• முற்போக்கு எழுத்தாளர் தோழர். மேலாண்மை பொன்னுச்சாமி மறைவு

  முற்போக்கு எழுத்தாளர் தோழர். மேலாண்மை பொன்னுச்சாமி காலமானார்.

      சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோழர். மேலாண்மை பொன்னுச்சாமி காலமானார். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறோம்.

 • DOT செயலருடன் AIBDPA தலைவர்கள் சந்திப்பு

  ஓய்வூதிய உயர்வு கோரிக்கையினை  முன்வைத்து    DOT செயலருடன் AIBDPA தலைவர்கள் சந்திப்பு. 

        நமது AIBDPA ஆலோசகர் தோழர். V. A. N. நம்பூதிரி, பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ், அனைத்திந்திய பொருளாளர் தோழர். அரவிந்தாட்சன் நாயர் ஆகியோர் 25.10.2017 அன்று DOT செயலர் திருமதி. அருணா சுந்தரராஜுடன் சந்தித்து ஊதிய மாற்றம் 15சத உயர்வு IDA பேட்டனில் கிடைத்திடவும்  விரைந்து வழங்கிட மகஜர் வழங்கப்பட்டது. செயலரும் உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்வதாக உறுதி அளித்தார். வேறு எந்த ஓய்வூதிய சங்கங்களும் இது சம்பந்தமான நடவடிக்கையில் இறங்காத நிலையிலும் நமது மத்திய சங்கம் மகஜர் வழங்கி நடவடிக்கை எடுத்தது பாராட்டிற்குரியது.

            மேலும் சென்னை CCA அலுவலகத்தில் கூடுதல் ஆண்டு ஊதியம் வழங்கியதற்கு 78.2சத பஞ்சப்படி நிலுவை வழங்காததையும் உரிய நடவடிக்கை மூலம் விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்தனர். அதனையும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக DOT செயலர் உறுதி அளித்தார்.

   

 • வெற்றிகரமாக நடைபெற்ற NCCPA தார்ணாப் போராட்டம்

  டெல்லியில்   வெற்றிகரமாக நடைபெற்ற NCCPA தார்ணாப் போராட்டம்.

           நமது தோழர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்ற சக்திமிக்க தார்ணாப் போராட்டம் 25.10.2017ல் டெல்லியில் “மேகதூத்” அலுவலகம் முன்பு NCCPA அமைப்பால் நடத்தப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட  தார்ணாப் போராட்டத்தில் AIBDPA ஆலோசகர், NCCPA பேட்ரன் தோழர். V.A.N. நம்பூதிரி துவக்க உரை ஆற்றினார்.

     10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட தார்ணாவில் CITU பொதுச்செயலர் தோழர். தபன்சென் MP, AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தார்ணாவை விளக்கி உரையாற்றினர்.

       The Mass Dharna on 25-10-2017 called by NCCPA at Meghdoot Bhawan (CPMG Office), New Delhi reflected the anger and anguish of the pensioners against the anti-pensioner and anti-worker policies of the government. More than 1000 pensioners from all over the country, representing the affiliated organisations enthusiastically participated. 357 comrades of AIBDPA actively participated. (The quota given to AIBDPA was 300.)

  Com.V.A.N.Namboodiri, Patron, NCCPA and Advisor, AIBDPA inaugurated the Dharna with a powerful speech. Com.Shiv Gopal Mishra, Chairman, NCCPA delivered the presidential address. Com.Tapan Sen MP, General Secretary,CITU, Coms.K.K.N.Kutty, Secreatry General, NCCPA, M.S.Raja, Confederation, Swapan Chakraborty, Dy General Secretary, BSNLEU ,K.G.Jayaraj, General Secretary, AIBDPA, K.Raghavendran, General Secretary, AIPRPA, M.N.Reddy, General Secretary, Telangana All Pensioners & Retirees Association and a host of leaders addressed the Dharna.

  The Dharna was held as per the decision of the National Executive of NCCPA held at Nagpur on 19-08-2017 on the 10 point charter of demands including implementation of Option 1, Pension Revision of BSNL retirees with 15% fitment on IDA pattern, Fixed Medical Allowance of Rs.2000, Restoration of commutation after 10 years, Extend CGHS facilities to all central government pensioners, Grant statutory defined benefit pension to those recruited after 01-01-2004 etc.

  After the Dharna was concluded at 3 PM, a delegation of leaders met the Chief Post Master General and handed over a memorandum to the Prime Minister for settlement of the demands.

  CHQ heartily congratulates all the AIBDPA comrades who have come from almost all circles to make the Dharna historic.

 • சென்னை மாவட்ட AIBDPA அமைப்பு தின கூட்டம்.

  சென்னையில் உற்சாகமாய் நடைபெற்ற AIBDPA மாவட்ட அமைப்பு தினக் கூட்டம்.

   

           AIBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு 25.10.2017 அன்று சென்னையில் உள்ள சங்க கட்டிடத்தில் வைத்து சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.

                   மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம், தோழர்கள் K. சின்னதுரை, A.V. வெங்கடேசன், V. சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.

       நிறைவாக மாநில செயலாளர் தோழர். C. K. நரசிம்மன் சங்க அமைப்புதின சிறப்புகளையும், மத்திய மாநிலச் சங்கங்களின் சிறப்பான போராட்டங்களால் பெற்ற சலுகைகளையும் இன்றைய மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் படும் துயரங்களையும் குறிப்பாக ஓய்வூதியர்களின் சிரமங்களையும் தனது   சிறப்புரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

         ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து BSNL ஊழியர் & அதிகாரிகள் சங்கங்கள் நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டம் வரும் 15.11.2017 நடைபெற இருப்பதால் அதில் நமது தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்வது என்றும், CCA அலுவலகத்தில் 78.2சத பஞ்சப்படி இணைப்பு நிலுவைத்தொகை பணியில் எந்தவித கூடுதல் ஊதியமும்பெறாமல் இலவசமாக பணிசெய்த நமது சங்கத் தோழர்கள். பத்மாவதி, N. சாய்ராம் ஆகியோரை பாராட்டியதோடு நினைவுப் பரிசு வழங்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    

   

 • தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு உதயம்

  தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டம்.

             தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டம் 23.10.2017 அன்று தோழர். அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலர் தோழர். N. குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். 

       தர்மபுரி AIBDPA மாவட்ட அமைப்பை துவக்கி வைத்து மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார். BSNLEU தர்மபுரி மாவட்டச் செயலர் தோழர். கிருஷ்ணன், கிளைச்செயலர் தோழர். P. செல்லமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

             கூட்ட முடிவில் தர்மபுரி AIBDPA மாவட்ட அமைப்பு மாநாட்டை 2017 டிசம்பர் இறுதிக்குள் நடத்துவதென்றும் அதற்கான கன்வீனராக தோழர். அழகிரிசாமி, தர்மபுரி பகுதிக்கு தோழர். டேவிட்டும், ஹரூர் பகுதிக்கு தோழர். செல்வராஜும் கன்வீனர்களாக இருந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

               தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திய தர்மபுரி தோழர்களுக்கு சபாஷ் சொல்லி பாராட்டுகிறது தமிழ் மாநிலச்சங்கம்.

 • ஈரோட்டில் AIBDPA அமைப்பு தின கருத்தரங்கம்

  ஈரோட்டில் உற்சாகமாய் நடைபெற்ற AIBDPA அமைப்பு தின கருத்தரங்கம்.

             AIBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு 22.10.2017 அன்று ஈரோட்டில் உள்ள சர்வேயர் சங்க கட்டிடத்தில் வைத்து சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் சங்கக்கொடியை தோழர்களின் உற்சாக கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தார்.

