• கவன ஈர்ப்புதினம் – 05.04.2017 – ஆதரவு இயக்கங்களில் பங்களிப்போம் !

  கவன ஈர்ப்புதினம் – 05.04.2017

  கோரிக்கைகள் :-

  1) BSNL ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு 1.1.2017 முதல் ஊதியமாற்றம் செய்திடுக!
  2) 1.1.2017 முதல் ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்திடுக!
  3) நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமலாக்கிடுக!
  4) வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை கணக்கிடுக !

   

      15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2017 பிப்ரவரி 23&24ல் கூடிய AIBDPA   மைசூரு மத்தியச்செயற்குழு அந்தப் போராட்டத்தில் முழுமையாக ஓய்வூதியத் தோழர்கள் பங்குபெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்மாநிலச் சங்கமும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறது.

  அதற்கான தயாரிப்பு பணிகளில் மாவட்டச் செயலாளர்கள்  உரிய கவனம்  செலுத்தி போராட்டம் வெற்றிபெற ஆதரவு இயக்கங்களில் பங்குபெற்று வேண்டுகிறோம். 

  ஒன்று பட்டு போராடுவோம் ! வெற்றி பெறுவோம்.!!

 • பஞ்சப்படி குறைப்பு 01-04-2017 முதல் 2.3 சதம்.

   பஞ்சப்படி குறைப்பு 01-04-2017 முதல் 2.3 சதம்.

  01-04-2017 முதல் பஞ்சப்படி (IDA) 2.3 சதம் குறைந்து மொத்தம் 117.2 சதமாக வழங்கப்படும் என தெரியவருகிறது.