• அக்டோபர் 21 AIBDPA சங்க அமைப்புதினம் – சிறப்பாக கொண்டாடுவோம் !

    அக்டோபர் 21 AIBDPA சங்க அமைப்புதினம் -சிறப்பாக கொண்டாடுவோம் !

         AIBDPA சங்க அமைப்பு தினம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

            நமது சங்கம் உருவாகி அக்டோபர் 21ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பிரச்சனைகளின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்கள் சங்கங்களுடன் இணைந்தும் தனித்தும் போராடி பல சாதனைகளை கடந்த எட்டு ஆண்டுகளில் சாதித்துள்ளது. குறிப்பாக

    78.2 சத பஞ்சப்படி இணைப்பு,

    60:40 ரத்து செய்தல்,

    பென்ஷன் மாற்றம்,

    மெடிகல் அலவன்ஸ்,

    இரவுநேர இலவச தொலைபேசி  அழைப்புகள் ,

    01.01.2016 முதல் கிராஜூவிட்டி என பல வற்றை குறிப்பிடலாம் …..

    நமது போராட்டம் தொடர வேண்டியுள்ளது….. 01.01.2017 முதல் ஓய்வூதியமாற்றம் என பல கோரிக்கைகளுக்காக ! இந்த அடிப்படையில் நமது ஸ்தாபனம் உருவான தினத்தை சிறப்பாக கொண்டாடிடும் விதமாக….

       கொடிக்கம்பம் உள்ள இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கிடவேண்டும்.

            பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்தி சங்க சாதனைகளை விளக்குவதோடு எதிர்கால கடமைகளை வலியுறுத்த வேண்டும். 

          தூத்துக்குடி, புதுச்சேரி, ஈரோடு மாவட்டங்கள் அமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் நடத்திட திட்டமிட்டுள்ளன.

       AIBDPA சங்கம்  சிறப்பான செயல்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்ட தியாகிகளுக்கும் அனைத்து தோழர்களுக்கும் அமைப்பு தின வாழ்த்துக்கள் !

  • புதுச்சேரியில் கருத்தரங்கம் 21.10.2017ல்

    AIBDPA அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் பாண்டியில் 21.10.2017.

  • தூத்துக்குடியில் கருத்தரங்கம்

    AIBDPA அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் தூத்துக்குடியில் 21.10.2017.

  • தீபாவளி வாழ்த்துக்கள் !

    அனைவருக்கும் இனிய    தீபாவளி வாழ்த்துக்கள் !

  • BSNLல் உள்ள ALL UNIONS &ASSNS OF BSNL இணைந்த போராட்டம்

     All Unions and Associations of BSNL புதிய கூட்டமைப்பு ஒன்றுபட்டு போராட முடிவு.

                BSNL­ல் உள்ள BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, SEVA BSNL, BSNLOA, ATM மற்றும் TOBSNL சங்கங்களின் இணைந்த கூட்டம் 4.10.2017 அன்று டெல்லியில் நடைபெற்றது. வரும் காலங்களில் BSNLல் பொதுவான கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்படும் இயக்கங்கள் All Unions and Associations of BSNL என்ற பெயரில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோரிக்கைகள்:-

    # 01.01.2017 முதல் ஊதிய மாற்றம்.

    # இரண்டாவது ஊதிய குழுவில் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும்,

    # நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பெற்றிடவும்,

    # துணை டவர் கம்பேனி அமைக்கும் திட்டம் கைவிடவும்

    போராட்ட அறைகூவல்:-

    16-10-2017 கார்போரேட் அலுவலகம், மாநில, மாவட்ட மட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

    15-11-2017 அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    16-11-2017 கார்போரேட் அலுவலகம், மாநில, மாவட்ட அலுவலகம் முன்பு மனிதச்சங்கிலி போராட்டம்.

    12-12-2017&13-12-2017 இரண்டுநாள் தொடர் வேலைநிறுத்தம்.

