• உற்சாகமாய் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மாநாடு.

               img-20161217-wa0050img-20161217-wa0051

  ஈரோடு மாவட்ட 4வது மாநாடு

  AIBDPA ஈரோடு மாவட்ட 4வது மாநாடு ஈரோடு சம்பத் நகரில் உள்ள அமுத பவனில் வைத்து இன்று 17-12-2016ல் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் N.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் தோழர் C. K. நரசிம்மன் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். AIBDPA அகில இந்திய சங்கத்தின் ஆலோசகர் தோழர் V. A. N. நம்பூதிரி சிறப்புரை வழங்கினார்.

              மாநில தலைவர் தோழர் S. மோகன்தாஸ், மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராமசாமி, செளந்தரபாண்டியன் மற்றும் சேலம், நீலகிரி, கோவை மாவட்ட செயலர்கள் மாநாட்டை வாழ்த்தி பேசினர். BSNLEU, CITU, TNTCWU மாவட்ட செயலாளர்கள் மற்றும் அஞ்சல் ஓய்வு ஊழியர்கள் சங்க செயலாளர் உட்பட பல தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் சகோதர சங்கத் தோழர்கள் உட்பட 300 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

               கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்
  மாவட்டத் தலைவர் தோழர். A. சிவஞானம், மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி, மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாசாமி.

  புதிய நிர்வாகிகளையும் சிறப்பாக மாவட்ட மாநாட்டை நடத்திய ஈரோடு தோழர்களையும் தமிழ் மாநிலச் சங்கம்  மனதார பாராட்டி வாழ்த்துகிறது.