• மைசூரு மத்திய செயற்குழு

  AIBDPA மத்தியச்சங்க செயற்குழு.

  1488475433826-1664929464

             கடந்த 2017 பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் கர்நாடகாவில் உள்ள மைசூருவில் தொலைத்தொடர்பு பயிற்சி கேந்திர மையத்தின் குஞ்சானந்தன் அரங்கில் நடைபெற்றது. அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் பொது அரங்கு நடைபெற்றது. NCCPA பொதுச்செயலர் தோழர். K.K.N.குட்டி துவக்க உரை நிகழ்த்தினார். AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். BSNLEU   கர்நாடகா மாநிலச் செயலர் தோழர். C. குண்டண்ணா வாழ்த்துரை வழங்கினார். செயல்பாட்டறிக்கை,     வரவுசெலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

              அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ்,    அகில இந்திய கொள்கைபரப்பு செயலர் தோழர். K. காளிபிரசாத், மாநில உதவிச் செயலர் தோழர். M. பெருமாள்சாமி  ஆகியோர் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டனர்.

  கோரிக்கைகள்:- 

  1. பென்ஷன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்கப்பட வேண்டும்.

  2. 01-01-2017 முதல் 50சத IDAவை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.

  3. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

  4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1 அனுமதிக்க வேண்டும்.

  5. நிலுவையிலுள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.

  6. குடியிருப்பில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டத் திட்டங்கள் மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. 

  • 2017 மார்ச் கடைசி வாரத்தில் பிரச்சார இயக்கம் நடத்துவது.
  • 2017 ஏப்ரல் 20  கவன ஈர்ப்பு நாள்.
  • 2017 மே 25 மாவட்ட அளவில் பெருந்திரள் தார்ணா.

  மாவட்டச்செயலர்கள் மேற்கண்ட போராட்டங்கள் வெற்றியடைய அனைத்து முயற்சிகளையு எடுக்க வேணடும் என மாநிலச்சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.