• AIBDPA 4வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

    AIBDPA 4வது மாநில மாநாட்டு தீர்மானங்கள்.

            நெல்லை மாவட்டம் இலஞ்சியில் 2017 பிப்ரவரி  19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற 4வது மாநில மாநாட்டில் தீர்மான கமிட்டியின் கன்வீனர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் தீர்மானங்களை வடிவமைத்தார். மாநிலச்சங்க நிர்வாகிகள் முன்மொழியவும், வழிமொழியவும் சார்பாளர்களின் கரகோஷங்களுக்கிடையே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

    ♣2017 முதல் BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்  வழங்கும்போது ஓய்வூதியருக்கு பென்ஷன் மாற்றம் வழங்க வேண்டும்.

    ♣புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

    ♣நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை வழங்க வேண்டும்.

    ♣கம்யூடேஷன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்கவேண்டும்.  

    ♣ஓய்வூதியருக்கு  முழுமையான வருமானவரிவிலக்கு அளிக்க வேண்டும்.  

    ♣ அடிப்படை சம்பளத்தில் 60சதம் பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.

    ♣7வது சம்பளக்கமிஷன்  பரிந்துரைகளில் அனைத்துப் பயன்களும் ஓய்வூதியருக்கு கிடைக்க வேண்டும்.

    ♣பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டும்.

    ♣BSNLஐ தனியார் மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து BSNL  ஊழியர் சங்கம் நடத்தும் இயக்கங்களில் பங்குபெற வேண்டும்.

    ♣ஊதிய மாற்றத்திற்காக  BSNL ஊழியர் சங்கம் நடத்தும் இயக்கங்களில் AIBDPA பங்கேற்க  வேண்டும்.

    அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.