• உரிமைகளை மீட்டெடுக்க போராடத் தயாராகும் BSNL சங்கங்கள் !

  தார்மீக ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொள்ள AIBDPA சங்கம் அறைகூவல்.

             02.06.2017 டெல்லியில் கூடிய BSNL ஊழியர்  மற்றும் அதிகாரிகளின்   சங்கத் தலைவர்கள் ஏக மனதாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத் திட்டங்களை வடிவமைத்தனர்.  மேலும் BSNL அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்ட நடவடிக்கைகளை தடைசெய்ய டெல்லி பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் BSNL கார்ப்போரேட் நிர்வாகம் கடந்த 06.05.2017 அன்று தடைஆணை பெற்று அனைத்து மாநில பொது மேலாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக கடந்த 08.05.2017 வெளியிட்ட கடிதத்தையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. 

  கோரிக்கைகள்:-

  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……

  இயக்கங்கள் :-     

   A) 20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

  B) 13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

  C) 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

              AIBDPA தமிழ்மாநில மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட போராட்டங்களில் பெருவாரியாக ஓய்வூதியர்களை கலந்திடச்செய்து போராட்டம் வெற்றிபெற பாடுபடுவோம்.

           இயக்கங்களை வெற்றிகரமாக்கி ஓய்வூதிய மாற்றம் பெற்றிட

  கரம் கோர்ப்போம் !

  களம் காண்போம் !!

  ஆதரவு இயக்கங்கள் நடத்தி வெற்றி பெறுவோம் !!!