• கருத்தரங்கம் வெற்றிபெற AIBDPA வாழ்த்துகிறது.

   BSNLEU தமிழ்மாநிலச்சங்கம் நடத்தும் மகத்தான நவம்பர்புரட்சியின் நூற்றாண்டுவிழா கருத்தரங்கம் வெற்றிபெற AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது !…

   

 • ஈரோட்டில் கருத்தரங்கம் 22.10.2017

  AIBDPA அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் 22.10.2017.

  நாள் : 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை காலை10மணி

  இடம் : சர்வேயர் சங்க அலுவலக கட்டிடம், தாலுகா அலுவலக வளாகம், பன்னீர் செல்வம் பார்க், ஈரோடு.

  தலைமை : தோழர்.  A.சிவஞானம், மாவட்டத் தலைவர்.

  வரவேற்புரை : தோழர். P. சின்னசாமி, மாவட்டச் செயலர்.

  சிறப்புரை :

  தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA, சென்னை

  பென்ஷன் இன்றைய நிலை, நமது நிலைபாடு”

  தோழர்.செ. நடேசன், முன்னாள் மாநிலச்செயலர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

  “பென்சன்தாரர்கள் எதிர்நோக்கும் சவால்கள்”

  வாழ்த்துரை :

  தோழர். N. குப்புச்சாமி மாநிலச்   உதவிச் செயலர், AIBDPA.

  தோழர். N. சின்னையன், மாநில அமைப்புச் செயலர், AIBDPA

   

   

 • அக்டோபர் 21 AIBDPA சங்க அமைப்புதினம் – சிறப்பாக கொண்டாடுவோம் !

  அக்டோபர் 21 AIBDPA சங்க அமைப்புதினம் -சிறப்பாக கொண்டாடுவோம் !

       AIBDPA சங்க அமைப்பு தினம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

          நமது சங்கம் உருவாகி அக்டோபர் 21ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பிரச்சனைகளின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்கள் சங்கங்களுடன் இணைந்தும் தனித்தும் போராடி பல சாதனைகளை கடந்த எட்டு ஆண்டுகளில் சாதித்துள்ளது. குறிப்பாக

  78.2 சத பஞ்சப்படி இணைப்பு,

  60:40 ரத்து செய்தல்,

  பென்ஷன் மாற்றம்,

  மெடிகல் அலவன்ஸ்,

  இரவுநேர இலவச தொலைபேசி  அழைப்புகள் ,

  01.01.2016 முதல் கிராஜூவிட்டி என பல வற்றை குறிப்பிடலாம் …..

  நமது போராட்டம் தொடர வேண்டியுள்ளது….. 01.01.2017 முதல் ஓய்வூதியமாற்றம் என பல கோரிக்கைகளுக்காக ! இந்த அடிப்படையில் நமது ஸ்தாபனம் உருவான தினத்தை சிறப்பாக கொண்டாடிடும் விதமாக….

     கொடிக்கம்பம் உள்ள இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கிடவேண்டும்.

          பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்தி சங்க சாதனைகளை விளக்குவதோடு எதிர்கால கடமைகளை வலியுறுத்த வேண்டும். 

        தூத்துக்குடி, புதுச்சேரி, ஈரோடு மாவட்டங்கள் அமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் நடத்திட திட்டமிட்டுள்ளன.

     AIBDPA சங்கம்  சிறப்பான செயல்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்ட தியாகிகளுக்கும் அனைத்து தோழர்களுக்கும் அமைப்பு தின வாழ்த்துக்கள் !

 • புதுச்சேரியில் கருத்தரங்கம் 21.10.2017ல்

  AIBDPA அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் பாண்டியில் 21.10.2017.