• ஏர் இந்தியா விமான நிறுவனம் விற்பனை

    கேபினட் அமைச்சரவை முடிவு

    அரசின் இந்த முடிவை AIBDPA வன்மையாக கண்டிக்கிறது.

        1953ல் தேசியமயமாக்கப்பட்ட விமான நிறுவனமான ஏர் இந்தியா 41 சர்வதேச வழித்தடங்களையும், 72 அத்தியாவசிய வழித்தடங்களையும் கொண்டிருந்தது. மத்திய அரசின் மோசமான திட்டங்களால் பலமிழக்கப்பட்டது. மேலும் ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் இணைக்கப்பட்டது. கடனுக்கு  ஏர்கிராப்ட் வாங்கியதில் தொடங்கி அனைத்து வகையிலும் கடனுக்குள் தள்ளப்பட்டது.

          இன்று தனியாருக்கு விற்க கேபினட் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். அறிவித்த உடனே இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்கிட தயாராகிவருவதாக தகவல்கள் வருகின்றன. மத்திய அரசின் ஏர் இந்தியா விற்பனையை AIBDPA வன்மையாக கண்டிக்கிறது.