• மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு

   உற்சாகமாக நடைபெற்ற AIBDPA மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு.

           மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு 14.09.2017 அன்று மாவட்டத் தலைவர்தோழர். மகபூப் ஜான் தலைமையில் நடைபெற்றது. தோழர். ருத்ரகுமார் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர்  தோழர். S. ஆதீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.  

              மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் பாண்டியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவுகளையும் அதன் தீர்மானங்களையும் விளக்கினார். மேலும்மாவட்டச் சங்க விரிவாக்கம், நடைபெற்ற போராட்டங்கள், 78.2 சத பஞ்சப்படி நிலுவையில் உள்ள நிலவரங்கள், மருத்துவப்படி, இலவச இரவு தொலைபேசி அழைப்பு, இன்றைய அரசியல் சூழல், BSNLலின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை விளக்கி பேசினார். மாநில உதவித்தலைவர் தோழர். M. பெருமாள்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். M. செல்வராஜ் மற்றும் மாவட்ட உதவித்தலைவரும் திண்டுக்கல் பகுதி செயலருமான தோழர். ஜான்போர்ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

        மாவட்டச்செயற்குழுவில் மாவட்டச் செயலரின் உடல் நலம் கருதி பொறுப்புச் செயலராக தோழர். மேனுவல் பால்ராஜ் தேர்வு செய்வது, தேனி பகுதியில் கிளை அமைப்பது, உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திட உறுப்பினர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என ஆலோசனைகள் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

         திண்டுக்கல் பகுதி புதிய உறுப்பினராக இணைந்த 10 தோழர்கள் ஆயுள் சந்தாவை உடனடியாக வழங்கி இணைந்தது நிகழ்ச்சியில் உற்சாகமாய் அமைந்தது. கூட்டத்தின் நிறைவாக தோழர். மேனுவல் பால்ராஜ்   நன்றி கூறினார்.

      பின்னர் துணை டவர் கம்பேனி அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய கேபினட் முடிவை எதிர்த்து நடைபெற்ற BSNL ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மதுரைமாவட்ட AIBDPA சங்க தோழர்களும் கலந்து கொண்டனர். AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் கண்டன உரையாற்றினார்.