• ஏர் இந்தியா விமான நிறுவனம் விற்பனை

    கேபினட் அமைச்சரவை முடிவு

    அரசின் இந்த முடிவை AIBDPA வன்மையாக கண்டிக்கிறது.

        1953ல் தேசியமயமாக்கப்பட்ட விமான நிறுவனமான ஏர் இந்தியா 41 சர்வதேச வழித்தடங்களையும், 72 அத்தியாவசிய வழித்தடங்களையும் கொண்டிருந்தது. மத்திய அரசின் மோசமான திட்டங்களால் பலமிழக்கப்பட்டது. மேலும் ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் இணைக்கப்பட்டது. கடனுக்கு  ஏர்கிராப்ட் வாங்கியதில் தொடங்கி அனைத்து வகையிலும் கடனுக்குள் தள்ளப்பட்டது.

          இன்று தனியாருக்கு விற்க கேபினட் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். அறிவித்த உடனே இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்கிட தயாராகிவருவதாக தகவல்கள் வருகின்றன. மத்திய அரசின் ஏர் இந்தியா விற்பனையை AIBDPA வன்மையாக கண்டிக்கிறது.

  • மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி உயர்வு

    மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ரூ.500ஆக இருந்த  மருத்துவப்படி ரூ.1000மாக உயர்வு.

               AIBDPA NCCPA மற்றும் மகாசம்மேளனம்  மாதம் ரூ.2000/- மருத்துவப்படி வழங்கிட கேட்டு போராடிய கோரிக்கை இன்று மத்திய அரசு கேபினட் அமைச்சரவை ரூபாய் 1000/-வழங்கிட ஒப்புதல் வழங்கியுள்ளது.

          CGHS மருத்துவவசதி பெறாத 5லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதம் ரூபாய் 500/- பெற்றவர்களுக்கு இனி மாதம் ரூபாய் 1000/-  கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • டெல்லி மத்தியச்சங்க அலுவலகம் – முகவரி மாற்றம்

    டெல்லி மத்தியச்சங்க அலுவலகம் (CHQ) – புதியமுகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    AIBDPA CHQ address is changed to:

    ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION,
    K.G.BOSE BHAWAN,
    28/64,
    WEST PATEL NAGAR,
    NEW DELHI-110008.

    அனைத்திந்திய BSNL -DOT ஓய்வூதியர் சங்கம்.

    “K.G. போஸ் பவன்”

    28/64 – மேற்கு பட்டேல் நகர்,

    புது டெல்லி – 110 008.

            அனைத்து தோழர்களும் மத்தியச் சங்கத்தை தொடர்பு கொள்ள இந்த புதிய முகவரியை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     

     

  • பிரமிக்கவைத்த நடைபயணம் – த.தீ.ஒ.முன்னணி

    தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளுக்கு அடிப்படையான தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்கும் நீண்ட நெடிய பயணம் –

    சேலம் முதல் சென்னை வரை 350 கிலோ மீட்டர் தூரம் – 13 நாட்கள் – நடைபயணம். 

    வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு. 3000க்கும் மேற்பட்டவர்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதி தமிழர் கட்சி இடதுசாரி கட்சிகள் சிபிஎம் மற்றும் CITU AIWDA SFI DREU BEEFI AIIEU BSNLEU AIBDPA உள்ளிட்ட மத்தியமாநில தொழிற்சங்கங்கள் போக்குவரத்து  மின்வாரியம் ஆட்டோ தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்திடச் செய்த நடைபயணம்.

            நமது சங்க மாநில உதவித்தலைவர் தோழர். P. ராமசாமி (வயது72) நாமக்கல் மாவட்ட த.தீ.ஒ.முன்னணி மாவட்டச் செயலர் 350 KM தூரமும் நடந்து சிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் உட்பட 350க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி விடுதலை.

    சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனி சிறப்புச்சட்டம் இயற்றிடு !

    சாதிமறுப்பு தம்பதியரை பாதிகாத்திட சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டல்களை (WP:26991/2014) நடைமுறைப்படுத்து !! 

                உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய சேலம் தொடங்கி சென்னை கோட்டை வரை நடைபயணம் தாம்பரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. தோழர். ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் தோழர். பி.சம்பத் உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களையும் 350க்கும் மேற்பட்ட தோழர்களையும் பலவந்தமாக தமிழக அரசு கைது செய்தது. சமூக அவமானத்தை துடைக்க – சாதி ஆணவ படுகொலை தடுக்க தனிச்சிறப்பு சட்டம்-கோரிய “குற்றத்திற்காக” கைது செய்துள்ளதை தமிழக தொழிலாளிவர்க்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. 

