• சேலம் மாவட்ட மாநாடு

   உற்சாகமாய் நடைபெற்ற ்சேலம் மாவட்ட மாநாடு

  IMG-20170129-WA0174

  IMG-20170129-WA0173

       சேலம் மாவட்ட மாநாடு சேலம் லிட்டரரி சொசைட்டி மீட்டிங் ஹாலில் வைத்து மாவட்டத் தலைவர்  தோழர். P. ராமசாமி தலைமையில் இன்று 29-01-2017 ல் நடைபெற்றது.

          மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் ்மாநாட்டை துவக்கிவைத்து துவக்க உரை நிகழ்த்தினார். மாநிலச் செயலர்  தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையாற்றினார். சகோதரச் சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலர் தோழர். V. பொன்வேல் செயல்பாட்டு அறிக்கையினையும், வரவு செலவு கணக்கை மாவட்ட பொருளாளர்  தோழர்.M. மதியழகனும் முன் வைத்தனர்.

               புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர்  தோழர். P. ராமசாமி, மாவட்டச் செயலர் தோழர். M. மதியழகன், மாவட்ட பொருளாளர்  தோழர்.  S. மைக்கேல் ஆண்டனி ஆகியோர் ஏகமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.

       புதிய நிர்வாகிகளை மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

 • திருச்சி மாவட்ட மாநாடு

  சிறப்பாக நடைபெற்ற  4வது திருச்சி மாவட்ட மாநாடு.

  IMG-20170129-WA0013

  IMG-20170129-WA0021

 • குடியரசுதின வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய    குடியரசுதின வாழ்த்துக்கள்.

  images

 • 2017 ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

  மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக அனைத்து சங்கங்களும் இணைந்து கூட்டியக்கம்.

      மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் ! தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

                 மத்திய மோடி அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால்  இன்று வரை மாத ஓய்வூதியத்தை முழுமையாக பெற முடியாமல்  ஓய்வூதியர்கள் படும் துன்பம் தாளாது. .

            இந்தியா முழுவதும் சிறு குறு தொழில்கள்  , வணிகம் முடக்கம். பல லட்சம் பேர் வேலை இழப்பு. மாவட்டச் செயலர்கள்  உரிய கவனம் செலுத்தி தலமட்ட போராட்ட வடிவங்களுக்கேற்ப கலந்து கொண்டு வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.

 • பொங்கல் வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  images

 • நெல்லையில் AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழு

  31-01-2017 ல் நெல்லையில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம்.

       AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 31-01-2017 செவ்வாய்க்கிழமையன்று நெல்லையில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் :  “நவஜீவன் டிரஸ்ட்” கட்டிடம், (நெல்லைபுதிய பேரூந்து நிலையம் அருகில்) வீரமாணிக்கபுரம், பாளயங்கோட்டை, திருநெல்வேலி

  நேரம் :  31-01-2017 செவ்வாய்க்கிழமைகாலை 1000 மணி

  ஆய்படு பொருள் 

  (1) (அ) செயல்பாட்டு அறிக்கை

      (ஆ) நிதி நிலை அறிக்கை

     (இ) 4வது மாநில மாநாடு.

     (ஈ) தீர்மானங்கள்

     அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

  குறிப்பு :- மாநிலமாநாட்டு நன்கொடை மற்றும் பகுதிப்பணம்  செலுத்த வேண்டிய மாவட்டங்கள் நன்கொடை மற்றும் பகுதிப்பணம் செலுத்தும் வகையில் தயாரிப்புடன் வரவும்.

 • காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 001காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 011

                    காரைக்குடி மாவட்ட மாநாடு 08-01-2016 அன்று மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர். மோகன்தாஸ், BSNLEU மாவட்டச்செயலர் தோழர். பூமிநாதன், கணக்கு அதிகாரி திரு. பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவித் தலைவர் தோழர். ராமன், மாநில உதவித் தலைவர் தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

            மாநாட்டின் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம், மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய காரைக்குடி மாவட்டச் சங்கத்தையும் புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது. 

