• 5லட்சம் மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டதை கைவிட ஆதரவு இயக்கம்

    5லட்சம் மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டதை கைவிடகோரி நடைபெறும் ஆதரவு இயக்கங்களில் பங்களிப்போம் !

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6000அடிக்கு ஆழ்துழையிட்டு ஹைட்ரோ கார்பன்  எடுத்திடும் பிஜேபி மத்திய அரசின் திட்டத்தினால்  விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் சூழல் உள்ளது.

    அப்பகுதி மக்களிடம் எந்தவித கருத்து கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் , சுற்றுசூழலையும் பாதிக்கும்  இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.