• மதுரை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்

   

    மதுரை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். R. மஹபூப் ஜான் தலைமையில் இன்று  30-03-2017 ல் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். N. ஆதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். ஜான் போர்ஜியா , AIBDPA மாநில அமைப்புச்செயலர் தோழர். M. செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினர்.

      மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர். சிறப்புரையில் மைசூரு மத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் இயக்கங்கள், மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள், 7வது ஊதியக் குழு பரிந்துரைகள், பிஎஸ்என்எல் சங்கங்களின் ஏப்ரல் 5தேதி போராட்டம் மற்றும் இன்றைய அரசியல் சூழல்களை எடுத்துரைத்தனர். கூட்ட முடிவில் தோழர். R. சண்முக வேலு நன்றி கூறினார்.

 • விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்

  விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்.

  Jpeg

  Jpeg

   

  விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் இன்று 25-03-2017ல் மாவட்டத்தலைவர் தோழர். S.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி வரவேற்றதோடு செயல்பாட்டறிக்கையும் சமர்பித்தார். வரவுசெலவு கணக்கை மாவட்டப்பொருளாளர். தோழர். M. பெருமாள்சாமி தாக்கல் செய்தார். ஏகமனதாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

       சிறப்புக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தனது சிறப்புரையில் சிறப்பாக நடைபெற்ற 4வது மாநிலமாநாட்டை நடத்திய விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களையும்  பாராட்டியதோடு மைசூரில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி கூறினார். மேலும்  மத்திய செயற்குழு அறிவித்துள்ள இயக்கங்களை விளக்கி கூறியதோடு இந்த மாவட்டத்தில் அதனை அமுல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  நிறைவாக தோழர். புளுகாண்டி நன்றி கூற சிறப்புக்கூட்டம் நிறைவுபெற்றது. 

 • 4வது மாநிலமாநாட்டு வரவேற்புக்குழு கலைப்புக்கூட்டம்

  4வது மாநிலமாநாட்டு வரவேற்புக்குழு கலைப்புக்கூட்டம்

  Jpeg

  Jpeg

     4வது மாநிலமாநாட்டு வரவேற்புக்குழு கலைப்புக்கூட்டம் நெல்லை நவஜீவன் டிரஸ்ட் கட்டிடத்தில் வைத்து 21-03-2017 அன்று வரவேற்புக்குழு செயல் தலைவர் தோழர். A. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

       மாநாட்டை சிறப்பாக நடத்திய நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோவில் AIBDPA மாவட்டச்சங்கங்களையும், உறுதுணையாக செயல்பட்ட BSNLEU, TNTCWU, LIC, CITU தோழர்களையும் பாராட்டி அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ், மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, மாநில துணைத்தலைவர்கள் தோழர். K. காளிபிரசாத், தோழர். S. தாமஸ்,  BSNLEU மாநிலத் தலைவர் தோழர். சுவாமிகுருநாதன்,  BSNLEU நெல்லை மாவட்டச் செயலர் தோழர். சூசை மரிய அந்தோனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      வரவேற்புக்குழு பொருளாளர் தோழர். S.முத்துச்சாமி மாநாட்டு வரவு செலவு அறிக்கையை  தாக்கல் செய்தார். ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாநாடு முடிந்த ஒரு மாதத்திலேயே வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்ததை அனுவரும் பாராட்டினர். பணியாற்றிய அனைவருக்கும் மாநிலச்சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

 • நெல்லையில் AIBDPA சிறப்புக்கூட்டம்.

               இன்று 21-03-2017ல் நெல்லையில் நடைபெற்ற AIBDPA சிறப்புக்கூட்டம் மாவட்டத்தலைவர்  தோழர். முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். D. கோபாலன் அனைவரையும் வரவேற்றார்.

  Jpeg

  Jpeg

  Jpeg

             நமது மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் தனது சிறப்புரையில் சிறப்பாக 4வது மாநில மாநாட்டை நடத்திய நெல்லை மாவட்டத்தை பாராட்டியதோடு மைசூரு  மத்தியச்செயற்குழு வடித்தெடுத்த போராட்டங்களை விளக்கி பேசினார். மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, மாநில துணைத்தலைவர்கள் தோழர். K. காளிபிரசாத், தோழர். S. தாமஸ்,  BSNLEU மாநிலத் தலைவர் தோழர். சுவாமிகுருநாதன், நாகர்கோவில் மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம், விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். M. அய்யாச்சாமி, தூத்துக்குடி மாவட்டச்   செயலர் தோழர். P. ராமர், மாவட்டப் பொருளாளர் தோழர். சீதாலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் நிறைவுரை ஆற்றினார்.

