• மகளிர் தின வாழ்த்துக்கள்

    images

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

     

  • AIBDPA 4வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

    AIBDPA 4வது மாநில மாநாட்டு தீர்மானங்கள்.

            நெல்லை மாவட்டம் இலஞ்சியில் 2017 பிப்ரவரி  19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற 4வது மாநில மாநாட்டில் தீர்மான கமிட்டியின் கன்வீனர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் தீர்மானங்களை வடிவமைத்தார். மாநிலச்சங்க நிர்வாகிகள் முன்மொழியவும், வழிமொழியவும் சார்பாளர்களின் கரகோஷங்களுக்கிடையே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

    ♣2017 முதல் BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்  வழங்கும்போது ஓய்வூதியருக்கு பென்ஷன் மாற்றம் வழங்க வேண்டும்.

    ♣புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

    ♣நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை வழங்க வேண்டும்.

    ♣கம்யூடேஷன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்கவேண்டும்.  

    ♣ஓய்வூதியருக்கு  முழுமையான வருமானவரிவிலக்கு அளிக்க வேண்டும்.  

    ♣ அடிப்படை சம்பளத்தில் 60சதம் பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.

    ♣7வது சம்பளக்கமிஷன்  பரிந்துரைகளில் அனைத்துப் பயன்களும் ஓய்வூதியருக்கு கிடைக்க வேண்டும்.

    ♣பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டும்.

    ♣BSNLஐ தனியார் மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து BSNL  ஊழியர் சங்கம் நடத்தும் இயக்கங்களில் பங்குபெற வேண்டும்.

    ♣ஊதிய மாற்றத்திற்காக  BSNL ஊழியர் சங்கம் நடத்தும் இயக்கங்களில் AIBDPA பங்கேற்க  வேண்டும்.

    அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

     

  • AIBDPA தமிழ்மாநில நிர்வாகிகள் பட்டியல்

    AIBDPA தமிழ்மாநில நிர்வாகிகள் பட்டியல்.

      நெல்லை மாவட்டம் இலஞ்சியில் 2017 பிப்ரவரி  19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற 4வது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள்  ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    Jpeg

    Jpeg

    மாநிலத்தலைவர் : தோழர்.P.மாணிக்கமூர்த்தி, கடலூர்

     

    துணைத் தலைவர்கள் :

    தோழர் S. மோகன்தாஸ், கோவில்பட்டி

    தோழர். P. ராமசாமி, சேலம்

    தோழர். K. காளிபிரசாத், நாகர்கோவில்

    தோழர். M. பெருமாள்சாமி, விருதுநகர்

    தோழர். S. தாமஸ், திருநெல்வேலி

     

    மாநிலச்செயலர்   :    தோழர்.  C.K. நரசிம்மன், சென்னை

     

    மாநில துணைச் செயலர்கள் :

    தோழர். N. குப்புச்சாமி, ஈரோடு

    தோழர். K. பங்கஜவல்லி, கோவை

    தோழர். B. சௌந்திரபாண்டியன், திருப்பூர்

    தோழர். R.A. பக்கிரிநாதன், குடந்தை

    தோழர். C. ஞானசேகரன், வேலூர்

     

    மாநிலப் பொருளாளர்  :   தோழர். S. நடராஜா, சென்னை 

     

    அமைப்புச்செயலர்கள்  :

     தோழர். B.C. கீதா, சென்னை

    தோழர்.N. சின்னையன், ஈரோடு

    தோழர். L. உமாபதி, கோவை

    தோழர். K. கிருஷ்ணமூர்த்தி, வேலூர்  

    தோழர். K. சின்னையன், திருச்சி

    தோழர். M. செல்வராஜ், மதுரை.

     

    சிறப்பு அழைப்பாளர்கள் :

     தோழர். முத்துகுமாரசாமி, கடலூர்

    தோழர். லியோ பிரான்ஸிஸ் ஜோசப், கோவை    

    தோழர். M. ராதாகிருஷ்ணன், காரைக்குடி

    புதிய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 

  • மைசூரு மத்திய செயற்குழு

    AIBDPA மத்தியச்சங்க செயற்குழு.

    1488475433826-1664929464

               கடந்த 2017 பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் கர்நாடகாவில் உள்ள மைசூருவில் தொலைத்தொடர்பு பயிற்சி கேந்திர மையத்தின் குஞ்சானந்தன் அரங்கில் நடைபெற்றது. அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் பொது அரங்கு நடைபெற்றது. NCCPA பொதுச்செயலர் தோழர். K.K.N.குட்டி துவக்க உரை நிகழ்த்தினார். AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். BSNLEU   கர்நாடகா மாநிலச் செயலர் தோழர். C. குண்டண்ணா வாழ்த்துரை வழங்கினார். செயல்பாட்டறிக்கை,     வரவுசெலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ்,    அகில இந்திய கொள்கைபரப்பு செயலர் தோழர். K. காளிபிரசாத், மாநில உதவிச் செயலர் தோழர். M. பெருமாள்சாமி  ஆகியோர் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகள்:- 

    1. பென்ஷன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்கப்பட வேண்டும்.

    2. 01-01-2017 முதல் 50சத IDAவை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.

    3. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

    4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1 அனுமதிக்க வேண்டும்.

    5. நிலுவையிலுள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.

    6. குடியிருப்பில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டத் திட்டங்கள் மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. 

    • 2017 மார்ச் கடைசி வாரத்தில் பிரச்சார இயக்கம் நடத்துவது.
    • 2017 ஏப்ரல் 20  கவன ஈர்ப்பு நாள்.
    • 2017 மே 25 மாவட்ட அளவில் பெருந்திரள் தார்ணா.

    மாவட்டச்செயலர்கள் மேற்கண்ட போராட்டங்கள் வெற்றியடைய அனைத்து முயற்சிகளையு எடுக்க வேணடும் என மாநிலச்சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.