  • ரமலான் வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய ரமலான்   வாழ்த்துக்கள்

     

  • இதய பூர்வ அஞ்சலி தோழர். நாகமண்யம் ஆந்திரமாநில ஸ்தாபக மாநில செயலர்.

    ஆந்திர  தபால்தந்தி இயக்க முன்னோடி   தோழர். நாகமண்யம்  AIBDPA ஸ்தாபக ஆந்திர மாநிலச் செயலர் மறைவு.

           ஆந்திரபிரதேச தபால்தந்தி தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர். நாகமண்யம் 24.06.2017 அன்று நண்பகல் 1120க்கு தனது 72ம் வயதில் மருத்துவமனையில் வைத்து மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகிறோம்.

                ஆந்திராவில் NFTE E-III (N) சங்கத்தை பலமான சங்கமாக கட்டுவதில் தோழர்கள் M. N. ரெட்டி, P. அசோகபாபு, சம்பத்ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய தோழர். 1991 NFTE போபால் மாநாட்டில் தோழர். நம்பூதிரி மோனிபோஸ் அணித்தலைமை வெற்றிபெற முன்னோடி பாத்திரம் வகித்தவர் தோழர். நாகமண்யம். BSNLEU, AIBDPA, BSNLCCWF சங்கங்கள் ஒன்றுபட்ட ஆந்திரமாநிலத்தில் அமைப்பதில் பெரும் பங்காற்றியவர் தோழர். நாகமண்யம்.

               அன்னாரின் மறைவிற்கு அஞ்சலி செய்வதோடு அவர்தம் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்திற்கும் நணபர்களுக்கும் தோழர்களுக்கும் நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • தார்ணாவில் பங்களிப்போம் !

    20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

    கோரிக்கைகளை வென்றெடுக்க  உற்சாகமாக கலந்துகொண்டு தார்ணாவை வெற்றிபெறச் செய்வோம்.

    கோரிக்கைகள்:-

    1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

    2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

    3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி….. !

      

  • பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் கட்டுரை

    Pension Revision in BSNL – Illusions and realities.

    K.G. Jayaraj, General Secretary, AIBDPA

                  When BSNL was formed as a fully government owned PSU under Company Act on 01.10.2000, the employees were offered pension from the consolidated fund of the government. And for this, rule 37 A was incorporated in CCS (Pension) Rules, 1972. The pay scales of BSNL employees were also upgraded from CDA to IDA scales. There was a strong argument during this time from certain union leadership, particularly Com. O.P. Gupta that pension should be paid on CDA scales. This argument was unitedly resisted and defeated under the leadership of Com. V.A.N. Namboodiri and the progressive section with the all round support of the other unions. If the argument of Com. O.P. Gupta was agreed to, there would have been huge loss in the pension of BSNL pensioners.

            The issue of pension revision arose after the pay revision in BSNL and other CPSEs w.e.f. 01.01.2007. The DoT as well as the government refused to revise the pension for the pre-2007 BSNL pensioners on the plea that there is no provision for pension revision in the Rule 37 A. This was fought tooth and nail by not only the pensioners organisation but all the serving employees unions and succeeded in getting pension revision.

               Then came the issue of pension revision on 78.2% IDA or benefit of the merger of 50% IDA with pay. The BSNL employees were granted this benefit notionally from 01.01.2007 with financial effect from 10.06.2013. But the government was not prepared to implement it to those retired before 10.06.2013. The main hurdle pointed out was 60:40 condition for payment of pensionary benefits. Still, with the serious intervention of the employees organisations, powered with two strikes, compelled the government to scrap the 60:40 condition and granted the 78.2% IDA fixation to BSNL pensioners.

            During the course of this long and sustained struggle, some people advocated the idea of 7th Pay Commission fixation formula for the BSNL pensioners. What made these people to prefer such a demand was the continuous loss incurring of BSNL. It is more or less the same demand Com. Gupta had put ward and rejected by all. So now these people say that 7th Pay Commission fixation should be implemented on IDA scale. The justification for such a demand is that BSNL pensioners are covered under CCS (Pension) Rules, 1972. Yes CCS (Pension) Rules ensures BSNL pensioners, all the pensionary benefits being granted to central government pensioners, but barring pension, and medical facilities (IDA pattern). As far as pension is concerned, BSNL retirees are governed by Rule 37 A, amended during formation of BSNL. Even if, the government agrees for fixation formula on 7th Pay Commission recommendation, it would become imperative to be downgraded to CDA scales as per existing rule.

            It was just a couple of years ago that MTNL retirees were granted pension and other benefits at par with BSNL pensioners, but only after downgrading the pay scales to BSNL pay scales.

