• 5லட்சம் மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டதை கைவிட ஆதரவு இயக்கம்

  5லட்சம் மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டதை கைவிடகோரி நடைபெறும் ஆதரவு இயக்கங்களில் பங்களிப்போம் !

  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6000அடிக்கு ஆழ்துழையிட்டு ஹைட்ரோ கார்பன்  எடுத்திடும் பிஜேபி மத்திய அரசின் திட்டத்தினால்  விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் சூழல் உள்ளது.

  அப்பகுதி மக்களிடம் எந்தவித கருத்து கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் , சுற்றுசூழலையும் பாதிக்கும்  இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகிறது. 

 • BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 18000.

  சமவேலைக்கு சம ஊதியம்

  பணி நிரந்தரம்.

  EPF, ESI உள்ளிட்ட சட்டபூர்வ சலுகைகள் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் ஒப்பந்த ஊழியர் பேரணி வெற்றிபெற AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

  IMG-20170209-WA0046

  IMG-20170209-WA0051

 • AIBDPA – 4வது மாநிலமாநாடு இலஞ்சியில் உற்சாகமாக தொடங்கியது.

  இலஞ்சியில் நடைபெற்ற AIBDPA – 4வது மாநிலமாநாட்டு காட்சிகள்.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

                19-02-2017 மாலை 0330மணி அளவில் நெல்லை மாவட்டம் தென்காசி வட்டம் குற்றாலம் அருகில்உள்ள இலஞ்சியில் AIBDPA மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் AIBDPA தமிழ் மாநில 4வது மாநில மாநாடு துவங்கியது. 

                  விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தேசியக் கோடியை மாநில துணைத்தலைவர் தோழர். S.  தாமஸ் தேசியக் கொடியை ஏற்றினார். சங்கக் கொடியை AIBDPA மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் ஏற்றிவைத்தார்.

  Jpeg

  Jpeg

           AIBDPA மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் மாநாட்டின் பொது அரங்கு நிகழ்ச்சி தொடங்கியது. மாநில  துணைத்தலைவர் தோழர். K. காளிபிரசாத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மதிதா இந்து கல்லூரி முதல்வரும்  வரவேற்புக்குழு தலைவருமான பேராசிரியர் தோழர். V. பொன்னுராஜ் மற்றும் AIBDPA மாநிலச் செயலர் தோழர் C.K. நரசிம்மன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். 

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

   CITU தமிழ்மாநில துணைப் பொதுச்செயலர் தோழர். R. கருமலையான் மாநாட்டை துவக்கி வைத்து  துவக்கவுரை நிகழ்த்தினார். அஞ்சல் RMS சங்க பொதுச்செயலர் தோழர் K. ராவேந்திரன் சென்னை தொலைபேசி மாநிலத்தலைவர் தோழர்.  K. ஆறுமுகம் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் தோழர். V.P.இந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினார்.  பொது அரங்கை நிறைவு செய்து மாநில உதவிச் செயலர் தோழர். S.நடராஜா நன்றி கூறினார்.    

     மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாநிலத்தலைவர் தோழர்.  P. மாணிக்கமூர்த்தி மாநலச்செயலராக தோழர்.  C.K. நரசிம்மன் பொருளாளராக  தோழர். S. நடராஜா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

   

 • AIBDPA இலஞ்சி – 4வது மாநிலமாநாடு

  AIBDPA இலஞ்சி – 4வது மாநில மாநாடு

  12 x 8 (BSNL RAMAR) s copy

   

  வருகைதரும் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !!!

 • 15-02-2017 எழுச்சியுடன் ஈரோட்டில் நடைபெற்ற NCCPA ஆர்ப்பாட்டம்.


  NCCPA ஆர்ப்பாட்டம்.

  AIBDPA மற்றும் AIPRPA தோழர்கள் பங்களிப்பு

          15.02.2017 அன்று  ஈரோட்டில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மத்திய அரசு மற்றும் DOT ஓய்வூதியர் அனைவருக்கும் 7வது ஊதிய குழு பரிந்துரை செய்து, மத்திய அமைச்சரவை ஒத்து கொண்ட ஓய்வூதியர்கட்கு option no. 1.ஐ மோடி அரசு இப்போது மறுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. AIBDPA மற்றும் AIPRPA சங்கங்கள் இணைந்து இந்த போரட்டத்தை நடத்தின.

         தோழர். N. குப்புசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர். K. ராமசாமி AIPRPA மாவட்ட செயலாளர் மற்றும் தோழர். P. சின்னசாமி மாவட்ட செயலாளர் AIBDPA ஈரோடு ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

  IMG-20170215-WA0010

  IMG-20170215-WA0009

             திரளாக நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 • AIBDPA 4வது தமிழ்மாநில மாநாடு – இலஞ்சி (குற்றாலம்)

  BSNLAIBDPA 4வது தமிழ்மாநில மாநாடு – இலஞ்சி (குற்றாலம் அருகில்) தென்காசி வட்டம், நெல்லை மாவட்டம்.

  நாள் : 2017 பிப்ரவரி 19 மற்றும் 20 (ஞாயிறு & திங்கள்)

  15 x 8 (BSNL DOT) 2 copy15 x 8 (BSNL DOT) copy