• ஓய்வூதியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

  img-20161130-wa0012img-20161130-wa0015முழுமையாக ஓய்வூதியம் வழங்காத மோடியின் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.

               30-11-2016ல் வேலூரில் முழுமையாக ஓய்வூதியம் வழங்காத மோடியின் மத்திய அரசைக் கண்டித்து AIBDPA, AIPRPA கூட்டுப் போராட்டக்குழு சார்பில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  AIBDPA Erode.
            ஈரோட்டில் உள்ள  தபால் நிலையங்களில் ஓய்வூதியர்களுக்கு ரூபாய் 25,000க்கு மேல் பென்சன் வாங்குபவர்களுக்கு ரூபாய் 10,000மும், ரூபாய் 25,000க்கு கீழ்  ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியர்களுக்ககு ரூபாய் 8000மும் ரொக்கமாக 30.11.2016 அன்று வழங்கப்பட்டது. AIBDPA மாவட்ட செயலாளர், தலைவர், & ACS 29.11.16 அன்று ஈரோடு தலைமை அஞ்சல் அதிகாரியை சந்தித்து பென்சன் தொகையை முழுவதும் வழங்க வேண்டும் என்று கோரினர். SBI வங்கி தங்களுக்கு ரூ10லட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்து உள்ளது என்று கூறினார். நமது மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு ரூபாய் 70 லட்சம் ஒதுக்கீடு பெற்று அனைவருக்கும் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  முழுமையாக வழங்கிட ஏற்பாடு செய்த ஈரோடு அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நமது நன்றி .

  சென்னையில் மாநிலச் செயலர் CKN மற்றும் ஓய்வூதியர்கள் போராட்டம்.

            புழுதிவாக்கம் அஞ்சலகத்தில் பணம் ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் அனைவருக்கும் ஓய்வூதியம் குறைத்தே வழங்கப்பட்டது. நமது மாநிலச் செயலர் CKN மற்றும் ஓய்வூதியர்கள் அதனைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

           ரூபாய் 500/-, 1000/- மதிப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக மக்கள் தங்கள் அன்றாட பண தேவைக்கே அல்லாடும் நிலையில் இன்று ஓய்வூதியர்களையும் அல்லாட வைத்த மோடியின் மத்திய அரசைக்கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெறுகின்றன.