• மதுரை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்

     

      மதுரை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். R. மஹபூப் ஜான் தலைமையில் இன்று  30-03-2017 ல் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். N. ஆதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். ஜான் போர்ஜியா , AIBDPA மாநில அமைப்புச்செயலர் தோழர். M. செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினர்.

        மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர். சிறப்புரையில் மைசூரு மத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் இயக்கங்கள், மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள், 7வது ஊதியக் குழு பரிந்துரைகள், பிஎஸ்என்எல் சங்கங்களின் ஏப்ரல் 5தேதி போராட்டம் மற்றும் இன்றைய அரசியல் சூழல்களை எடுத்துரைத்தனர். கூட்ட முடிவில் தோழர். R. சண்முக வேலு நன்றி கூறினார்.