• BSNL ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் – தஞ்சையில்

    தஞ்சையில் BSNL ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

            தஞ்சை திருச்சி கும்பக்கோணம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த BSNL ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம்  21.07.2017 அன்று தஞ்சையில் நடைபெற்றது. நமது சங்கத்தின்   சார்பில் தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், தஞ்சை கும்பக்கோணம் மாவட்டச்செயலர் தோழர். R. பக்கிரிநாதன், மாவட்டத்தலைவர் தோழர். S.M. செல்வராஜ், மாவட்ட உதவித்தலைவர் தோழர். பக்கிரிசாமி, தோழர்கள் வாசுதேவன், பாஸ்கரன், தோழியர். தினமணி உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.

         அதாலத்தில் ஓய்வூதியர்களின் பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓய்வூதியர்களின் விலாச மாற்றம், வங்கிகளில் இருந்து அஞ்சலகங்களுக்கும், அஞ்சலகங்களிலிருந்து வங்கிகளுக்கும் மாற்றம் செய்த ஓய்வூதிய பலன்களில் உள்ள சுணக்கம் தவிர்த்திடவும், மேலும் 78.2 சத பஞ்சப்படி நிலுவைத்தொகை வழங்குவதில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கிகளில் உள்ள காலதாமதம் சுட்டிக் காட்டப்பட்டது. விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.