   

   

 • வேலூரில் ஓய்வூதியம் முழுமையாக வழங்கிடக் கோரி பேரணி

  முழுமையாக ஓய்வூதியம் வழங்கிடக்கோரி 06-01-2017ல் ஓய்வூதியர்கள் பேரணி.

  img-20170106-wa0044

                மத்திய  மோடி அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்த பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்க வேண்டிய ஓய்வூதியம்  முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து இன்று 06-01-2017ல் வேலூரில் AIBDPA, AIPRPA, BSNLPWA,   சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

             ஆர்ப்பாட்டத்திற்கு AIBDPA மாவட்டத் தலைவர் தோழர். V.ஏழுமலை, AIPRPA மாவட்டத் தலைவர் தோழர். சிதம்பரம், BSNLPWA மாவட்டத் தலைவர் தோழர். பொன் ஆறுமுகம் தலைமையில் காந்தி மெயின் ரோட்டில் தொடங்கிய ஊர்வலம் பாரத வங்கியின் மண்டல அலுவலகத்தில் நிறைவடைந்தது. 250க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் AIBDPA மாநிலச் செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் போராட்டத்தை விளக்கிப் பேசினார். SBI முதன்மை அலுவலரிடம் மகஜர் அளிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு வங்கி ஊழியர்கள் சங்கத் தோழர்கள் தேனீர் வழங்கினர்.

 • BSNLEU 8வது அனைத்திந்திய மாநாட்டு புதிய நிர்வாகிகள்

  2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக

  தலைவர் தோழர்.   பல்பீர்சிங்

  பொதுச் செயலாளர் தோழர். P. அபிமன்யூ

  பொருளாளர் தோழர். காக்குள்  போரா

  தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தோழர். S. செல்லப்பா மீண்டும் துணைப் பொதுச்செயலாளாக தேர்வு செய்யப்பட்டார்.

  புதிய நிர்வாகிகளை AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.!

  Office-bearers elected in the 8th All India Conference of BSNLEU.

  President: Com. Balbir Singh (Punjab)
  Vice-presidents:
  1) Com.P.Asokababu(Andhra Pradesh)
  2) Com. Animesh Mitra (West Bengal)
  3) Com.Jagdish Singh (Madhya Pradesh)
  4) Com. R. S. Chauhan (NTR)
  5) Com. Nagesh Kumar Nalavade (Maharashtra)
  6) Com.K.R.Yadav(UP-East)
  General Secretary : Com. P. Abhimanyu (Tamil Nadu)
  Dy. General Secretary : Com. Swapan Chakraborty (NE I)
  Assistant General Secretaries:
  1) Com. Saibal Sengupta (Kolkata)
  2) Com.S.Chellappa (Tamil Nadu)
  3) Com.John Verghese ( Maharashtra)
  4) Com.S.Pratap Kumar (Kerala)
  5) Com. M. K. Dave (Gujarat)
  Treasurer: Com. Gakul Borah (Assam)
  Assistant Treasurer: Com. P.K.Nayak (Odisha)
  Organising Secretaries:
  1) Com. Om Prakash Singh(Telecom Factory – Kolkata)
  2) Com. Sunithi Choudhary(Bihar)
  3) Com. Vijay Singh (Rajasthan)
  4) Com. Sukhvir Singh (UP-West)
  5) Com.G.Q.Dandroo( J&K)
  6) Com. M.Vijayakumar(Kerala)
  7) Com.H.V.Sudharshan (Karnataka)
  8) Com. Mohan Reddy (Andhra Pradesh)
  9) Com. Ramesh Sharma (Haryana)

 • 01-01-2017 முதல் (IDA) பஞ்சப்படி குறைவு

   

  மோடி அரசின் புத்தாண்டு பரிசு 

  01-01-2017 முதல் பஞ்சப்படி (IDA)  0.8 சதம் குறைந்து 119.5 சதமாக கிடைக்கும்.

  மோடி அரசின் பண மதிப்பு குறைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

       இதற்கான உத்தரவு DPE மற்றும் BSNL விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.