• ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி நீடிப்பு

    ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி நீடிப்பு – பெற்றுத்தந்த BSNLEUவுக்கு நன்றி  . 

             வாடிக்கையாளர்களுக்கு இரவு இலவச அழைப்பு வசதியை BSNL நிறுவனம் வழங்கியபொழுதே அதனை பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் நீடிப்பு செய்ய வேண்டும் என்று பலதடவையும் கோரிக்கை வைத்தது BSNL ஊழியர் சங்கம். அதனடிப்படையில் பகுதி கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதாவது இன்று BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இரவு இலவச அழைப்பு வசதி  நீடிப்பு செய்வதாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.  

    BSNL கடித எண் :  2 – 03 / 2006 – PHA (pt) dated 09- 03- 2017.PHA Free Night calling

         இந்த வசதியினை  முழு முயற்சி எடுத்து  பெற்றுத்தந்த  BSNL ஊழியர் சங்கத்திற்கும் பொதுச் செயலர் தோழர். அபிமன்யூவுககும் AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.