• நெல்லையில் AIBDPA சிறப்புக்கூட்டம்.

                 இன்று 21-03-2017ல் நெல்லையில் நடைபெற்ற AIBDPA சிறப்புக்கூட்டம் மாவட்டத்தலைவர்  தோழர். முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். D. கோபாலன் அனைவரையும் வரவேற்றார்.

    Jpeg

    Jpeg

    Jpeg

               நமது மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் தனது சிறப்புரையில் சிறப்பாக 4வது மாநில மாநாட்டை நடத்திய நெல்லை மாவட்டத்தை பாராட்டியதோடு மைசூரு  மத்தியச்செயற்குழு வடித்தெடுத்த போராட்டங்களை விளக்கி பேசினார். மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, மாநில துணைத்தலைவர்கள் தோழர். K. காளிபிரசாத், தோழர். S. தாமஸ்,  BSNLEU மாநிலத் தலைவர் தோழர். சுவாமிகுருநாதன், நாகர்கோவில் மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம், விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். M. அய்யாச்சாமி, தூத்துக்குடி மாவட்டச்   செயலர் தோழர். P. ராமர், மாவட்டப் பொருளாளர் தோழர். சீதாலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் நிறைவுரை ஆற்றினார்.