• தூத்துக்குடியில் AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம்

  தூத்துக்குடியில்   உற்சாகமாய் நடைபெற்ற    AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம்.

     21-10-2017 அன்று தூத்துக்குடியில் மாவட்டத்தலைவர் தோழர்.T.சுப்பிரமணியன் தலைமையில் 8வது AIBDPA அமைப்புதின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் விண்ணதிரும் கோஷங்களிடையே சங்கக்கொடியினை ஏற்றி வைத்தார்.

  Jpeg

       மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை துவக்கி வைத்து மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார்.

  Jpeg

       மதவெறி அரசியலும் சமூக கடமைகளும்” என்ற தலைப்பில் CITU மாநிலச்செயலர் தோழர். R. ரசல் கருத்துரை வழங்கினார்.

  Jpeg

       “உலகமயமாக்கலும் ஓய்வூதியர் பிரச்சனைகளும்” என்ற தலைப்பில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டச்செயலர் தோழர். முத்துகுமாரசாமி கருத்துரை வழங்கினார்.

       விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி, நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துச்சாமி, மாநில துணைத்தலைவர் தோழர். S. தாமஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

         தூத்துக்குடி, நெல்லை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்ட கருத்தரங்கின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறி நிறைவுசெய்தார். 

             கருத்தரங்கை சிறப்பாக நடத்திய தூத்துக்குடி மாவட்டச்சங்கத்தை மாநிலச்சங்கம் சபாஷ் சொல்லி  பாராட்டுகிறது.