    Let us come back to BSNL. These people had written off BSNL stating that even ‘God’ cannot revive BSNL and bring it to profits. And on an occasion CMD BSNL said that there will be no pay revision in BSNL w.e.f. 01.01.2017, these people became very jubilant and were in a celebrating mood. But the continued efforts of the employees, spearheaded by all the unions and the Management brought out a wonderful turn around posting operational profits of Rs.672 crore in 2014-15 and Rs.3,856 crore in 2015-16. This made the CMD BSNL to change his earlier stand and assured a decent pay revision in BSNL. The survival of BSNL as a government PSU is very much warranted to ensure telecom services to the people at affordable rates and save them from the sheer exploitation of the greedy private telecom companies.

               After the 3rd PRC submitted it’s report, both BSNL Management and DoT had taken a positive stand on pay revision in BSNL, despite the affordability condition in the PRC report. However, it is reported that in the Secretaries meeting under the chairmanship of the Cabinet Secretary held on 12.05.2017, the Additional Secretary of Department of Telecom took a passive stand. All the unions and associations under the leadership of BSNLEU therefore has decided for a phased program of agitation, culminating in a strike on 27.07.2017, demanding pay revision and pension revision. Affordability conditions are nothing new. There had been such affordability condition in the 1st and 2nd PRC also. The 3rd PRC in its report itself has reproduced the operational portion put forward by the 1st and 2nd PRC.

    Ist PRC – 2.4.8(a) Affordability.

           CPSEs which did not make profit during the last three years would also be allowed to adopt the same recommended pay scales, but with the approval of the administrative ministries in consultation with DPE.

    IInd PRC – 2.4.10(a) Affordability.

    The parameter for deciding affordability was that by implementing the pay package, the dip in the profit of CPSEs for the year 2007-08 should not exceed 20% in respect of executives. If the dip is more than 20%, then the pay package would not be implemented in full, but in different part stages.

    As for scoring, the CPSEs were categorised into five groups. A+, A, B, C and D. The 2nd PRC recommended 5 sets of pay scales for five categories. It also recommended different fitment method.

    But after the struggle of the workers, the government was compelled to reject the categorisation and a uniform pay scales was prescribed.

    Fitment was also made uniform with @ 30% of BP + DA. The 3rd PRC in it’s executive summary, para 5, has recommended that “Affordability condition shall not be applicable to such CPSEs which are formed to perform specific agenda of the government”.

    The CMD BSNL in his DO letter dated 07.06.2017 to Secretary, DoT, with copy to Secretary, DPE has quoted the above recommendation and has effectively pleaded that it is very much applicable to BSNL. BSNL is committed to implement the Telecom Policy, 1999. BSNL is incurring loss for keeping up the social obligation of the government by giving landlines in rural areas. And it is no private telecom company but BSNL alone restoring the telecom services where national calamities strikes the country. Also it is the BSNL which is extending telecom services in the terrorist / naxal affected areas by installing sufficient number of towers. CMD also has specifically mentioned about the urgency of pension revision of 2 lakh BSNL pensioners along with the wage revision.

    Pay Revision is very much possible, so also pension revision.

    Therefore, there is nothing to be disappointed but to be confident that we shall achieve pay revision and pension revision through united and sustained struggle of the workers and whole heartily supported by the pensioners. There would not be much difficulty in the pension revision, once the pay revision is implemented, as there is no 60:40 condition. On the contrary 100% liability is with the Central Government.

    Those who have no faith in organization and the struggles, through which only, we have achieved all the genuine demands of both workers and pensioners, may continue to spread rumours and half truths to confuse the pensioners. The legacy of Com. O.P. Gupta was “it is not the responsibility of unions to fight against government policies and that is the job of political parties.”

          These people are least concerned about the continuance of BSNL as a government PSU to ensure telecom services at affordable rates to the common people. They are also not concerned about two lakh BSNL employees. And their mindset has narrowed down to ‘let the BSNL and it’s employees go to the hell but give us our pension revision at any cost’.

    Let us focus on the programme of struggle already chalked out by all the unions and associations for pay revision and pension revision so that it is made a grand success.

    And definitely victory will be ours.

  • ஈரோடு மாவட்ட சங்க செயற்குழு கூட்டம்

    சிறப்பாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட செயற்குழுக் கூட்டம்.

