• வேலூர் சிறப்புக்கூட்டம்

  AIBDPA மத்தியச்சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி கலந்துகொண்ட சிறப்புக்கூட்டம்.

  img-20161216-wa0021img-20161216-wa0020

                மாவட்ட உதவித் தலைவர் தோழர். பார்த்தசாரதி தலைமையில் 16-12-2016 அன்று 250க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

   சிறப்புக்கூட்டத்தை துவக்கிவைத்து மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் பேசினார். தனது உரையில் மாநிலச் செயற்குழு, BSNLEU அனைத்திந்திய மாநாடு, AIBDPA 4வது மாநிலமாநாடு, 15-12-2016ல் நடைபெற்ற வேலைநிறுத்தம், இன்றைய அரசியல் நிலையை விளக்கிப் பேசினார். சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி முன்னதாக சங்கக்கொடியை ஏற்றி வைத்ததோடு சிறப்புரை ஆற்றினார். சிறப்புரையில் பென்ஷனர் தினம், 78.2% பஞ்சப்படி, ஒப்பந்த ஊழியர் பிரச்சனை, மத்தியஅரசின் பணமதிப்பு குறைப்பு மற்றும் செல்லாத அறிவிப்பால் மக்கள்படும் துன்பம், 15-12-2016 வேலைநிறுத்தம் பற்றி விளக்கமாக பேசினார்.      

                        BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. தங்கவேல், TNTCWU மாவட்டச் செயலர் தோழர். M. சதிஷ்குமார், SNEA மாவட்டச் செயலர் தோழர். லோகநாதன், AIPRPA மாநில பொதுச் செயலர் தோழர். S. சந்தானக் கிருஷ்ணன், AIBDPA மாநில அமைப்புச் செயலர்கள் C. ஞானசேகரன், K. கிருஷ்ணன்,  தோழர். D. மணி, RTD DGM, வாழ்த்துரை வழங்கினர்.   கூட்டத்தில் புதிய ஆண்டிற்கான தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. மேலும் 78.2%பஞ்சப்படி நிலுவைப்பணியில் பணிசெய்த GM அலுவலக ஊழியர்களுக்கு பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

                  நிறைவாக தோழர். K. ராமசாமி DGM(F) RTD நன்றிகூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.