• வெற்றிகரமாக நடைபெற்ற தார்ணா 25.05.2017

  மைசூரு மத்திய செயற்குழு முடிவின்படி வெற்றிகரமாக நடைபெற்ற தமிழகம் தழுவிய தார்ணா போராட்டங்கள்.

  கோரிக்கைகள்:- 

  1. பென்ஷன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்கப்பட வேண்டும்.

  2. 01-01-2017 முதல் 50சத IDAவை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.

  3. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

  4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1 அனுமதிக்க வேண்டும்.

  5. நிலுவையிலுள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.

  6. குடியிருப்பில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.

  7. மாதம்தோரும் மருத்துவப்படி ரூபாய். 2000/- வழங்க வேண்டும்.  உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் நீங்கலாக தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக தார்ணா போராட்டம் நடைபெற்றது.

  8. போராட்டத்தை விளக்கி AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் உரையாற்றுகிறார்.

  சென்னையில் CGM மாநில அலுவலகம் முன்பு போராட்டத்தை வாழ்த்தி BSNLEU AGS தோழர். S. செல்லப்பா உரை.

  ஈரோட்டில் நடைபெற்ற தார்ணா 

        மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 25.5.17 இன்று ஈரோட்டில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம் தலைமை வகித்தார். தோழர் அய்யாசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர் N. சின்னையன் மாநில அமைப்பு செயலாளர் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர்.P. சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர்.L. பரமேஸ்வரன் மாவட்ட செயலாளர் BSNLEU, தோழர் S. முருகேசன் Postal&RMS ஓய்வூதியர் சங்கம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈரோடு கிளை செயலாளர் தோழர். மாணிக்கம் நன்றி கூறினார்.

  ஈரோடு மாவட்ட தார்ணா

  வேலூர் மாவட்ட தார்ணா

  நெல்லை மாவட்ட தார்ணா.

             மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 25.5.17 இன்று நெல்லையில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். முத்துசாமி தலைமை வகித்தார். தோழர். S. தாமஸ் மாநில உதவித்தலைவர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர். K. சீதாலட்சுமி மாநில அமைப்பு செயலாளர் BSNLEU, மாவட்ட செயலாளர் தோழர்.  D. கோபாலன், தோழர். S. நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தோழர். முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.நெல்லை GM அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்ற தர்ணாவில் சுமார் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

  தூத்துக்குடி மாவட்ட தார்ணா.

  தூத்துக்குடியில்  மாபெரும் தார்ணா – AIBDPA நாடு தழுவிய போராட்டம். 25.05.2017 வியாழக்கிழமை மாலை 0230மணி. தலைமை தோழர். T. சுப்பிரமணியன். முன்னிலை தோழர். T.K. ஸ்ரீனிவாசன். போராட்டத்தை விளக்கி மாவட்டச்செயலர் தோழர். P. ராமர், அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் பேசினர்.போராட்டத்தை வாழ்த்தி BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன், தோழர். A. சந்திரசேகர் மற்றும் பலர் பேசினர். மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார்.

  புதுச்சேரி மாவட்ட தார்ணா.

  விருதுநகர் மாவட்ட தார்ணா.

         25.05.17 அன்று விருதுநகரில் அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி “மாபெரும் தர்ணா” போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 11பெண்கள் உட்பட 64பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். M.அய்யாச்சாமி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், மத்திய மின்சார ஓய்வூதியர் நலச்சங்கம், அரசுபோக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்கம், வங்கி ஓய்வூதியர்களின் சங்கம் மற்றும் AIBSNLEAஆகிய சங்கங்களின் மாவட்டத்தலைவர்கள் பேசினார்கள். தோழர். S. மோகன்தாஸ் (அனைத்திந்திய துணைத் தலைவர்) சிறப்புரையாற்றினார்.

  நாகர்கோவில் மாவட்ட தார்ணா

                 25.05.2017 அன்று நாகர்கோவில் மாவட்ட AIBDPA சார்பில் நடைபெற்ற  தார்ணாவை மாவட்டத் தலைவர் தோழர். A. சாஹுல் ஹமீது தலைமை ஏற்றார். அனைத்திந்திய அமைப்புச்செயலர் தோழர். K.  காளிபிரசாத் தார்ணாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.  மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் போராடட்த்தை விளக்கிப் பேசினார். BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர். V. P. இந்திரா, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். P. ராஜூ, NCCPA மாவட்டச் செயலர் தோழர். ராஜநாயகம், அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தலைவர் தோழர். சிவதாணுபிள்ளை உட்பட பலர் தார்ணாவை வாழ்த்தி பேசினர்.

  கோவை மாவட்ட தாரணா

  குடந்தை மாவட்ட தார்ணா

  திருச்சி மாவட்ட தாரணா.

