• பிரமிக்கவைத்த நடைபயணம் – த.தீ.ஒ.முன்னணி

  தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளுக்கு அடிப்படையான தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்கும் நீண்ட நெடிய பயணம் –

  சேலம் முதல் சென்னை வரை 350 கிலோ மீட்டர் தூரம் – 13 நாட்கள் – நடைபயணம். 

  வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு. 3000க்கும் மேற்பட்டவர்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதி தமிழர் கட்சி இடதுசாரி கட்சிகள் சிபிஎம் மற்றும் CITU AIWDA SFI DREU BEEFI AIIEU BSNLEU AIBDPA உள்ளிட்ட மத்தியமாநில தொழிற்சங்கங்கள் போக்குவரத்து  மின்வாரியம் ஆட்டோ தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்திடச் செய்த நடைபயணம்.

          நமது சங்க மாநில உதவித்தலைவர் தோழர். P. ராமசாமி (வயது72) நாமக்கல் மாவட்ட த.தீ.ஒ.முன்னணி மாவட்டச் செயலர் 350 KM தூரமும் நடந்து சிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் உட்பட 350க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி விடுதலை.

  சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனி சிறப்புச்சட்டம் இயற்றிடு !

  சாதிமறுப்பு தம்பதியரை பாதிகாத்திட சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டல்களை (WP:26991/2014) நடைமுறைப்படுத்து !! 

              உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய சேலம் தொடங்கி சென்னை கோட்டை வரை நடைபயணம் தாம்பரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. தோழர். ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் தோழர். பி.சம்பத் உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களையும் 350க்கும் மேற்பட்ட தோழர்களையும் பலவந்தமாக தமிழக அரசு கைது செய்தது. சமூக அவமானத்தை துடைக்க – சாதி ஆணவ படுகொலை தடுக்க தனிச்சிறப்பு சட்டம்-கோரிய “குற்றத்திற்காக” கைது செய்துள்ளதை தமிழக தொழிலாளிவர்க்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. 

 • ரமலான் வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய ரமலான்   வாழ்த்துக்கள்