• தார்மீக ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்தியசெயற்குழு முடிவு

  மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்  2017 மார்ச் 16.

  ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்திய செயற்குழு முடிவு.

  AIBDPA மத்தியச்சங்கம் தார்மீக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அறைகூவல். 

  அடிப்படை ஊதியத்தை  ரூபாய் 21000/- மாக மாற்றி அமை !

  01-01-2016 முதல் புதிய பார்முலாவின்படி வீட்டுவாடகைப்படி, பயணப்படி முதலியவற்றை வழங்கிடு !

  அஞ்சல் பகுதியில் 2.5லட்சம்   ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்து !

  உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 16 மார்ச் 2017ல்  மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்துள்ளனர். 

  வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு இயக்கம் நடத்திட மைசூரு மத்தியச்செயற்குழு  அறைகூவல் விட்டுள்ளதாலும், மாநிலளவில் நடைபெற்ற அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் அனைத்து மாவட்டச் செயலர்களும் உரியகவனம் செலுத்தி   ஆதரவு இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.