 • ஈரோடு நகர் பகுதியில் கிளைகள் அமைப்பு மாநாடு

  வெற்றிகரமாக நடைபெற்ற ஈரோடு கிளைகள் அமைப்பு மாநாடு.

   

              ஈரோடு மாவட்ட சங்கத்தின் ஈரோடு நகர் பகுதியில் உள்ள அனைத்து கிளைகள் அமைப்பு மாநாடு ஈரோட்டில் 18.3.2017 அன்று ஈரோடு தொலைபேசி நிலையத்தில் வைத்து மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. தோழர் மாணிக்கம் மேற்கு கிளை அமைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி  துவக்கி வைத்தார். AIBDPA மாநில உதவி செயலாளர்  தோழர். B. செளந்தரபாண்டியன்  சிறப்புரை வழங்கினார். ஈரோடு நகர் தெற்கு – 1, தெற்கு – 2, ஈரோடு மேற்கு மற்றும் ஈரோடு கிழக்கு ஆசிய நான்கு கிளைகள் நிர்வாகிகள் தேர்தலை மாநில உதவி செயலாளர் தோழர். N. குப்புசாமி நடத்தி வைத்தார். நான்கு கிளைகள் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் L பரமேஸ்வரன், AIBDPA மாநில அமைப்பு செயலாளர் தோழர். N. சின்னையன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 75 தோழர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளர் தோழர் அய்யாசாமி நன்றி கூறினார்.

         புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஈரோடு மாவட்ட ஓய்வூதியர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்.

 • வெற்றிகரமாக நடைபெற்ற ஆதரவு இயக்கங்கள்.

  தமிழகமெங்கும் மத்திய அரசு ஊழியர்களின்  வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வெற்றிகரமாக நடைபெற்ற ஆதரவு இயக்கங்கள்.

  சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர். CKN உரையாற்றுகிறார்.

  சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர். ராகவேந்திரா உரையாற்றுகிறார்..

           சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இன்று மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர்  சங்கங்களும் ஆதரவு இயக்கங்கள் நடத்தின.  AIBDPA, AIPRPA சங்கத்தலைவர்களும் பெருவாரியாக கலந்துகொண்டனர்.

           சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர்  சங்க கூட்டமைப்பு சென்னை மாவட்டச்செயலர் தோழர். N. கிருஷ்ணமூர்த்தி தலைமை    தாங்கினார். AIPRPA பொதுச்செயலர்தோழர்.K.ராகவேந்திரா ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். AIBDPA மாநிலச் செயலர் தோழர்.C.K. நரசிம்மன், மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலர் தோழர். S.ஜெகதீசன், AIPRPA மாநிலத் தலைவர் தோழர். M.கன்னையன், அனைத்து ஓய்வூதியர் சங்கத் தோழர். ஜோதி உட்பட பல தலைவர்கள் போராட்டத்தை விளக்கி பேசினர்.

                   தமிழ்நாட்டிலுள்ள சென்னை, வேலூர், ஈரோடு, கோவை, குன்னூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி,  மதுரை, புதுச்சேரி, கும்பக்கோணம்  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்  AIBDPA தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டதோடு  AIBDPA மாவட்டச்செயலர்கள் வேலைநிறுத்தத்தை வாழ்த்தி பேசினர்.

  வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

  ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

  தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

  திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

 • தார்மீக ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்தியசெயற்குழு முடிவு

  மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்  2017 மார்ச் 16.

  ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்திய செயற்குழு முடிவு.

  AIBDPA மத்தியச்சங்கம் தார்மீக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அறைகூவல். 

  அடிப்படை ஊதியத்தை  ரூபாய் 21000/- மாக மாற்றி அமை !

  01-01-2016 முதல் புதிய பார்முலாவின்படி வீட்டுவாடகைப்படி, பயணப்படி முதலியவற்றை வழங்கிடு !

