• வேலூரில் ஓய்வூதியம் முழுமையாக வழங்கிடக் கோரி பேரணி

    முழுமையாக ஓய்வூதியம் வழங்கிடக்கோரி 06-01-2017ல் ஓய்வூதியர்கள் பேரணி.

    img-20170106-wa0044

                  மத்திய  மோடி அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்த பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்க வேண்டிய ஓய்வூதியம்  முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து இன்று 06-01-2017ல் வேலூரில் AIBDPA, AIPRPA, BSNLPWA,   சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

               ஆர்ப்பாட்டத்திற்கு AIBDPA மாவட்டத் தலைவர் தோழர். V.ஏழுமலை, AIPRPA மாவட்டத் தலைவர் தோழர். சிதம்பரம், BSNLPWA மாவட்டத் தலைவர் தோழர். பொன் ஆறுமுகம் தலைமையில் காந்தி மெயின் ரோட்டில் தொடங்கிய ஊர்வலம் பாரத வங்கியின் மண்டல அலுவலகத்தில் நிறைவடைந்தது. 250க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் AIBDPA மாநிலச் செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் போராட்டத்தை விளக்கிப் பேசினார். SBI முதன்மை அலுவலரிடம் மகஜர் அளிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு வங்கி ஊழியர்கள் சங்கத் தோழர்கள் தேனீர் வழங்கினர்.