• கும்பக்கோணம் மாவட்ட மாநாடு

  புதியகொடி  ஏற்றி கல்வெட்டு திறப்பு -மாநிலச் செயலர் பங்களிப்பு.

   

        கும்பக்கோணம்  AIBDPA சங்க மாவட்ட மாநாடு 05-05-2017 அன்று GM அலுவலகம் முன்பு சங்கக் கொடியேற்றுதல், கல்வெட்டு திறப்பு என வெகுவிமரிசையாக தொடங்கியது. கல்வெட்டு நிகழ்ச்சிக்கு தோழர். S.N. செல்வராஜ் தலைமை ஏற்றார். மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் சங்கக் கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்ததோடு நினைவு கல்வெட்டையும் திறந்துவைத்தார்.

        கும்பக்கோணம் V.K. கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டை தோழர். P. பக்கிரிசாமி தலைமை ஏற்றார். தோழர். S.N. செல்வராஜ் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர்.  R.A. பக்கிரிநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் மாநாட்டை துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, BSNLEU மாநில துணைப்பொருளாளர் தோழர். R. மகேந்திரன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

        பின்னர் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் செயல்பாட்டறிக்கை மற்றும் வரவுசெலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

  மாவட்டத் தலைவர் தோழர்.S.N. செல்வராஜ் (தஞ்சை)

  மாவட்டச்செயலர் தோழர். R.A. பக்கிரிநாதன் (கும்பக்கோணம்)

  மாவட்டப் பொருளாளர் தோழர். V.ஜோசப்

  மாநாட்டின் நிறைவில் தோழர். A. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

  சிறப்பாக நடைபெற்ற மாநாட்டையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

 • காரல்மார்க்ஸ்

 • மாநில நிர்வாகத்தோடு AIBDPA மாநிலச்சங்கம் சந்திப்பு

  மருத்துவப்படி  விருப்பப்படிவம் வழங்கிடவும் மற்றும் மருத்துவ பில்கள் காலதாமதத்தை தவிர்க்கக் கோரி மாநிலநிர்வாகத்தோடு மாநிலச்செயலர் சந்திப்பு 

   

       03-05-2017 அன்று நமது AIBDPA மாநிலச்சங்க நிர்வாகிகள் மாநில நிர்வாகத்திலுள்ள  DGM(F) மற்றும் CAO (F) சந்தித்து  மருத்துவப்படி விருப்பப்படிவம் (Option Form) வழங்குவதிலுள்ள காலதாமதத்தை சுட்டிக்காட்டி விவாதித்தனர். நிர்வாகம் அதனை ஏற்றுக்கொண்டு Intranetல் வெளியிடுவதாக கூறியது.

      மருத்துவப்படி விருப்பப்படிவம் (Option Form) குறிப்பிட்ட கால  அவகாசத்திற்குள் பெருவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.

            மேலும் மருத்துவ பில்கள் வழங்குவதில் சுணக்கம் உள்ளதை சுட்டிக்காட்டினர். அதனை விசாரித்து  காலதாமதம் களைவதாகவும் மாநில நிர்வாகம் கூறியுள்ள து.

 • வங்கிகளுக்கு கடிதம்

  78.2சத பஞ்சப்படி  நிலுவைத்தொகையினை தாமதமின்றி வழங்கிட DOT / வங்கிகளுக்கு கடிதம்.

            நீண்ட போராட்டங்கள் மூலம் 78.2சத பஞ்சப்படி உத்தரவு வெளியாகி அதற்கான நிலுவைத்தொகை வழங்கிட வங்கிகள் / அஞ்சலகங்களுக்கு அதற்கான உத்தரவுகள் சென்றாலும் சில வங்கிகள் அதனை வழங்குவதில் காலதாமதங்கள் செய்கின்றன. எனவே காலதாமதம் தவிர்த்து உரிய கால அவகாசத்தில் வங்கிகள்  நிலுவைத்தொகையினை வழங்கிடக்கோரி ஓய்வூதியம் வழங்கிடும் வங்கி பிரிவுகளுக்கு நமது AIBDPA மாநிலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

                 மேலும் அதன்  மீது உரியகவனம் செலுத்தி வங்கிகள் காலதாமதமின்றி நிலுவைத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யக்கோரி நமது  மாநிலச் செயலர் சென்னை   DOT அலுவலகத்தில் உள்ள Jt.CCAவை பார்த்து கடிதம் கொடுத்தார். 

      Jt.CCAவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    AIBDPA Letter to IOB