• சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமைபாதுகாப்பு தினம் !

  சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமை பாதுகாப்பு தினம் !

     மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் !  ஓய்வூதியத்தை பாதுகாப்போம் !

           அகில இந்திய அளவில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொண்டு சிறப்பிப்போம் !

      மாவட்டச் செயலர்கள்  அதற்கான இயக்கங்களில் உரிய கவனம்செலுத்தி வெற்றிபெற பங்களிப்போம் !!!

 • 01.10.2017 முதல் IDA உயர்வு – 5.3%

  IDA உயர்வு

  01-10-2017 முதல் பஞ்சப்படி (IDA) 5.3 சதம் உயர்ந்து மொத்தம் 124.3 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 • கோவை மாவட்டச் சங்க பொதுக்குழு கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட ச்சங்க பொதுக்குழு கூட்டம்.

         AIBDPA கோவை மாவட்டச் சங்க பொதுக்குழு கூட்டம் 27.09.2017 அன்று மாவட்ட தலைவர் தோழர். K. சந்திரசேகரன்  தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட செயலாளர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

              மாநில உதவிச் செயலர் தோழர். N.குப்புசாமி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 26.08.2017ல் பாண்டிச்சேரியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள், மத்திய மாநில அரசுகளின் இன்றைய செயல்பாடுகள்  அதனால் பொதுமக்கள், ஓய்வூதியர்கள் படும் துன்பங்கள், அதற்காக மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திடும் தார்ணா, NCCPA அறைகூவல் இதில் நமது பங்களிப்பு என விரிவாக விளக்கி பேசினார்கள்.

      பென்சன்தாரர்கள் பிரச்சினையை தீர்க்க, டெல்லியில் 25.10.17 அன்று NCCPA சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும். அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் அனைவருக்கும் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சங்கம் நிதியுதவி வழங்கும். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 9,10&11 தேதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்திலும் நமது சங்கத்தோழர்கள் பங்களிக்க முடிவு செய்யப்பட்டது.

           மாநில உதவிச் செயலர் தோழர். K. பங்கஜவல்லி, மாநில அமைப்புச் செயலர் தோழர்.  L. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    78.2%பஞ்சப்படி இணைப்பு நிலுவை தொகை இன்னும் வராதவர்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நன்கொடை வழங்காதவர்கள் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

              200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில்  மாநிலச்சங்க சிறப்பு பிரதிநிதி   தோழர். லியோ பிராசிஸ் ஜோசப் அவர்கள் நன்றி கூறினார். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றி.

 • ஈரோடு AIBDPA மாவட்ட சங்க செயற்குழு கூட்டம்

  ஈரோடு AIBDPA மாவட்ட சங்க செயற்குழு கூட்டம்.

                AIBDPA ஈரோடு மாவட்ட சங்க செயற்குழு கூட்டம் 21.09.2017 அன்று மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். சின்னசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

       புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாராபுரம், காங்கேயம், ஈரோடு (ரூரல்), சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி மற்றும் கவுந்தபாடி கிளைகளின் செயலாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

       26.8.2017 பாண்டிச்சேரியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள் குறித்து தோழர். சின்னையன் மற்றும் தோழர். N. குப்புசாமி விளக்கி பேசினார்கள்.

      பென்சன்தாரர்கள் பிரச்சினையை தீர்க்க, டெல்லியில் 25.10.17 அன்று NCCPA சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும். 

           மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2017 நவம்பர் 9,10 & 11 தேதிகளில்  மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இரண்டிலும் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் அனைவருக்கும் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சங்கம் போக்குவரத்திற்கான நிதியுதவியினை வழங்கும் எனவும், கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

     நமது சங்கத்தின் அமைப்பு தினம் வரும் 2017 அக்டோபர் 21 அன்று ஈரோட்டில் மாவட்ட சங்கம் சார்பில் “சிறப்பு கருத்தரங்கம்” நடத்த மாவட்டச் செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

  1) கிளை பிரச்சினைகள் சம்பந்தமாக கிளை செயலாளர்கள் பேசினார்கள்.

  2) 78.2%பஞ்சப்படி இணைப்பு நிலுவை தொகை இன்னும் வராதவர்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

  3) நன்கொடை வழங்காதவர்கள் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

          கடைசியில் தோழர். அய்யாசாமி அவர்கள் நன்றி கூறினார். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் ஈரோடு மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி  தெரிவிக்கப்பட்டது.

