• நெல்லையில் AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழு

  31-01-2017 ல் நெல்லையில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம்.

       AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 31-01-2017 செவ்வாய்க்கிழமையன்று நெல்லையில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் :  “நவஜீவன் டிரஸ்ட்” கட்டிடம், (நெல்லைபுதிய பேரூந்து நிலையம் அருகில்) வீரமாணிக்கபுரம், பாளயங்கோட்டை, திருநெல்வேலி

  நேரம் :  31-01-2017 செவ்வாய்க்கிழமைகாலை 1000 மணி

  ஆய்படு பொருள் 

  (1) (அ) செயல்பாட்டு அறிக்கை

      (ஆ) நிதி நிலை அறிக்கை

     (இ) 4வது மாநில மாநாடு.

     (ஈ) தீர்மானங்கள்

     அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

  குறிப்பு :- மாநிலமாநாட்டு நன்கொடை மற்றும் பகுதிப்பணம்  செலுத்த வேண்டிய மாவட்டங்கள் நன்கொடை மற்றும் பகுதிப்பணம் செலுத்தும் வகையில் தயாரிப்புடன் வரவும்.

 • காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 001காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 011

                    காரைக்குடி மாவட்ட மாநாடு 08-01-2016 அன்று மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர். மோகன்தாஸ், BSNLEU மாவட்டச்செயலர் தோழர். பூமிநாதன், கணக்கு அதிகாரி திரு. பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவித் தலைவர் தோழர். ராமன், மாநில உதவித் தலைவர் தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

            மாநாட்டின் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம், மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய காரைக்குடி மாவட்டச் சங்கத்தையும் புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.