• அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் தோழர் ஆர். முத்து சுந்தரம் மறைவு

  அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் தோழர் ஆர். முத்து சுந்தரதிற்கு செவ்வஞ்சலி.

   அஞ்சலியும், செவ்வணக்கமும்.

           தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கதின் பொதுச் செயலாளரும்,  முப்பது ஆண்டுகள்  அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவருமான தோழர் ஆர்.முத்துசுந்தரம் ஈரோட்டில் சற்று முன்பு  (29-07-2017) இயற்கை எய்தினார். அவருக்கு இறுதி அஞ்சலி அவர் விருப்பப்பட்டவாறு சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நாளை நடைபெறும்.  

  தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க முன்நின்று உழைத்தவர். தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக போராடியும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி கிடைக்கச் செய்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

      கலை இலக்கிய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சிறந்த பேச்சாளரும், அமைப்பாளருமாவார். அரசு ஊழியர்களைத் திரட்டுவதிலும், கற்பதிலும், வழிகாட்டுவதிலும் ஆசானாகத் திகழ்ந்தார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், தமிழகம் உள்ளிட்டு அகில இந்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

        அவரின் மறைவிற்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவர்தம் பிரிவால்வாடும்  குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது