• கும்பக்கோணம் மாவட்ட மாநாடு

  புதியகொடி  ஏற்றி கல்வெட்டு திறப்பு -மாநிலச் செயலர் பங்களிப்பு.

   

        கும்பக்கோணம்  AIBDPA சங்க மாவட்ட மாநாடு 05-05-2017 அன்று GM அலுவலகம் முன்பு சங்கக் கொடியேற்றுதல், கல்வெட்டு திறப்பு என வெகுவிமரிசையாக தொடங்கியது. கல்வெட்டு நிகழ்ச்சிக்கு தோழர். S.N. செல்வராஜ் தலைமை ஏற்றார். மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் சங்கக் கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்ததோடு நினைவு கல்வெட்டையும் திறந்துவைத்தார்.

        கும்பக்கோணம் V.K. கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டை தோழர். P. பக்கிரிசாமி தலைமை ஏற்றார். தோழர். S.N. செல்வராஜ் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர்.  R.A. பக்கிரிநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் மாநாட்டை துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, BSNLEU மாநில துணைப்பொருளாளர் தோழர். R. மகேந்திரன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

        பின்னர் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் செயல்பாட்டறிக்கை மற்றும் வரவுசெலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

  மாவட்டத் தலைவர் தோழர்.S.N. செல்வராஜ் (தஞ்சை)

  மாவட்டச்செயலர் தோழர். R.A. பக்கிரிநாதன் (கும்பக்கோணம்)

  மாவட்டப் பொருளாளர் தோழர். V.ஜோசப்

  மாநாட்டின் நிறைவில் தோழர். A. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

  சிறப்பாக நடைபெற்ற மாநாட்டையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.