       பிரச்சனைகளின் தீர்வில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்வது என போராட்ட திட்டமாக அறிவிக்கப்பட்டதோடு அடுத்த கூட்டம் 23.10.2017ல் BSNLMS அலுவலகத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

          மேற்கண்ட போராட்டங்கள்வெற்றி பெற நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து இயக்கங்களிலும் AIBDPA தோழர்கள் ஆதரவாக கலந்து கொள்ள வேண்டும். மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி இயக்கங்கள் வெற்றிபெற திட்டமிட வேண்டும் என தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுகிறது.

  • தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்

    தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்

     

         தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம் 05.10.2017 அன்று கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அஞ்சலிஉரை நிகழ்த்தினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

         மாவட்டச் செயலர் தோழர். P. ராமர்மாவட்டச் செயல்பாடுகள், கடந்த கூட்டத்திற்கு பின் நடைபெற்ற மத்தியச் சங்க அறைகூவல் போராட்டங்கள், BSNL அதிகாரிகள் ஊழியர் சங்க போராட்டங்களில் கலந்து கொண்ட விபரங்களையும், பாண்டி மாநிலச் செயற்குழு முடிவுகள், மாவட்ட மாநில(மதுரை) அளவில் நடைபெற்ற அதாலத் விபரங்கள், 21.10.2017ல்நடைபெற உள்ள AIBDPA அமைப்பு தின கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடத்துவது என்பது உள்ளிட்ட விபரங்களையும், இன்றைய நடைமுறை அரசியல் பிரச்சனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

           பின்னர் அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 78.2{1c5a0a54b351b350fe1a721d4c0d403d3cf36a808bcd6634754d06ca38aacf8d} சத நிலுவைத்தொகையில் உள்ள பிரச்சனைகளையும் நமது சங்கம் எடுத்த நடவடிக்கையின் மூலம் கிடைத்த மருத்துவப்படி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பு என போராட்டங்களின் வெற்றியை எடுத்துரைத்தார். மேலும் ஓய்வூதிய உயர்வு பெற போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். பணமதிப்பு இழப்பு, கால்நடை பராமரிப்பு வரன்முறைச் சட்டம் 2017, நீட் தேர்வு, GSTவரி விதிப்பு பாதிப்பு இவற்றால் தொழில்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்புகளையும் புள்ளி விபரங்களோடு விளக்கிப் பேசினார். இன்றைய அரசியல் நடைமுறையில் மக்கள் படும் துன்பங்களையும் பொருளாதார இழப்புகளையும் விளக்கி கூறினார்.

      25 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிய உறுப்பினராக தோழர். C.மீனாக்ஷி சுந்தரம் ஆயுள் சந்தா வழங்கினார். நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். K.சுப்பையா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

  • சிறப்பாக நடைபெற்ற விருதுநகர் கருத்தரங்கம்

    சிறப்பாக நடைபெற்ற விருதுநகர் மாவட்ட பேரவைக் கூட்டம் & கருத்தரங்கம்.

    Jpeg

    Jpeg

    Jpeg

    Jpeg

           AIBDPA விருதுநகர் மாவட்ட பேரவைக் கூட்டம் மற்றும் “உலகமயமும் பென்ஷனர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்” என்ற கருத்தரங்கமும் 07.10.2017அன்று விருதுநகர் MRV நினைவரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர்.S. முருகேசன் தலைமையில் துவங்கியது. மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். L.சங்கையா அஞ்சலிஉரை நிகழ்த்தினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. புளுகாண்டி வரவேற்புரை ஆற்றினார். AIBDPA மாநில துணைத்தலைவர் தோழர்.M. பெருமாள்சாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர். V.குருசாமி, தூத்துக்குடி AIBDPA மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

              AIBDPA தமிழ்நாடு மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் பேரவைக்கூட்டத்தை துவக்கிவைத்து துவக்க உரை ஆற்றினார். தனது துவக்க உரையில் இன்றைய அரசியல் நிலையையும் மத்திய மாநில சங்கச் செயல்பாடுகளையும் விளக்கினார். 78.2 சத IDA நிலுவைத்தொகை, மெடிகல் அலவன்ஸ், தலமட்ட பிரச்சனைகள் பற்றி பேசினார்.