           திருச்சி மாவட்ட AIBDPAன் சார்பில் 25.05.2017 அன்று நடைபெற்ற தார்ணாவை மாவட்டத் தலைவர்  தோழர். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச்செயலர் தோழர். ஜான்பாஷா உரை யாற்றினார்.  மாநில அமைப்புச் செயலர் தோழர். பி.சின்னையன்கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

  போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் சிறப்பாக நடத்திட்ட மாவட்டச்சங்கங்களையும் தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.  

 • கடலூர் மாவட்ட மாநாடு

  உற்சாகமாய் நடைபெற்ற கடலூர் மாவட்ட மாநாடு.

       23.05.2017 அன்று விழுப்புரம் ராமகிருஷ்ணா லாட்ஜ் தோழர். V. துரைராஜ் அரங்கில் வைத்து கடலூர் மாவட்ட மாநாடு மாவட்டத்தலைவர் தோழர். G. கோவிந்தராஜூலூ தலைமையில் நடைபெற்றது. தோழர். C. பாண்டுரங்கன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். வரவேற்புக்குழு செயலர் தோழர். N. மேகநாதன் மற்றும் AIBDPA மாவட்டச்செயலர் தோழர். S. முத்து குமாரசாமி வரவேற்புரை நிகழ்த்தினர்.

              CPM முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். R. ராமமூர்த்தி மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். மாநிலத்தலைவர் P. மாணிக்கமூர்த்தி மாநிலச்செயலர் தோழர். C.K.நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

         விழுப்புரம் DE(M) திரு. V. இளவழகன், தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க தோழர். P. சிவலிங்கம், BSNLEU முன்னாள்  மாநில அமைப்புச் செயலர் தோழர். A. அண்ணாமலை,  BSNLEU மாவட்டச்செயலர் தோழர். K.T. சம்பந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் மாவட்டச்செயலர் மற்றும் மாவட்டப் பொருளாளர் முன்வைத்த செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

        பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக தோழர். N. மேகநாதனும்   மாவட்டச் செயலராக தோழர். I.M. மதியழகனும் மாவட்டப் பொருளாளராக தோழர். B. சந்திரசேகரனும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மாநாட்டை சிறப்பாக நடத்திய கடலூர் தோழர்களுக்கும், மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளையும் தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டி வரவேற்கிறது. 

   

 • நாடு தழுவிய தார்ணாவை சிறப்பாக நடத்துவோம் !

  ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட 25.05.2017  தார்ணாவை வெற்றிகரமாக்குவோம் !

            மைசூரு மத்தியச் செயற்குழு முடிவுகளை அமுல்படுத்தும் விதமாக 3ம் கட்ட போராட்டமாக மாபெரும் தார்ணா மாநில / மாவட்ட தலைநகரங்களில் 25-05-2017ல் நடத்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

  கோரிக்கைகள்:- 

  1. பென்ஷன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்கப்பட வேண்டும்.

  2. 01-01-2017 முதல் 50சத IDAவை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.

  3. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

  4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1 அனுமதிக்க வேண்டும்.

  5. நிலுவையிலுள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.

  6. குடியிருப்பில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.

  7. மாதம்தோரும் மருத்துவப்படி ரூபாய். 2000/- வழங்க வேண்டும்.

  8. உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட  போராட்டத் திட்டங்கள் மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் முதல் கட்டமாக மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார இயக்கம்வெற்றிகரமாக நடத்தினோம். 2வது கட்டமாக கவன ஈர்ப்பு தினம் சிறப்பாக நடத்தினோம். 3வது கட்டமாக நாடு முழுவதும் மாபெரும் தார்ணா 25.05.2017 உற்சாகமாகநடத்துவோம்.

  9. அதற்கான பணிகளை அனைத்து மாவட்டச்செயலர்களும் உரிய கவனம் செலுத்தி தார்ணாவை நடத்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • BSNLEU 8வது தமிழ் மாநில மாநாடு – ஈரோட்டில்.

   BSNLEU 8வது தமிழ் மாநில மாநாடு – ஈரோட்டில்.

      19.5.17 மற்றும்  20.5.17 தேதிகளில்  ஈரோட்டில் நடைபெற்ற  BSNLEU தமிழ் மாநில மாநாடு மாநிலத் தலைவர் தோழர். S. செல்லப்பா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ, AIBDPA மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன், தமிழ்மாநில தலைமை பொது மேலாளர் மற்றும் சகோதர சங்க தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

  BSNLEU 8வது மாநில மாநாட்டில் தோழர். C.K.நரசிம்மன் வாழ்த்துரை.

       மாநாட்டில் நிறைவாக தோழர்.S. செல்லப்பா மாநில தலைவராகவும், தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் மாநிலச் செயலாளராகவும், தோழர். K. சீனிவாசன் மாநில பொருளாளராகவும்   ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  மாநிலமாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்.

       AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 • ஈரோடு மாவட்ட AIBDPA பேரவை கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற  ஈரோடு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்.