 • மதுரையில் “அதாலத்”

  ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

         

               மதுரையில் 15.09.2017 காலை 1030 மணி அளவில் DOT மற்றும் BSNL பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர் குறை தீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது. தென் மாவட்டங்களான மதுரை, காரைக்குடி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மாவட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். நமது சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன், மாநில அமைப்புச் செயலர் தோழர். M. செல்வராஜ், மதுரை மாவட்டச் செயலர் தோழர் S. ஆதீஸ்வரன், இணை செயலர் தோழர். மேனுவல் பால்ராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் உட்பட 8க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

 • மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு

   உற்சாகமாக நடைபெற்ற AIBDPA மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு.

           மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு 14.09.2017 அன்று மாவட்டத் தலைவர்தோழர். மகபூப் ஜான் தலைமையில் நடைபெற்றது. தோழர். ருத்ரகுமார் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர்  தோழர். S. ஆதீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.  

              மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் பாண்டியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவுகளையும் அதன் தீர்மானங்களையும் விளக்கினார். மேலும்மாவட்டச் சங்க விரிவாக்கம், நடைபெற்ற போராட்டங்கள், 78.2 சத பஞ்சப்படி நிலுவையில் உள்ள நிலவரங்கள், மருத்துவப்படி, இலவச இரவு தொலைபேசி அழைப்பு, இன்றைய அரசியல் சூழல், BSNLலின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை விளக்கி பேசினார். மாநில உதவித்தலைவர் தோழர். M. பெருமாள்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். M. செல்வராஜ் மற்றும் மாவட்ட உதவித்தலைவரும் திண்டுக்கல் பகுதி செயலருமான தோழர். ஜான்போர்ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

        மாவட்டச்செயற்குழுவில் மாவட்டச் செயலரின் உடல் நலம் கருதி பொறுப்புச் செயலராக தோழர். மேனுவல் பால்ராஜ் தேர்வு செய்வது, தேனி பகுதியில் கிளை அமைப்பது, உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திட உறுப்பினர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என ஆலோசனைகள் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

         திண்டுக்கல் பகுதி புதிய உறுப்பினராக இணைந்த 10 தோழர்கள் ஆயுள் சந்தாவை உடனடியாக வழங்கி இணைந்தது நிகழ்ச்சியில் உற்சாகமாய் அமைந்தது. கூட்டத்தின் நிறைவாக தோழர். மேனுவல் பால்ராஜ்   நன்றி கூறினார்.

      பின்னர் துணை டவர் கம்பேனி அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய கேபினட் முடிவை எதிர்த்து நடைபெற்ற BSNL ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மதுரைமாவட்ட AIBDPA சங்க தோழர்களும் கலந்து கொண்டனர். AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் கண்டன உரையாற்றினார்.

   

   

   

 • AIBDPA ஜாக்டோ – ஜியோ ஆதரவு இயக்கம் !

  ஈரோட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் 12.9.17 அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்களின் பங்களிப்பு.

 • ஜாக்டோ – ஜியோ செப் 07 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் !

  AIBDPA மாநிலச் சங்க முடிவின்படி மாவட்டங்களில்  ஆதரவு இயக்கங்களில் பங்கெடுப்போம் !

        பத்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்குபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தம் 07-09-2017 முதல் தமிழகத்தில் நடைபெறுகிறது.

  கோரிக்கைகள் :-

  1) 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமுல்படுத்த வேண்டும் !

  2) இடைக்கால நிவாரணமாக 20சதவீதம் வழங்க வேண்டும் !

  3) புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !

  4) தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உட்பட பல்வேறு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் !

            ஆகிய 4 முக்கிய  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 05ம் தேதி சென்னையில் பேரணி நடத்திய பின்  22.08.2017ல்   ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியும் அரசின் பாராமுகத்தால் கோரிக்கைகளின் தீர்வில் முன்னேற்றம் கிடைக்காததால் 2017 செடம்பர் 07 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்கின்றனர்.  