   .  இந்த சிறப்பு கருத்தரங்கில் மாநில செயலாளர் தோழர். C. K.நரசிம்மன் அவர்களும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில செயலாளர் தோழர். செ. நடேசன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

       AIBDPA மாநில துணை செயலாளர்  தோழர். N. குப்புசாமி ,  மாநில அமைப்பு செயலாளர் தோழர். N
  சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

       100 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்திய ஈரோடு மாவட்டச்சங்கத்தை மாநிலச்சங்கம் பாராட்டுகிறது.

 • தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்ற AIBDPA அமைப்புதினம்

  தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்ற AIBDPA அமைப்புதின     கொண்டாட்டம்.

  புதுச்சேரியில் கருத்தரங்கம்

  புதுச்சேரியில் மாவட்டச் செயலர் தோழர். சக்திவேல் கொடியேற்றினார்.

  கடலூர்கருத்தரங்கம்

  வேலூர் கொடியேற்றம்.

 • தூத்துக்குடியில் AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம்

  தூத்துக்குடியில்   உற்சாகமாய் நடைபெற்ற    AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம்.

     21-10-2017 அன்று தூத்துக்குடியில் மாவட்டத்தலைவர் தோழர்.T.சுப்பிரமணியன் தலைமையில் 8வது AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் விண்ணதிரும் கோஷங்களிடையே சங்கக்கொடியினை ஏற்றி வைத்தார்.

  Jpeg

       மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை துவக்கி வைத்து மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார்.

  Jpeg

       மதவெறி அரசியலும் சமூக கடமைகளும்” என்ற தலைப்பில் CITU மாநிலச்செயலர் தோழர். R. ரசல் கருத்துரை வழங்கினார்.

  Jpeg

       “உலகமயமாக்கலும் ஓய்வூதியர் பிரச்சனைகளும்” என்ற தலைப்பில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டச்செயலர் தோழர். முத்துகுமாரசாமி கருத்துரை வழங்கினார்.

       விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி, நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துச்சாமி, மாநில துணைத்தலைவர் தோழர். S. தாமஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

         தூத்துக்குடி, நெல்லை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்ட கருத்தரங்கின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறி நிறைவுசெய்தார். 

             கருத்தரங்கை சிறப்பாக நடத்திய தூத்துக்குடி மாவட்டச்சங்கத்தை மாநிலச்சங்கம் சபாஷ் சொல்லி  பாராட்டுகிறது.

 • கருத்தரங்கம் வெற்றிபெற AIBDPA வாழ்த்துகிறது.

   BSNLEU தமிழ்மாநிலச்சங்கம் நடத்தும் மகத்தான நவம்பர்புரட்சியின் நூற்றாண்டுவிழா கருத்தரங்கம் வெற்றிபெற AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது !…

   

 • ஈரோட்டில் கருத்தரங்கம் 22.10.2017

  AIBDPA அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் 22.10.2017.

  நாள் : 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை காலை10மணி

  இடம் : சர்வேயர் சங்க அலுவலக கட்டிடம், தாலுகா அலுவலக வளாகம், பன்னீர் செல்வம் பார்க், ஈரோடு.

  தலைமை : தோழர்.  A.சிவஞானம், மாவட்டத் தலைவர்.

  வரவேற்புரை : தோழர். P. சின்னசாமி, மாவட்டச் செயலர்.

  சிறப்புரை :

  தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA, சென்னை

  பென்ஷன் இன்றைய நிலை, நமது நிலைபாடு”

  தோழர்.செ. நடேசன், முன்னாள் மாநிலச்செயலர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

  “பென்சன்தாரர்கள் எதிர்நோக்கும் சவால்கள்”

  வாழ்த்துரை :

  தோழர். N. குப்புச்சாமி மாநிலச்   உதவிச் செயலர், AIBDPA.

  தோழர். N. சின்னையன், மாநில அமைப்புச் செயலர், AIBDPA