• இதய பூர்வ அஞ்சலி தோழர். நாகமண்யம் ஆந்திரமாநில ஸ்தாபக மாநில செயலர்.

    ஆந்திர  தபால்தந்தி இயக்க முன்னோடி   தோழர். நாகமண்யம்  AIBDPA ஸ்தாபக ஆந்திர மாநிலச் செயலர் மறைவு.

           ஆந்திரபிரதேச தபால்தந்தி தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர். நாகமண்யம் 24.06.2017 அன்று நண்பகல் 1120க்கு தனது 72ம் வயதில் மருத்துவமனையில் வைத்து மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகிறோம்.

                ஆந்திராவில் NFTE E-III (N) சங்கத்தை பலமான சங்கமாக கட்டுவதில் தோழர்கள் M. N. ரெட்டி, P. அசோகபாபு, சம்பத்ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய தோழர். 1991 NFTE போபால் மாநாட்டில் தோழர். நம்பூதிரி மோனிபோஸ் அணித்தலைமை வெற்றிபெற முன்னோடி பாத்திரம் வகித்தவர் தோழர். நாகமண்யம். BSNLEU, AIBDPA, BSNLCCWF சங்கங்கள் ஒன்றுபட்ட ஆந்திரமாநிலத்தில் அமைப்பதில் பெரும் பங்காற்றியவர் தோழர். நாகமண்யம்.

               அன்னாரின் மறைவிற்கு அஞ்சலி செய்வதோடு அவர்தம் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்திற்கும் நணபர்களுக்கும் தோழர்களுக்கும் நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.