                  விருதுநகர் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி கருத்தரங்கத்தை துவக்கிவைத்தார். மதுரை மண்டல LIC ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் தோழர். E. M. ஜோசப் “உலகமயமும் பென்ஷனர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கத்தினை மாவட்டமைப்புச் செயலர் தோழர்.K. மதினா நன்றி கூறி நிறைவுசெய்தார்.

  • தூத்துக்குடியில் சர்வதேச மூத்த குடிமக்கள் /பென்ஷனர் உரிமை பாதுகாப்பு தின கருத்தரங்கம்

     தூத்துக்குடியில் உற்சாகமாய் நடைபெற்ற சர்வதேச மூத்த குடிமக்கள் /பென்ஷனர் உரிமை பாதுகாப்பு தின கருத்தரங்கம் . 

    Jpeg

    Jpeg

    சர்வதேச மூத்த குடிமக்கள் /பென்ஷனர் உரிமை பாதுகாப்பு தின கருத்தரங்கம் இன்று 05.10.2017 மாலை 0530 மணி அளவில் தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து கூட்டமைப்பு மாட்டத்தலைவர் தோழர்.D. திருத்துவராஜ், TNEPWO தலைமையில் நடைபெற்றது.வரவேற்புரை தோழர். இல. ராமமூர்த்தி TNGPA. தோழர்.S. கருணாகரன் TNGPA, தோழர். M.ஜெயபாண்டியன், TNEPWO முன்னிலை வகித்தனர். தோழர். M.A.H. முத்தையா, TNRTA வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரையாக தோழர். ஆறுமுகம், மாநிலச் செயலர், TNGPA கருத்தரங்கத்தை விளக்கி விரிவாக பேசினார்.கூட்ட முடிவில் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

    ஈரோட்டில்  சர்வதேச மூத்த குடிமக்கள் /பென்ஷனர் உரிமை பாதுகாப்பு தின ஆர்ப்பாட்டம்.

     இன்று 5.10.17. ஈரோட்டில் ஜவான் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி. ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது. … சர்வதேச தொழிற் சங்க. அமைப்பு 1.10.2017 அன்று ஓய்வூதியர் உரிமைக்கான சர்வதேச தினம் அனுசரிக்க அறைகூவல் விடுத்து இருந்தது. அதை ஒட்டி ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்து மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அஞ்சல் ஓய்வு உழியர்கள், அகில இந்திய BSNL. மற்றும் DOT ஒய்வுதியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து பகுதி பென்சன்தாரர்கள் சங்கங்கள் சார்பில் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். நமது AIBDPA ஈரோடு மாவட்ட சங்கம் சார்பில் 42 தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • உற்சாகமாய் நடைபெற்ற சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமைபாதுகாப்பு தினம் !

     தமிழகத்தில் உற்சாகமாய் நடைபெற்ற சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமைபாதுகாப்பு தின இயக்கங்கள்  !

                உலக மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு 2017ம் ஆண்டின் உலக முதியோர் தினத்தை உலகம் முழுவதும் ஓய்வூதியர் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என சர்வதேச தொழிற்சங்க அமைப்பு விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம் எங்கும் அனைத்துதுறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நடத்திய இயக்கங்களில் AIBDPA சங்க தோழர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட  அனைவரையும் மாநிலச்சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

    வேலூர் மாவட்டம்

    கோவை மாவட்டம்

    விருதுநகர் மாவட்டம்

    நெல்லை மாவட்டம்

    கடலூர் மாவட்டம்

     

  • சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமைபாதுகாப்பு தினம் !

    சர்வதேச மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் உரிமைபாதுகாப்பு தினம் !