• திண்டுக்கல் கிளை உதயம்

  திண்டுக்கல் கிளை அமைப்பு மாநாடு

          திண்டுக்கல் கிளை அமைப்பு மாநாடு திண்டுக்கல் நகரில் இன்று 06.07.2017 தலைவர் தோழர். K. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழர். S. ஜான் போர்ஜியா வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை மாவட்டச் செயலர் தோழர். ஆதீஸ்வரன் அமைப்பு மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார்.

                   மாநாட்டை வாழ்த்தி AIBDPA மாநில அமைப்புச் செயலர் தோழர். M. செல்வராஜ், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். K. பழனிக்குமார், BSNLEU மாவட்ட துணைப் பொருளாளர் தோழர். R. அய்யனார்சாமி, BSNLEU மாவட்ட துணைத் தலைவர் தோழர். A. வைத்தியலிங்க பூபதி, BSNLEU மாவட்ட துணைத் தலைவர் தோழர். A. குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். AIBDPA மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில் 78.2 சதம் பஞ்சப்படி இணைப்பு  நிலுவைத்தொகை, 7வது சம்பளக் கமிஷன், மாநிலச் சங்க செயல்பாடுகள், மத்தியச்சங்க செயல்பாடுகள், மைசூரு மத்தியசெயற்குழு முடிவுகள் அமலாக்கம், BSNLEU மற்றும் FORUM நடத்தும் இயக்கங்கள் பற்றி விரிவாக  தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

          40க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் நிறைவாக கீழ்க்கண்ட தோழர்கள் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவர் : தோழர். K. கனகராஜ்,

  கிளைச்செயலர் : தோழர். S. ஜான் போர்ஜியா,

  கிளைப் பொருளாளர் : தோழர். A. தங்கப்பாண்டியன்.

               முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலர் கலந்து கொண்டு சங்க செயல்பாடு சிறக்க ஆலோசனை வழங்கினார். சங்க செயல்பாடு முன்னேற்றம் காணவும் தேனிபகுதியில் புதிய கிளை அமைக்கவும் முயற்சிகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. புதிய ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும் திட்டமிடப்பட்டது.

 • மதுரை தோழர். R.சௌந்தர் மறைவு

  மதுரையில்  K.G. போஸ் இயக்கத்தை கட்டிய ஸ்தாபக தலைவர் தோழர் . R.சௌந்தர்ராஜன் காலமானார்.

   

           தோழர்.R. சௌந்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவரும் மதுரையில் தபால் தந்தி இயக்கத்தை கட்டுவதிலும் தோழர். K.G.போஸ் இயக்கத்தை கட்டுவதிலுமான ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் AIBDPA சங்க தலைவருமான தோழர். இரா. சௌந்தர்ராஜன் (வயது 80) 02.07.2017ல் மதுரை புதூரில் வைத்து காலமானார்.

             1968ஆம் ஆண்டு நடைபெற்ற தபால் தந்தி ஊழியர் போராட்டத்தை அடக்குமுறையையும் மீறி மதுரை பகுதியில் முன்னின்று நடத்தியவர் தோழர். சௌந்தர். AIBDPA சங்க தலைவரான தோழர். R. சௌந்தர் தொழிற்சங்கப்பணியிலும், பணி ஓய்வுக்குப்பின்  தீக்கதிர் மதுரை பதிப்பிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு அயராது பணி செய்தவர். மதுரை பகுதியில் K.G.போஸ் இயக்கத்தை கட்டிய  ஸ்தாபக தலைவர் தோழர். சௌந்தர்.

       அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வருந்துவதோடு கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

 • 01-07-2017 முதல் பஞ்சப்படி உயர்வு 1.9 சதம்

  IDA உயர்வு

  01-07-2017 முதல் பஞ்சப்படி (IDA) 1.9 சதம் உயர்ந்து மொத்தம் 119.0 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.