• சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்டமாநாடு.

    நாகர்கோவில் மாவட்டமாநாடு.

                  28-11-2016 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர். ஷாகுல் ஹமீது தலைமையில் நாகர்கோவில் மாவட்ட மாநாடு துவங்கியது. சங்கக் கொடியை மூத்தத் தோழர். V. சங்கரலிங்கம் ஏற்றி வைத்தார். தோழர். ஆசிர்வாதம் அஞ்சலி உரையாற்றினார். அகில இந்திய அமைப்புச் செயலரும் மாவட்ட உதவிச் செயலருமான தோழர். K. காளிபிரசாத் வரவேற்புரை ஆற்றினார். 

                  அனைத்திந்திய உதவித் தலைவரும் மாநிலத் தலைவருமான தோழர். S.மோகன்தாஸ் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய மாநிலச் செயலர் தோழர்.C. K. நரசிம்மன் தனது உரையில் திருச்சி மாநிலச் செயற்குழு முடிவுகள், மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள், அதில் ஓய்வூதியர்களின் பங்களிப்பு, BSNLEU அனைத்திந்திய மாநாட்டு நன்கொடை, இன்றைய அரசியல் நிகழ்வுகள், 78.2 சத பஞ்சப்படி நிலுவைத்தொகை, நிதி வழங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். 

               ஆண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. BSNLCCWF துணைப் பொதுச் செயலரும் மாவட்ட உதவிச் செயலருமான தோழர்.C. பழனிச்சாமி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிய ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

                    கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக தோழர். ஷாகுல் ஹமீது, மாவட்டச் செயலராக தோழர். A. மீனாட்சி சுந்தரம், மாவட்டப் பொருளாளர் தோழர்.  ஹரிஹரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மாநாட்டையும், புதிய நிர்வாகிகளையும் தமிழ்மாநிலச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.