• 01.10.2017 முதல் IDA உயர்வு – 5.3%

  IDA உயர்வு

  01-10-2017 முதல் பஞ்சப்படி (IDA) 5.3 சதம் உயர்ந்து மொத்தம் 124.3 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 • கோவை மாவட்டச் சங்க பொதுக்குழு கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட ச்சங்க பொதுக்குழு கூட்டம்.

         AIBDPA கோவை மாவட்டச் சங்க பொதுக்குழு கூட்டம் 27.09.2017 அன்று மாவட்ட தலைவர் தோழர். K. சந்திரசேகரன்  தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட செயலாளர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

              மாநில உதவிச் செயலர் தோழர். N.குப்புசாமி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 26.08.2017ல் பாண்டிச்சேரியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள், மத்திய மாநில அரசுகளின் இன்றைய செயல்பாடுகள்  அதனால் பொதுமக்கள், ஓய்வூதியர்கள் படும் துன்பங்கள், அதற்காக மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திடும் தார்ணா, NCCPA அறைகூவல் இதில் நமது பங்களிப்பு என விரிவாக விளக்கி பேசினார்கள்.

      பென்சன்தாரர்கள் பிரச்சினையை தீர்க்க, டெல்லியில் 25.10.17 அன்று NCCPA சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும். அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் அனைவருக்கும் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சங்கம் நிதியுதவி வழங்கும். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 9,10&11 தேதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்திலும் நமது சங்கத்தோழர்கள் பங்களிக்க முடிவு செய்யப்பட்டது.

           மாநில உதவிச் செயலர் தோழர். K. பங்கஜவல்லி, மாநில அமைப்புச் செயலர் தோழர்.  L. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    78.2%பஞ்சப்படி இணைப்பு நிலுவை தொகை இன்னும் வராதவர்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நன்கொடை வழங்காதவர்கள் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

              200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில்  மாநிலச்சங்க சிறப்பு பிரதிநிதி   தோழர். லியோ பிராசிஸ் ஜோசப் அவர்கள் நன்றி கூறினார். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றி.