             ஈரோடு மாவட்ட AIBDPA சங்க செயற்குழு கூட்டம் 15.06.2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் .A.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு நகரகிளைச் செயலர் தோழர். மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி செயற்குழு நோக்கங்களை விளக்கி பேசினார். பென்சன்தாரர்கள் மருத்துவ பில்கள் மற்றும் 78.2% பஞ்சப்படி இணைப்பு நிலுவை தொகை இன்னும் வழங்கப்படாதது பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனில் மாநில செயலாளருடன் விவாதித்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

            01.01.2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் பென்சன் மாற்றம் அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் போராட்ட அறைகூவல் சம்பந்தமாக மாநில நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் தோழர். P. சின்னையன்  மற்றும் மாநில உதவிச் செயலாளர் தோழர்.  N. குப்புசாமி விரிவாக பேசினார்கள். ஈரோடு மாவட்டத்தில் நடைபெரும் மேற்படி போராட்டத்தில் திரளாக தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட சங்கத்தின் செயல்பாடு அதிகரிப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.. மீதமுள்ள கிளை மாநாடுகள் நடத்துவது சமபந்தமாக மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாசாமி பே சினார். இந்த மாத இறுதிக்குள் மூன்று கிளைகள் அமைப்பு மாநாடு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் என, 32 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர். நடராஜன் இறுதியில் நன்றி கூறினார்.

  • 78.2 IDA வழங்குவதில் உள்ள காலதாமதம் தவிர்த்திட Member (Finance) வுடன் பொதுச்செயலர் சந்திப்பு

     78.2 IDA நிலுவைத்தொகை   வழங்குவதில் உள்ள காலதாமதம் தவிர்த்திட பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் மெம்பர் (நிதி) திருமதி. அனுராதா மித்ராவுடன் சந்திப்பு.

              13.07.2017 அன்று 78.2 சத பஞ்சப்படி நிலுவை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை சுட்டிக் காண்பித்து தனது வருத்தத்தை பதிவு செய்ததுடன் காலதாமதம் தவிர்த்து நிலைவைத்தொகையினை உடனடியாக வழங்கிட கேட்டுக்கொண்டார். அவர் நமது பொதுச் செயலரிடம் 06.06.2017ல் தாங்கள் அனுப்பிய கடிதத்தை தான் பார்த்ததாகவும் அதன் மீது உரிய கவனத்தோடு தினந்தோரும் பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூடுதல் கவனத்தோடு அனுகுவதாகவும் கூறினார். 31.07.2017க்குள் மீதி வழங்கவேண்டிய 20சத நிலுவை பில்களையும் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் காலதாமதத்திற்கு காரணம் அனைத்து CCA அலுவலகங்களிலும் போதுமான ஊழியர் இல்லாததே என்றும் இருந்தாலும் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் DOT DDG (நிதி) திருமதி.தியாகலா லிண்டா யாதீன் ஐ சந்தித்து இது சம்பந்தமாக விளக்கமளிக்க கூறினார்.

                  நமது பொதுச்செயலர் DOT DDG (நிதி) ஐ சந்தித்து 78.2 சத பஞ்சப்படி நிலுவை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதம் தவிர்த்திடவும், மகராஷ்ட்ரா, கேரளா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கொல்கத்தா தொலைபேசி மற்றும் டெல்லி பகுதியைச் சார்ந்த ஓய்வூதியர்களுக்கான நிலுவை வழக்குகள் அதிகப்படியான உள்ளதாகவும் விரைந்து அனுப்பிட கேட்டுக் கொண்டார். அவரும் உரிய பரிசீலனை செய்து விரைவில் கிடைத்திட ஏற்பாடு செய்வதாக கூறினார்.

           Com.K.G.jayaraj, General Secretary ,AIBDPA has met Ms.Anuradha Mitra, Member (Finance), Telecom Commission on 13-06-2017 and discussed seriously the issue of undue delay in issuing revised PPO on 78.2% IDA fixation. He drew her attention to the letter on this matter ,dated 6th June,2017, already sent to her. The Member (Finance) stated that she has seen the letter and has initiated action on it and the progress is being monitored regularly. Regarding acute shortage of staff at the CCAs, she would explore the possibility of getting some persons from the BSNL. She further assured that all the cases will be settled by 31st July, 2017.On her advice, General Secretary also met Ms.Tiakala Lynda Yaden, DDG (Accounts),DoT. She told the General Secretary that only 20% cases are still pending and efforts are on to settle the balance cases by July. She also gave a circle wise status report . General Secretary pointed out that most cases are pending in Maharashtra, Kerala, Andhra Pradesh, Tamil Nadu, Kolkata Telephones and Delhi and special initiative is warranted to settle the cases in a systematic manner. The DDG assured that she is contacting the CCAs regularly and will see that the cases are settled within the new stipulated time.

    CIRCLE WISE STATUS REPORT ON 78.2% IDA FIXATION OF BSNL PENSIONERS

    அதற்கான பட்டியல் மேலே கொடுக்கப் பட்டுள்ளது.