           வேலைநிறுத்தம் வெற்றிபெற வாழ்த்துவதோடு பாண்டி மாநிலச் செயற்குழு முடிவின்படி AIBDPA தோழர்கள் ஆதரவு இயக்கங்களில் பங்குபெறவும், மாவட்டச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு AIBDPA சங்கம் கேட்டுக்கொள்கிறது.

 • பாண்டி மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

  பாண்டியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

   

  1) புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

  2) 01-01-2017 முதல் பென்ஷன் மாற்றம் வழங்க வேண்டும்.

  3) 50 சதவீத IDAவை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்கப்படவேண்டும்.

  4) 01-10-2000 முதல் 31-07-2001க்கு இடையே ஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் அனாமலி உடனடியாக தீர்க்கப்பட வேணடும்.

  5) 78.2% IDA இணைப்பு நிர்ணயத்தில் Extra Increment வழங்கியது பென்ஷனுக்கு கணக்கிடப்பட வேண்டும். Extra Increment பென்ஷனுக்கு கணக்கீடு செய்து நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

  6) 01-01-2007 முதல் 09-06-2013 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன், கிராஜூவிட்டி, கம்யூடேஷன், Leave Encashment முதலியவற்றை 78.2% IDA நிர்ணயத்தில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

  7)  BSNL ஓய்வூதியருக்கு மருத்துவப்படி தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

  8) DOT ஓய்வூதியருக்கும் பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.

  9) ஓய்வூதியருக்கு வழங்கப்பட்ட இலவச இரவு அழைப்பு வசதி உத்தரவை உடனடியாக அமுல் படுத்தவேண்டும்.

  10) 3வது சம்பளக் கமிட்டியில் சம்பள மாற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனையான “Affodability Class” நீக்கப்பட வேண்டும்.

  11) BSNLஐ தனியார் மயமாக்கப்படும் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும்.

  12) மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், பொதுத்துறைகளை சீரழிக்கும் கொள்கைகளை எதிர்த்தும், ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசியைத்தடுக்கக் கோரியும் மத்திய தொழிற்சங்கங்கள் டெல்லியில் 2017 நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் நடத்தும் தார்ணாவில் தமிழ் மாநிலச் சங்கத் தோழர்கள் கலந்து கொள்வது.

  13) GST வரி விதிப்புசிறு தொழில்களையும், ஏழை மக்களையும் பாதிக்காத வகையில் திருத்தம் செய்து அமுலாக வேண்டும்.

  14) பணமதிப்பு குறைப்பு கொளகைகள் கைவிடப்பட வேண்டும்.

  15) 100 நாட்களுக்கும் மேலாக தங்களுடைய வாழ்வாதார பாதிப்பை தடுத்திட போராடிவரும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள்  உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

  16) எரிவாயு மானிய வெட்டை அறிவித்துள்ள மத்திய அரசு அதனை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.

  17) புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் செப்டம்பர் 7 முதல் நடத்துகின்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு   இயக்கங்கள் நடத்துவது

  உள்ளிட்ட 17 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 • பாண்டி மாநிலச் செயற்குழு காட்சிகள்.

  பாண்டி AIBDPA மாநிலச் செயற்குழு காட்சிகள்.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  சாதிஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலம் முதல் சென்னை வரை நடத்திய நடைபயணத்திலும் பின்னர் காவல்துறை கைதிலும் பங்குபெற்ற மாநிலதுணைத்தலைவர் தோழர். P.ராமசாமிக்கு பாராட்டு

  சாதிஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலம் முதல் சென்னை வரை நடத்திய நடைபயணத்திலும் பின்னர் காவல்துறை கைதிலும் பங்குபெற்ற மாவட்டச் செயலர் தோழர். P.ராமருக்கு பாராட்டு

  மாநிலச் செயற்குழுவை வாழ்த்தும் அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ்.

  மாநிலச் செயற்குழுவை வாழ்த்தும் அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத்

  பாண்டி மாநிலச் செயற்குழுவை சிறப்பாக நடத்திட அனைத்து வசதிகளையும் செய்திட்ட பாண்டி மாவட்டச் செயலர் தோழர். S. சக்திவேலுக்கு மாநிலச் செயலர் பாராட்டு

  மாநிலச்செற்குழுவை நிறைவு செய்து நன்றிஉரை கூறிய மாநில அமைப்புச் செயலர் தோழர். C. ஞானசேகரன்.