• மே தின வாழ்த்துக்கள் !

  சபதமேற்போம்……… !

  அனைத்துப்பகுதி உழைப்பாளிகளின் சலுகைகளை உரிமைகளை பாதுகாத்திட…. !

  ஓய்வூதியத்தை / ஓய்வூதியர்களை பாதுகாத்திட…. !

  விவசாயி / விவசாய தொழிலாளர்கள் வாழ்வை சீரழிப்பதை தடுத்திட….. !

  ஏழைகளின் கல்வியை கேள்விகுறியாக்கி நடைபெறும் கல்வி வியாபாரத்தை தடுத்திட……!  

  கொள்ளை போகும் கனிமவளத்தை  பாதுகாத்திட…. !

  தாண்டவமாடும் சாதிவெறி / மதவெறியை தடுத்திட…….!  

  பொதுதுறைகளை பாதுகாத்திட……. !

  இந்த மே தினத்தில் சபதம்ஏற்போம்….. ! 

  அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள் .

 • விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான இயக்கங்களில் பங்கெடுப்போம்

  விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் 25.04.2017ல் நடைபெரும் வேலைநிறுத்தத்தில்.

  1. தென்னக நதிகளை இணைக்க வேண்டும் !

  2. விவசாயிகளுக்கு வறட்சிக்குரிய நிவாரணம்  வழங்க வேண்டும் !

  3. அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் !

    உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரி தமிழக கட்சிகள், வணிகர் சங்கங்கள், மத்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்கள், CITU AITUC LDF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் என அனைவரும் இணைந்து 25-04-2017ல் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

          நமது BSNL  சங்கங்களும் ஆதரவு இயக்கங்கள் நடத்திட அறைகூவல் விட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் நாமும் பங்கெடுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவு இயக்கங்கள் நடத்திட AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • நாடெங்கிலும் சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு தினம்”

         தமிழக கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டங்கள்.

            சென்னை மாவட்டச்சங்கம் சார்பில் சென்னை மாநில அலுவலகம் முன்பு தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் இன்று 20.04.2017 காலை 1100மணி அளவில் “கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.

  AIBDPA மாநிலச் செயலர் C.K. நரசிம்மன் மைசூரு மத்திய செயற்குழு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். சரவணன், மாநிலமைப்புச் செயலர் தோழர். C. சின்னையன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராமன் நன்றி கூறினார்.

  செனனை போராட்டம்

  தூத்துக்குடி போராட்டம்

  Jpeg

          20-04-2017 அன்று காலை 1100 மணி அளவில் மைசூரு மத்திய செயற்குழு முடிவின்படி “கவன ஈர்ப்பு தினம்” தூத்துக்குடி GM அலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P.ராமர் 17 அம்ச கோரிக்கைகளையும் விளக்கி பேசினார். மேலும் அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் கோரிக்கைகளை விளக்கியதோடு இன்றைய ஓய்வூதிய பலன்களையும் அதற்கு வர இருக்கும் ஆபத்துகளையும் விளக்கி பேசினார்.40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார்.

  Chinnachamy.p .DS.AIBDPA.. ஈரோடு பொது மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம். மத்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் 20. 4.17. அன்று ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். 60 க்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் தோழர் சிவஞானம் தலைமை வகித்தார் தோழர் சின்னசாமி மாவட்ட செயலாளர் தோழர் குப்புசாமி. மாநில துணை செயலாளர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். தோழர். சின்னையன் மாநில அமைப்பு செயலாளர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றி.

  கோவையில் 120க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட கவன ஈர்பபு தின போராட்டம்.

  நாகர்கோவிலில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தின போராட்டம் மாவட்டத்தலைவர்  தோழர். சாகுல் ஹமீது  தலைமையில் மாலை 0400மணி அளவில் நடைபெற்றது. துவக்க உரை அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் பேசினார். BSNLEU மாவட்டச் செயலர் தோழர். ராஜூ வாழ்த்துரை வழங்கினார்.

  நெல்லையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தின போராட்டம் மாவட்டத்தலைவர் தோழர். ச. முத்துச்சாமி தலைமையில் காலை 1100மணி அளவில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். D. கோபால் பேசினார்.

  வேலூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தின கூட்டம்.

   

 • 2017 ஏப்ரல் 20 கவன ஈர்ப்பு தினம்

  மைசூரு மத்தியச்செயற்குழு முடிவை அமுல்படுத்த மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

  1. 01-01-2017 முதல் பென்ஷன் மாற்றம் வழங்கப்பட வேண்டும் !

  2. 01-01-2017 முதல் 50சத பஞ்சப்படியை ஓய்வூதியத்தோடு இணைக்க வேண்டும்.

  3. மருத்துவப்படியினை உடனடியாக வழங்க வேண்டும்.

  4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1ஐ அனுமதிக்க வேண்டும்.

  5. நிலுவையில் உள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்கவேண்டும்.

  6. தொலைத்தொடர்பு ஊழியர் குடியிருப்புகளில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.

  7. 01-01-2007 முதல் 78.2சத பஞ்சப்படி இணைப்பில் நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.

  8. மருத்துவப்பில்களை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

  9. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

  10. BSNL & DOT ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச தொலைபேசி அழைப்பு வசதிகளை நீடிப்பு செய்ய வேண்டும்.

  11. DOT ஓய்வூதியர்களுக்கு CGHS மருத்துவ வசதிகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.

  உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க 3 கட்ட போராட்டங்களை மைசூரு மத்திய செயற்குழு அறிவித்தது. அதன்படி முதற்கட்ட போராட்டமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

      இரண்டாவது கட்ட போராட்டமாக அனைத்து மட்டங்களிலும் 2017 ஏப்ரல் 20ம் தேதி “கவன ஈர்ப்புதினம்” நடத்திடவும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும் அறைகூவல் விட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும் “கவன ஈர்ப்புதினம்”  சக்திமிக்கதாக நடத்திட மாவட்டச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

   

   

 • உற்சாகமாக நடைபெற்ற புதுவை மாவட்ட சிறப்புக்கூட்டம்

       

  [Read More…]

 • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய தமிழ் (ஹேவிளம்பி) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 • NCCPA மாவட்ட அமைப்பு நாகர்கோவிலில் உதயம்

  NCCPA மாவட்ட அமைப்பு நாகர்கோவிலில் உதயம்.

           National Coordination Commttiee of Pentioners Association தேசிய அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சங்கங்களின் மாவட்ட அமைப்பை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்திட AIBDPA மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 10.04.2017 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற அமைப்பு கூட்டத்தில் CGPA, AIBDPA, AIPRA, RAILWAY, EXCISE சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு NCCPA மாவட்ட அமைப்பை துவக்கிவைத்தனர். 

       NCCPA மாவட்ட அமைப்பின் நிர்வாகிகளாக கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

  மாவட்டத்தலைவர் தோழர். A. மீனாட்சி சுந்தரம் (AIBDPA). 

  மாவட்ட துணைத்தலைவர் தோழர். S. சுப்பிரமணியம் (CGPA). 

  மாவட்டச் செயலர் தோழர். ராஜநாயகம் (AIPRPA).

  இணைச் செயலர் தோழர்.ஜெயச்சந்திரன்(Railway).

  மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. காளிபிரசாத் (AIBDPA).

  மாவட்டப் பொருளாளர் தோழர். ஜாண்சன் (Railway).

  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். அமல்ராஜ் (Excise). 

 • சந்தோஷமான செய்தி – ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி – உத்தரவு வெளியீடு.

  ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியாகி உள்ளது.

         நமது தொடர் முயற்சியாலும் வலுவான போராட்டங்களாலும் BSNL நிர்வாகம் ஓய்வூதியர்களுக்கு முன்புபோல் காலாண்டுக்கு ஒரு முறை மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியிட்டுள்ளது.

   உத்தரவு எண் : BSNL / Admn.1 / 15-22 / 14 dated 11-04-2017.

               2012 முதல் நிறுத்தப்பட்ட மருத்துவப்படி தொடர் முயற்சியால் மீண்டும் வழங்கிட BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை வழங்கிடவும் பரிசார்த்தமாக 6 மாதங்கள் வழங்கிடவும் உத்தரவு வெளியாகி உள்ளது. உத்தரவு வெளியிட்ட BSNL நிர்வாகத்திற்கும் மருத்துவப்படி கிடைத்திட தொடர்ந்து போராடிய  AIBDPA தலைவர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் BSNLEU சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

   

 • கவன ஈர்ப்பு தின போராட்டங்கள் – AIBDPA தோழர்கள் உற்சாக பங்கேற்பு

    05-04-2017  தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு  தின போராட்டங்கள்.

         05-04-2017  தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு  தின போராட்டங்களில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம் , விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், நீலகிரி, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் AIBDPA தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மாவட்ட செயலர்கள் போராட்டத்தை வாழ்த்திபேசினர்.  

        சென்னை மாநில அலுவலகம் முன்பு நடைபெற்ற வாயிற்கூட்டத்திகு  SNEA தலைவர் தோழர். G. வளனரசு  தலைமை தாங்கினார்.  BSNLEU அனைத்திந்திய உதவிச் செயலர் தோழர். S. செல்லப்பா போராட்டத்தை விளக்கி பேசினார்.  AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் உட்பட பல தலைவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். CGM அலுவலக மாவட்டச்செயலர் தோழர். அன்புமணி நன்றி கூறினார். 

  சென்னை கவன ஈர்ப்பு தின போராட்டம்.

  ஈரோடு மாவட்டத்தில் கவன ஈர்ப்பு தினம்

  சேலம் மாவட்ட கவன ஈர்ப்பு தின போராட்டம்

  தூத்துக்குடி மாவட்ட கவன ஈர்ப்பு தின போராட்டம்

 • சென்னையில் சிஐடியு மாபெரும் பேரணி – கோட்டை முற்றுகை

  சென்னையில் சிஐடியு மாபெரும் முற்றுகை

  சென்னை, ஏப். 4 – 2017.

  உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.

  1) ஒப்பந்த முறையை ஒழித்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

  2) குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்,

  3) தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தைநிறைவேற்ற வேண்டும்,

  4) தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை கைவிட்டு காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

  5) முறைசாரா நலவாரியங்களை முறைப்படுத்த வேண்டும்,

  6) குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்,

  7) மோட்டார் வாகன கட்டண உயர்வுகளை குறைத்திட வேண்டும்,

  8) பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும்,

  9) வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,

  10) பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்

  என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாயன்று (ஏப்.4) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

      எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இருந்து துவங்கிய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப்பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே.திருச்செல்வன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர்.

  தலைமைச் செயலருடன் சந்திப்பு

  சிந்தாதிரிப்பேட்டை அருகே காவலர்கள் பேரணியை தடுத்து நிறுத்தினர். சங்கத் தலைவர்கள் 8 பேரைதலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். அங்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து மனு அளித்தனர்.