• ஈரோடு மாவட்ட AIBDPA பேரவை கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற  ஈரோடு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்.

            ஈரோடு மாவட்ட AIBDPA சங்க சிறப்பு பேரவை கூட்டம்  19.5.2017 அன்று  மாவட்ட தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் ஈரோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.   மாவட்டச் செயலர் தோழர். P. சின்னசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் பேரவைக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில் மைசூரு மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் முடிவுகள், நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 78.2% இணைப்பு நிலுவை வாங்கி கொடுக்க மாநில சங்கம் எடுத்த முயற்சிகளை விளக்கினார்.

      01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம், 01.01.2017 முதல் 50சத பஞ்சப்படி இணைப்பு, மாதம்தோறும் மருத்துவப்படி ரூபாய் 2000/- வழங்கிடக்கோரியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் 25.5.2017 அன்று நடைபெற உள்ள தர்ணா போராட்ட த்தை சிறப்பாக நடத்த வலியுறுத்தி பேசினார்.

         மாநில துணை செயலாளர் தோழர். N. குப்புசாமி நமது கோரிக்கைகளை வென்றெடுக்க BSNLEU சங்கம் நடத்திய போராட்டங்களையும், உதவிகளையும்  விளக்கி பேசினார்.

     கோவை மாவட்ட செயலாளர் தோழர்.P.B. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் தோழர்.  K. பங்கஜவல்லி, மாநில அமைப்புச் செயலர்கள் தோழர். L. உமாபதி, தோழர். N. சின்னையன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

          10 தோழியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் நிறைவில் ஈரோடு கிளை செயலாளர்  தோழர். மாணிக்கம்  நன்றி கூறினார்.