்டை நடத்திய ஈரோடு தோழர்களையும் தமிழ் மாநிலச் சங்கம்  மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

 • வேலூர் சிறப்புக்கூட்டம்

  AIBDPA மத்தியச்சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி கலந்துகொண்ட சிறப்புக்கூட்டம்.

  img-20161216-wa0021img-20161216-wa0020

                மாவட்ட உதவித் தலைவர் தோழர். பார்த்தசாரதி தலைமையில் 16-12-2016 அன்று 250க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

   சிறப்புக்கூட்டத்தை துவக்கிவைத்து மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் பேசினார். தனது உரையில் மாநிலச் செயற்குழு, BSNLEU அனைத்திந்திய மாநாடு, AIBDPA 4வது மாநிலமாநாடு, 15-12-2016ல் நடைபெற்ற வேலைநிறுத்தம், இன்றைய அரசியல் நிலையை விளக்கிப் பேசினார். சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி முன்னதாக சங்கக்கொடியை ஏற்றி வைத்ததோடு சிறப்புரை ஆற்றினார். சிறப்புரையில் பென்ஷனர் தினம், 78.2% பஞ்சப்படி, ஒப்பந்த ஊழியர் பிரச்சனை, மத்தியஅரசின் பணமதிப்பு குறைப்பு மற்றும் செல்லாத அறிவிப்பால் மக்கள்படும் துன்பம், 15-12-2016 வேலைநிறுத்தம் பற்றி விளக்கமாக பேசினார்.      

                        BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. தங்கவேல், TNTCWU மாவட்டச் செயலர் தோழர். M. சதிஷ்குமார், SNEA மாவட்டச் செயலர் தோழர். லோகநாதன், AIPRPA மாநில பொதுச் செயலர் தோழர். S. சந்தானக் கிருஷ்ணன், AIBDPA மாநில அமைப்புச் செயலர்கள் C. ஞானசேகரன், K. கிருஷ்ணன்,  தோழர். D. மணி, RTD DGM, வாழ்த்துரை வழங்கினர்.   கூட்டத்தில் புதிய ஆண்டிற்கான தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. மேலும் 78.2%பஞ்சப்படி நிலுவைப்பணியில் பணிசெய்த GM அலுவலக ஊழியர்களுக்கு பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

                  நிறைவாக தோழர். K. ராமசாமி DGM(F) RTD நன்றிகூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

 • ஆதரவளிப்போம் டிசம்பர் 15 வேலைநிறுத்தத்திற்கு

  அரசின் துணைடவர் கம்பேனி அமைக்கும் முடிவை எதிர்த்து

              BSNLன் உயிர்நாடியாம் மொபைல் டவர்களை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தோடு மத்திய அரசு துணை டவர் நிறுவனம் அமைப்பதை கைவிடக்கோரி 2016 டிசம்பர் 15ல் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்திட BSNL அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் சார்பில்  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

                    இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்திலும் AIBDPA தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்டச் செயலர்கள் உரிய நடவடுக்கை எடுத்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

 • தோழர். சந்தேஸ்வர் சிங் மனைவி மறைவு

                    NFTE -BSNL பொதுச் செயலர் தோழர். சந்தேஸ்வர் சிங் மனைவி திருமதி. லீலாவதி தேவி பாட்னாவில் வைத்து மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

               அவரின் பிரிவால் வாடும் தோழருக்கும், குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

 • சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்டமாநாடு.

  நாகர்கோவில் மாவட்டமாநாடு.

                28-11-2016 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர். ஷாகுல் ஹமீது தலைமையில் நாகர்கோவில் மாவட்ட மாநாடு துவங்கியது. சங்கக் கொடியை மூத்தத் தோழர். V. சங்கரலிங்கம் ஏற்றி வைத்தார். தோழர். ஆசிர்வாதம் அஞ்சலி உரையாற்றினார். அகில இந்திய அமைப்புச் செயலரும் மாவட்ட உதவிச் செயலருமான தோழர். K. காளிபிரசாத் வரவேற்புரை ஆற்றினார். 

                அனைத்திந்திய உதவித் தலைவரும் மாநிலத் தலைவருமான தோழர். S.மோகன்தாஸ் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய மாநிலச் செயலர் தோழர்.C. K. நரசிம்மன் தனது உரையில் திருச்சி மாநிலச் செயற்குழு முடிவுகள், மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள், அதில் ஓய்வூதியர்களின் பங்களிப்பு, BSNLEU அனைத்திந்திய மாநாட்டு நன்கொடை, இன்றைய அரசியல் நிகழ்வுகள், 78.2 சத பஞ்சப்படி நிலுவைத்தொகை, நிதி வழங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். 

             ஆண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. BSNLCCWF துணைப் பொதுச் செயலரும் மாவட்ட உதவிச் செயலருமான தோழர்.C. பழனிச்சாமி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிய ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

                  கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக தோழர். ஷாகுல் ஹமீது, மாவட்டச் செயலராக தோழர். A. மீனாட்சி சுந்தரம், மாவட்டப் பொருளாளர் தோழர்.  ஹரிஹரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மாநாட்டையும், புதிய நிர்வாகிகளையும் தமிழ்மாநிலச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

 • தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு

  பல ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.

  jayalalitha5657-06-1480964988

                  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நீண்ட காலமாக தமிழக முதல்வராகவும் இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 05-12-2016 நேற்று இரவு 11.30 காலமானார்.

            அவர் தம் பிரிவால் வாடும் அதிமுகவினருக்கும் பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.