            ஈரோடு மாவட்ட AIBDPA சங்க சிறப்பு பேரவை கூட்டம்  19.5.2017 அன்று  மாவட்ட தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் ஈரோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.   மாவட்டச் செயலர் தோழர். P. சின்னசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் பேரவைக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில் மைசூரு மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் முடிவுகள், நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 78.2% இணைப்பு நிலுவை வாங்கி கொடுக்க மாநில சங்கம் எடுத்த முயற்சிகளை விளக்கினார்.

      01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம், 01.01.2017 முதல் 50சத பஞ்சப்படி இணைப்பு, மாதம்தோறும் மருத்துவப்படி ரூபாய் 2000/- வழங்கிடக்கோரியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் 25.5.2017 அன்று நடைபெற உள்ள தர்ணா போராட்ட த்தை சிறப்பாக நடத்த வலியுறுத்தி பேசினார்.

         மாநில துணை செயலாளர் தோழர். N. குப்புசாமி நமது கோரிக்கைகளை வென்றெடுக்க BSNLEU சங்கம் நடத்திய போராட்டங்களையும், உதவிகளையும்  விளக்கி பேசினார்.

     கோவை மாவட்ட செயலாளர் தோழர்.P.B. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் தோழர்.  K. பங்கஜவல்லி, மாநில அமைப்புச் செயலர்கள் தோழர். L. உமாபதி, தோழர். N. சின்னையன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

          10 தோழியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் நிறைவில் ஈரோடு கிளை செயலாளர்  தோழர். மாணிக்கம்  நன்றி கூறினார்.

 • உற்சாகமாய் தொடங்கும் BSNLEU 8வது மாநில மாநாடு

  BSNLஐ பாதுகாத்திடும் BSNLEU சங்கத்தின் 8வது தமிழ்மாநில மாநாடு – ஈரோடு மாநகரில்.

                 BSNL ஊழியர் சங்க தமிழ்மாநில 8வது மாநாடு வெற்றிபெற AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • உற்சாகமாக தொடங்கிய வேலைநிறுத்தம்.

  தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களின் (TNSTC) வேலைநிறுத்தம் .

  1) பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை

  2) தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை

  உள்ளிட்ட ஊழியர்களின் 7000 ஆயிரம் கோடி  பணத்தை ( அரசு முறைகேடாக பயன்படுத்தியதை) வழங்கிடவும்

  3) போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும் 

  4) ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கவும் கோரி ..

  சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்   தொடங்கிஉள்ளனர்.

  வேலைநிறுத்தம் செய்யும் தோழர்களை பாராட்டுகிறோம். வேலைநிறுத்தம் வெற்றிபெற தமிழ் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

 • பஞ்சப்படி பட்டியல் (IDA table)

  78.2 சத பஞ்சப்படி கணக்கீடு செய்ய பஞ்சப்படி பட்டியல் (IDA table) காணவும்.

  cdaida

  cdaida

 • மருத்துவப்படி சில விளக்க உத்தரவு குறிப்புக்கள்

  மருத்துவப்படி வழங்குவதில் உள்ள சந்தேகங்களுக்கான விளக்க உத்தரவுகள்.

  After Corporate office issued orders restoring quarterly medical allowance ,limiting it to 50% of what was entitled, many queries and doubts are being raised, as to what would be the real impact of the order. In this connection the relevant order issued by the corporate office is given,which is self explanatory.

  view the orderELIGIBILITY OF MEDICAL ALLOWANCE-RELEVANT ORDER. 

  குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவச்செலவு (Medical Reimbursement Sheme)  ஈடுசெய்யும் திட்டத்தில் பயனளிப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கான உத்தரவு.

  Another doubt being raised is whether family pensioners are eligible for MRS. Yes, they are very much eligible and the relevant order is reproduced.

  view the order>FAMILY PENSIONERS ARE ELIGIBLE FOR MRS- CLARIFICATION

 • உற்சாகமாய் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கோவை சிறப்புக்கூட்டம்

  கோவை மாவட்ட மத்திய மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்புக்கூட்டம்.

     

  கோவை மாவட்ட மத்திய மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்புக்கூட்டம் 06.05.2017 அன்று வடகோவை ராமலிங்கம் காலனி மாநகராட்சி திருமண மண்டபத்தில்  வைத்து தோழர். N. சின்னச்சாமி (மின்வாரியம்) தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தோழர். S. சந்திரன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

              தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் தோழர். N.L. சீதரன், அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரா, அனைத்திந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டதில் AIBDPAயிலிந்து 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

           கூட்டமைப்பு தலைவராக தோழர். N. சின்னச்சாமி (மின்வாரியம்)யும், செயலாளராக தோழர். S. சந்திரனும் பொருளாளராக தோழர்.A. குடியரசு (BSNL)ம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நமது சங்கத்தோழர்கள் தோழர். P.B. ராதாகிருஷ்ணனும் பங்கஜவல்லியும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  சிறப்பாக நடைபெற்ற மாநாட்டையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.