• ஈரோடு மாவட்ட சங்க செயற்குழு கூட்டம்

    சிறப்பாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட செயற்குழுக் கூட்டம்.

             ஈரோடு மாவட்ட AIBDPA சங்க செயற்குழு கூட்டம் 15.06.2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் .A.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு நகரகிளைச் செயலர் தோழர். மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி செயற்குழு நோக்கங்களை விளக்கி பேசினார். பென்சன்தாரர்கள் மருத்துவ பில்கள் மற்றும் 78.2% பஞ்சப்படி இணைப்பு நிலுவை தொகை இன்னும் வழங்கப்படாதது பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனில் மாநில செயலாளருடன் விவாதித்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

            01.01.2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் பென்சன் மாற்றம் அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் போராட்ட அறைகூவல் சம்பந்தமாக மாநில நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் தோழர். P. சின்னையன்  மற்றும் மாநில உதவிச் செயலாளர் தோழர்.  N. குப்புசாமி விரிவாக பேசினார்கள். ஈரோடு மாவட்டத்தில் நடைபெரும் மேற்படி போராட்டத்தில் திரளாக தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட சங்கத்தின் செயல்பாடு அதிகரிப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.. மீதமுள்ள கிளை மாநாடுகள் நடத்துவது சமபந்தமாக மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாசாமி பே சினார். இந்த மாத இறுதிக்குள் மூன்று கிளைகள் அமைப்பு மாநாடு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் என, 32 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர். நடராஜன் இறுதியில் நன்றி கூறினார்.