• தோழர். டி. ஞானையா மறைவு

  செஞ்சுடர் அணைந்தது .

   

   

       NFPTE இயக்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். டி. ஞானையா இன்று (08.07.2017) அதிகாலை 04.30 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 97. தமிழகத்தின் தலை சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களுள் ஒருவராய் திகழ்ந்தார். அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்தான தோழர் டி. ஞானையா 07.01.1921ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .

         அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர். 19.09.1968 மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நாயகன். NFPTE தபால் தந்தி தொழிற்சங்கத்தின் மா பொதுச் செயலராக பல ஆண்டு காலம் டில்லியில் இருந்தவர்.

            அவரது மறைவு மார்க்சியர்களுக்கும் , மத வாத சாதிவாத சக்திகளுக்கு எதிராக போராடிவரும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்.

          அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.