• ஈரோடு நகர் பகுதியில் கிளைகள் அமைப்பு மாநாடு

    வெற்றிகரமாக நடைபெற்ற ஈரோடு கிளைகள் அமைப்பு மாநாடு.

     

                ஈரோடு மாவட்ட சங்கத்தின் ஈரோடு நகர் பகுதியில் உள்ள அனைத்து கிளைகள் அமைப்பு மாநாடு ஈரோட்டில் 18.3.2017 அன்று ஈரோடு தொலைபேசி நிலையத்தில் வைத்து மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. தோழர் மாணிக்கம் மேற்கு கிளை அமைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி  துவக்கி வைத்தார். AIBDPA மாநில உதவி செயலாளர்  தோழர். B. செளந்தரபாண்டியன்  சிறப்புரை வழங்கினார். ஈரோடு நகர் தெற்கு – 1, தெற்கு – 2, ஈரோடு மேற்கு மற்றும் ஈரோடு கிழக்கு ஆசிய நான்கு கிளைகள் நிர்வாகிகள் தேர்தலை மாநில உதவி செயலாளர் தோழர். N. குப்புசாமி நடத்தி வைத்தார். நான்கு கிளைகள் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் L பரமேஸ்வரன், AIBDPA மாநில அமைப்பு செயலாளர் தோழர். N. சின்னையன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 75 தோழர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளர் தோழர் அய்யாசாமி நன்றி கூறினார்.

           புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஈரோடு மாவட்ட ஓய்வூதியர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்.