• அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்

    உற்சாகமாய் நடைபெற்ற  முதலாவது அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்.

         அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக அரங்கில் 08.07.2017 அன்று  உற்சாகமாக நடைபெற்றது. BSNLEU அகில இந்திய தலைவர் தோழர். பல்பீர்சிங், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். சுனில்  சௌத்திரி, தோழர். பாக்கியலெட்சுமி (கேரளா), தோழர். சர்மிளா தத்தா (கொல்கத்தா), தோழர். P. பிரேமா (தமிழ்நாடு) தோழர். பத்மாவதி (ஹைதராபாத்) கூட்டு தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பான ஏற்பாடுகளை தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலச்சங்கங்கள்  செய்திருந்தன. தெலுங்கானா மாநிலச்சங்க செயலர் தோழர். சம்பத்ராவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          CITU மாநிலத் தலைவர் தோழர். ஹேமலதா கருத்தரங்கை துவக்கிவைத்து  துவக்க உரையாற்றினார். CITU மாநில துணைத் தலைவர் தோழர். ரமாதேவி, ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக முன்னாள் முதல்வர் உஷாதேவி, BSNLEU அகில இந்திய பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

           இந்த கருத்தரங்கில் அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனராக அருமை தோழர். P. இந்திரா  ( BSNLEU தமிழ் மாநில உதவிச் செயலர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.