  அஞ்சல் பகுதியில் 2.5லட்சம்   ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்து !

  உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 16 மார்ச் 2017ல்  மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்துள்ளனர். 

  வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்தியச்செயற்குழு  அறைகூவல் விட்டுள்ளதாலும், மாநிலளவில் நடைபெற்ற அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் அனைத்து மாவட்டச் செயலர்களும் உரியகவனம் செலுத்தி   ஆதரவு இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.


   

   

   

   

   

   

   

   

 • ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி நீடிப்பு

  ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி நீடிப்பு – பெற்றுத்தந்த BSNLEUவுக்கு நன்றி  . 

           வாடிக்கையாளர்களுக்கு இரவு இலவச அழைப்பு வசதியை BSNL நிறுவனம் வழங்கியபொழுதே அதனை பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் நீடிப்பு செய்ய வேண்டும் என்று பலதடவையும் கோரிக்கை வைத்தது BSNL ஊழியர் சங்கம். அதனடிப்படையில் பகுதி கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதாவது இன்று BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி  நீடிப்பு செய்வதாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.  

  BSNL கடித எண் :  2 – 03 / 2006 – PHA (pt) dated 09- 03- 2017.PHA Free Night calling

       இந்த வசதியினை  முழு முயற்சி எடுத்து  பெற்றுத்தந்த  BSNL ஊழியர் சங்கத்திற்கும் பொதுச் செயலர் தோழர். அபிமன்யூவுககும் AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

   

 • மகளிர் தின கொண்டாட்டம்.

  WOMENS DAY OBSERVED.

  AIBDPA VELLORE DISTRICT BRANCH OBSERVED WOMENS DAY BY HOLDING MEETING WITH GOOD PARTICIPATION OF LADY COMRADES ON 08-03-2017.
  COM.V.ELUMALAI DISTRICT PRESIDENT PRESIDED. COM.JOTHISUDANTHIRANATHAN , DISTRICT SECRETARY SPOKE ABOUT THE IMPORTANCE OF THE DAY AND GAVE VALUABLE HEALTH TIPS.

  வேலூரில் மாவட்டத் தலைவர் தோழர்.V. ஏழுமலை தலைமையில் 08-03-2017 அன்று  மகளிர் தினம்  சிற ப்பாக  ப்கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலர் தோழர் B. ஜோதி சுதந்திரநாதன் மகளிர் தினத்தின் முக்கியத்தும் மற்றும் சுகாதார மருத்துவ குறிப்புகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். நிறைவான அளவில் பெண் தோழர்களின் பங்களிப்பு இருந்தது பாராடிற்குரியது. வாழ்த்துக்கள் !

   

  FB_IMG_1488994521139

  FB_IMG_1488994511756

   

 • 2017 மார்ச் 9 ல் நடைபெறும் நாடு தழுவிய பேரணிக்கு ஆதரவளிப்போம்.

  2017 மார்ச் 9 ல் BSNL அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் ஆளுநர் / மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்கும்  நாடு தழுவிய பேரணிக்கு ஆதரவு.

  BSNL நிறுவனத்தின் பங்குகளை கேந்திரவிற்பனை செய்வதற்கும், தனியார் மயமாக்குவதற்கும் “நிதி ஆயோக்” அளித்துள்ள பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இந்திய பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளதைக் கண்டித்தும் !

  ♦       BSNL நிறுவனத்தின் 63000 டவர்களை பிரித்து துணை டவர் நிறுவனம் அமைப்பதை கைவிட !!

  ♦      அரசு பொதுதுறையான BSNL நிறுவனத்திற்கு கட்டணமின்றி 4G அலைக்கற்றை வசதியை வழங்கிட !!!

  ♦ரிலையன்ஸ் ஜியோ என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் கண்மூடித்தனமான ஆதரவையும் சலுகைகளையும் உடனே நிறுத்திட !!!! கோரி…..

     கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL நிறுவனத்தின் அதிகாரி ஊழியர் சங்கங்கள் 2017 மார்ச் 9 ல் மாநில ஆளுநர் / மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாக சென்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள் வெற்றிபெற ஆதரவளித்து பேரணியில் நாமும் முழு வீச்சில் கலந்துகொள்ள மாவட்டச்சங்கங்கள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.